தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் 3 & வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.
சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த தற்போது அந்த நகைகளை திருடிய ஈஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தன் தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு அந்த நகைகளை ஐஸ்வர்யா அணிந்திருந்ததாகவும் அதன் பின்னர் அதில் லாக்கரில் வைத்து விட்டதாகவும் அந்த சாவி வைத்த இடம் தன் வீட்டில் பணிபுரியும் பணியாளருக்கு தெரியும் எனஙும் தெரிவித்திருந்தார்.
இதனை வைத்து அங்கு பணிபுரிந்த பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த சில வருடங்களாக
அந்த வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி என்ற பெண் தான் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அவர் வாங்கியது தெரிய வந்துள்ளது.
திருடிய நகைகளை விற்று அந்தப் பணத்தை தனது கணவர் வங்கியில் போட்டு உள்ளார்.. அதன் பின்னர் தான் அவர் ஒரு கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியது தெரிய வந்துள்ளது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவர் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் இருந்து வேலையை விட்டு விட்டதாகவும் தெரிய வந்தது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைகளை திருடியது அந்தப் பெண் தான் எனவும் திருடிய 60 சவரன் நகையில் தற்போது 20 சவரன் நகைகள் மட்டுமே உள்ளது எனவும் கூறப்படுகிறது.
Aishwarya Rajinikanth jewel robbery. Police arrested maid