தன் கேரியருக்கு உதவிய தயாரிப்பாளரின் 100வது படத்தில் விஜய்

தன் கேரியருக்கு உதவிய தயாரிப்பாளரின் 100வது படத்தில் விஜய்

vijay rb choudaryபல திறமையான கலைஞர்களை தன் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சினிமாவுலகில் அறிமுகப்படுத்தியவர் ஆர்பி. சௌத்ரி.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 95க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார் இவர்.

ஆரம்ப கால படங்களில் ஆக்சன் நாயகனாக வலம் வந்த விஜய்யை காதல் நாயகனாகவே மாற்றியதே இந்த நிறுவனம்தான்.

விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் உள்ளிட்ட பல படங்களின் மூலம் இது சாத்தியமானது.

அண்மையில் கூட மோகன்லால், விஜய் இணைந்து நடித்த ஜில்லா படத்தை தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் தன் 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இதில் விஜய் நடிக்க வேண்டும் என விரும்பி, அவரை நாட, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

கடந்த வருடம் வெளியான விஜய்யின் மெர்சல் படம் கூட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay may act in Super Good films in 100th movie

முதன்முறையாக கமல்-ஷங்கர் கூட்டணியில் நயன்தாரா

முதன்முறையாக கமல்-ஷங்கர் கூட்டணியில் நயன்தாரா

Nayanthara to pair with Kamal for Indian 2 Shankar directorialரஜினி, விஜய், அஜித் முதல் இன்றைய இளம் ஹீரோக்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரை ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா.

ஆனால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுடன் இதுவரை நடிக்கவில்லை.

இவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களை கடந்து விட்ட போதிலும் இந்த ஜோடி இணையாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் முதன்முறையாக கமலுடன் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு புரட்சிக்கரமான வேடத்திற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாம்.

நயன்தாராவும் இந்த கூட்டணிக்கு சம்மதிப்பார் என்றே நம்பலாம்.

Nayanthara to pair with Kamal for Indian 2 Shankar directorial

விவேகம் படத்துடன் கனெக்ட்டானது கலகலப்பு-2

விவேகம் படத்துடன் கனெக்ட்டானது கலகலப்பு-2

Kalakalappu 2 movie release and trade news updatesசுந்தர்.சி.இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர் நடித்துள்ள படம் ‘கலகலப்பு-2’.

குஷ்புவின் அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகிறது.

தற்போது இதன் வியாபாரம் களை கட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை சாய் என்பவரின் ‘வால்மார்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

இதே நிறுவனம்தான் அஜித்தின் ‘விவேகம்’ படத்தைசெங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Kalakalappu 2 movie release and trade news updates

மீண்டும் ரீமேக் படம் இயக்கும் அஹமத்; ஜெயம் ரவி நடிக்கிறார்

மீண்டும் ரீமேக் படம் இயக்கும் அஹமத்; ஜெயம் ரவி நடிக்கிறார்

Ahamed teamsup with Jayam Ravi for Baby remake in Tamil

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்கள் இயக்கியவர் அஹமத்.

இதில் உதயநிதி நடித்த மனிதன் படம் அக்‌ஷய்குமார் நடித்து ஹிந்தியில் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீ-மேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் இந்தியில் இருந்து தமிழுக்கு கொண்டு வருகிறார்.

அஹமத் அடுத்து இயக்கவுள்ள படம் அக்‌ஷய்குமார் சூப்பர் ஹிட்டான பேபி படம்.

இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, ‘பாகமதி’ பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Ahamed teamsup with Jayam Ravi for Baby remake in Tamil

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ரிலீஸ் அனைவருக்கும் நல்லநாளாக அமையும் : வி சத்யமூர்த்தி

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ரிலீஸ் அனைவருக்கும் நல்லநாளாக அமையும் : வி சத்யமூர்த்தி

vijay sethupathi and distributor sathya murthyவிஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி சத்யமூர்த்தி

தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்’.

இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார்.

“இது வரை நான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது.

வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.

ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தை சதீஷ் தயாரித்துள்ளார். நாயகியாக காயத்ரி, நிஹாரிகா நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் தயாரித்துள்ளார்.

மீண்டும் தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்..? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்

மீண்டும் தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்..? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்

2 point 0 stillsலைகா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக ரூ. 400 கோடியில் தயாராகியுள்ள படம் 2.0.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி 26ஆம் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு, பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது சிஜி (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் இந்த பணிகள் மேலும் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

மே அல்லது ஜுன், ஜுலை வரை கூட தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

More Articles
Follows