கொலவெறி கொண்டாட்டத்தில் அனிருத்

கொலவெறி கொண்டாட்டத்தில் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and anirudhதனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி, முதன்முறையாக இயக்கிய படம் 3.

இதில் தனுஷ் உடன் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், பிரபு நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்னரே, இதில் இடம் பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலகளவில் ஹிட்டடித்தது.

தமிழ் மொழியே தெரியாத நாடுகளிலும் இப்பாடல் பிரபலமாகியது.

இப்பாடலை தற்போது வரை 11 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர்.

இப்பாடல் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே, அனிருத் உள்ளிட்டோர் இப்பாடலை இன்று கொண்டாடி வருகின்றனர்.

ராஜீவ்மேனன்-ஏஆர்.ரஹ்மான்-ஜிவி பிரகாஷ் இணையும் படத்தலைப்பு

ராஜீவ்மேனன்-ஏஆர்.ரஹ்மான்-ஜிவி பிரகாஷ் இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarvam Thaala Mayamஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவிருக்கிறார்.

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற உள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்திற்கு சர்வம் தாளமயம் எனப் பெயரிட்டுள்ளனர்.

தனுஷுக்காக காத்திருக்கும் கௌதமி..?

தனுஷுக்காக காத்திருக்கும் கௌதமி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and gautamiகடந்த 13 ஆண்டுகளாக Living Together (சேர்ந்து வாழுதல்) முறையில் கமல்ஹாசனுடன் வாழ்ந்து வந்தார் கௌதமி.

மேலும் கமல் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணி புரிந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, தனது மகளின் எதிர்கால நன்மைக்காக கமலை பிரிகிறேன் என அறிக்கை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில் கௌதமி தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதற்காக அவர் தனுஷிடம் இதுகுறித்து பேசியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

3 படத்தில் ஸ்ருதிஹாசனும், ஷமிதாப் படத்தில் அக்ஷராஹாசனும் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘கொடி’ பறந்துடுச்சி… ‘பைரவா’ சிக்குவாரா.?

‘கொடி’ பறந்துடுச்சி… ‘பைரவா’ சிக்குவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijay keerthy sureshடாப் ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

எனவே, இப்படங்களின் டிவி உரிமை, வெளியீட்டு உரிமை, இசை உரிமை ஆகியவற்றிற்கு பலத்த போட்டி நிலவும்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னணி டிவி நிறுவனம் தனுஷின் ’கொடி’ படத்தின் சேனல் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸை பெற நினைத்தது.

ஆனால் ஆடியோ ரைட்ஸ் முன்பே விற்கப்பட சேனல் ரைட்ஸை மட்டுமே பெற்றது.

தற்போது விஜய்யின் ’பைரவா’ படத்தின் இரண்டு உரிமைகளையும் பெற அந்நிறுவனம் முயற்சித்து வருகிறதாம்.

பெரும்பாலும் அந்த நிறுவனத்திற்கு இது சாதகமாகவே முடியும் என சொல்லப்படுகிறது.

இதுநாள் வரை இசை உரிமைக்கு போட்டி போடும் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

ரஜினியின் ‘2.O’ பர்ஸ்ட் லுக்குக்கு மும்பை தயார்; தமிழகத்தில் எப்போது?

ரஜினியின் ‘2.O’ பர்ஸ்ட் லுக்குக்கு மும்பை தயார்; தமிழகத்தில் எப்போது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO teamஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘2.0’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

லைக்கா நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.

நவம்பர் 20ந் தேதி மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.

லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) இதனை பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர்.

இவ்விழாவை இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

இவ்விழாவில் ரஜினிகாந்துடன் லைக்கா நிறுவனர் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மும்பையை நடந்து வருகிறது.

இதனயைடுத்து விரைவிலேயே தமிழகத்திலும் பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

தனஞ்செயன் அட்வைஸை நிராகரித்த ‘சென்னை-28’ டீம்

தனஞ்செயன் அட்வைஸை நிராகரித்த ‘சென்னை-28’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai 28 team Dhananjayanபிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான யுடிவி தனஞ்செயன், தற்போது, பாஃப்டா (BOFTA) என்ற திரைப்பட கல்வி அகாடெமியை துவங்கி நடத்தி வருகிறார்.

இவர் அண்மையில் விஜய் வசந்த் நடித்துள்ள அச்சமின்றி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசியபோது…

“இங்கே விஜய் வசந்தின் நட்புக்காக சென்னை 28 படக்குழுவினரும் வந்துள்ளனர்.

இந்த இரு படங்களும் இவர்களின் நட்புக்காக வெற்றிப் பெற வேண்டும்.

தற்போது, ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாமல் போனதால், மக்களிடம் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தியேட்டரில் கூட்டம் குறைவாக உள்ளது. எனவே இந்த இரு படங்களையும் டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிடுமாறு கோரிக்கையாக வைக்கிறேன். என்று பேசினார்.

ஆனால் சென்னை 28 இரண்டாம் பாகம் வருகிற நவம்பர் 25ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows