‘இன்றைய அரசியல் சூழ்நிலை ரஜினிக்கு சாதகம்தான்…’ திருமாவளவன்

‘இன்றைய அரசியல் சூழ்நிலை ரஜினிக்கு சாதகம்தான்…’ திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini thirumavalavanரஜினிகாந்த், தன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதிலிருந்து, பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் நிலவி வருகிறது.

தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார். இல்லை அவர் பிஜேபியுடன் இணைவார் என பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மக்களிடையே உள்ளது.

இந்நிலையில் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து திருமாவளவன் கூறியதாவது:

‘தமிழக அரசு ஓராண்டு காலமாக செயல்படவே இல்லை.

இரு அணிகளாக பிரிந்து கொண்டு, மோதி கொண்டு வருகின்றது.

ஆனால் இரண்டு பிரிவுகளும் பாஜக-வின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தமிழக அரசை அவர்களால் தன்னிச்சையாக நடத்த முடியவில்லை. என்றார்.

மேலும் அவர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பேசியதாவது…

‘இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது அவருக்கு சாதகமே.

ஆனால், பிஜேபி வட்டத்திற்குள் சிக்காமல் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

தற்போது வைகோ ஜாமீனில் வந்துவிட்டார் வைகோ. அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்” என்றார்.

Current tamilnadu politics situation is clear route of Rajini says Thirumavalavan

சூர்யாவுக்கு பிடிவாரண்ட்; களமிறங்கிய தல-தளபதி ரசிகர்கள்

சூர்யாவுக்கு பிடிவாரண்ட்; களமிறங்கிய தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகடந்த 2009 ம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுப்படும் நடிகைகள் என ஒரு நாளிதழ் செய்தியை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

இதில் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விவேக், ஸ்ரீ பிரியா, அருண் விஜய், விஜயகுமார், சேரன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது.

இதனையடுத்து இந்த 8 பேர் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்டை பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.

இந்த விஷயம் இணையத்தளங்களில் காட்டுத் தீயாக பரவியது.

இதனையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி, #WeSupportSuriya என ட்ரண்ட் செய்து ஆதரவளித்து வருகின்றனர்.

Non bailable arrest warrant for Tamil Actors. Ajith and Vijay fans support Suriya

அன்றைய கண்டன கூட்டத்தில் சூர்யா பேசியது இதுதான்…

suriya speech

‘பிஜேபியில் ரஜினி இணைந்தால் பலம் கூடும்…’ தமிழிசை சௌந்தர்ராஜன்

‘பிஜேபியில் ரஜினி இணைந்தால் பலம் கூடும்…’ தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Tamilisaiரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.

ஆனால் பிஜேபி கட்சி மட்டும் ரஜினிக்கு வெளிப்படையாகவே தன் ஆதரவை தெரிவித்து வருகிறது.

மேலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது…

ரஜினிகாந்த் பிஜேபியில் இணைந்தால் கூடுதல் பலம் கிடைக்கும். தனிக் கட்சி தொடங்கினால் அவரால் பிரகாசிக்க முடியாது” என்றார்.

நடிகர் பாலாஜி மீது மனைவி போலீசில் புகார்

நடிகர் பாலாஜி மீது மனைவி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Balajiதமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளவர் நடிகர் பாலாஜி.

இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு போர்ஷிகா என்ற ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரது மனைவி, நித்யா நேற்று மாதவரம் போலீசில் கணவர் மீது திடீரென புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில் கணவர் தன்னை கொடுமை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விஸ்வரூபம்2 பாடல் வரிகளை வெளியிடும் கமல்

விஸ்வரூபம்2 பாடல் வரிகளை வெளியிடும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasaanகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம்2.

இதன் முதல் பாகம் கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியானது.

இந்தாண்டில் இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட உள்ளார்.

இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விரைவில் தான் எழுதியுள்ள இப்பட பாடல் வரிகளை வெளியிட உள்ளதாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Recorded last song in VR2. Hindi Lyrics by Prasoon Joshi Tamizh lyrics by me. Tune is infectious to say the least. Telugu to record soon.

‘ரஜினி வரக்கூடாது; தமிழ்நாட்டை நானே ஆள்வேன்..’ சீறிய சீமான்

‘ரஜினி வரக்கூடாது; தமிழ்நாட்டை நானே ஆள்வேன்..’ சீறிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Seemanரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழகத்தில் பெருமளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ரஜினியின் ஆதரவளித்து வருகின்றன.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தொடர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது…

தமிழ்நாட்டில் வாழ்ந்தால் ரஜினி தமிழராகிவிட முடியுமா?

மராட்டியத்தில் நாம் யாரேனும் வாழ்ந்தால் மராட்டியர் ஆகிட முடியுமா? என்ன பேசுறாரு ரஜினி?

ஆங்கிலேயர் இங்க வாழ்ந்தாங்க. இந்தியர்கள் ஆகிட்டாங்களா.?

என்னய்யா ஜனநாயகம். இது என் நாடு. என் வீடு. வீட்ல என்ன பிரச்சினை என்பது எனக்குதான் தெரியும்.

இவருக்கு என் முன்னோர் பத்தி என்ன தெரியும். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.

அவரு நடிக்கட்டும். கோடி கோடியாய் சம்பாதிக்கட்டும்.

இது என் நாடு. இந்த நாட்டை நான்தான் ஆளுவேன்.” என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

More Articles
Follows