அரசியலில் ரஜினி..? தலைமை ஏற்க அழைக்கும் ரசிகர்கள்

அரசியலில் ரஜினி..? தலைமை ஏற்க அழைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

அதுபோல் அவரது மேடை பேச்சு, வாய்ஸ் ஆகியவையும் பெரியளவில் ரீச் ஆகும்.

இதனால் ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆள வேண்டும் என நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு ரஜினி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உயிர் பிழைத்து வந்தாலே போதும் என்று கூறி வந்தனர்.

லிங்கா, கபாலி படங்களின் வெளியீட்டின் போது ரசிகர்கள் அரசியல் பேச்சை எடுக்கவில்லை.

ஆனால் தற்போது, தலைவா தலைமையேற்க வா என்று ரஜினிகாந்தை அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக போஸ்டர் அடித்து தமிழகமெங்கும் ஒட்டி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

2016ல் நட்சத்திரங்களின் திருமணங்களும் விவாகரத்தும்

2016ல் நட்சத்திரங்களின் திருமணங்களும் விவாகரத்தும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Amala Paul Soundarya Ashwinஉங்கள் அபிமான சினிமா நட்சத்திரங்கள் யார்? யார்? கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பதை பார்ப்போம்.

நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் நிறுவனரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் காதல் திருமணம்

சூர்யாவின் 24 பட இயக்குனர் விக்ரம் குமார் காதல் திருமணம்

நடிகர் பாபி சிம்ஹா நடிகை ரேஸ்மி மேனன் காதல் திருமணம்

நடிகை பூஜா இலங்கையை சார்ந்த தொழிலதிபர் திருமணம் செய்தார்.

சோனாலி என்பவரை நடிகர் அஸ்வின் திருமணம் செய்துக்கொண்டார்.

முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை பிரிந்த திலிப், விவாகரத்து ஆன நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்தார்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி – இசையமைப்பாளர் சந்தோஷ் (நிச்சயத்தார்த்தம்) 2017 மார்ச் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

விவாகரத்துக்கள்…

இயக்குனர் விஜய் – நடகை அமலா பால்

சௌந்தர்யா ரஜினிகாந்த் – தொழிலதிபர் அஸ்வின்

கமல்ஹாசன்-கௌதமி பிரிவு (திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த தம்பதி இவர்கள்)

விஜய் டிவி விஜே ரம்யா அவரது கணவரை பிரிந்தார்.

நடிகை ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால் அவர் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

‘மாரியப்பன்’ கேரக்டரில் யார் நடிக்க வேண்டும்.?’ மாரியப்பன் தகவல்

‘மாரியப்பன்’ கேரக்டரில் யார் நடிக்க வேண்டும்.?’ மாரியப்பன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mariappan Thangaveluஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனைகள் படமாக உருவாகவுள்ளது.

மாரியப்பன் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயக்குகிறார்.

இப்படம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் மாரியப்பன் கூறியுள்ளதாவது…

‘என்னை போல் கிராமத்தில் உள்ள திறமையான இளைஞர்கள் இப்படத்தை பார்த்து, ஊக்குவிக்கப்பட்டு பதக்கம் பெற்றால் அதுதான் எனக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி.

என்னுடைய கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.

அதை டைரக்டர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் வசனம் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் அட்லி? கார்த்திக் சுப்புராஜ்?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் அட்லி? கார்த்திக் சுப்புராஜ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya atlee karthik subbarajசூர்யா நடித்துள்ள சிங்கம் 3 வருகிற ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து எவரும் எதிர்பாரா வகையில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதுள்ள இயக்குனர்களில் விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அட்லி ஆகியோரை பற்றி பேசியுள்ளார்.

இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை நிச்சயம் தருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா இவ்வாறு கூறியுள்ளதால், அவரின் அடுத்த படத்தை அட்லி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Atlee or Karthik Subbbaraj who will direct Suriyas next

‘அம்மா’ பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது

‘அம்மா’ பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amma Jayalalithaa‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்..’ என்ற வார்த்தைகளை செயலாக்கி காட்டி வாழ்ந்தவர் ஜெயலலிதா.

இவர் கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார்களாம்.

பிரபல தெலுங்கு டைரக்டர் தசரி நாராயண ராவ் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவுள்ள இப்படத்திற்கு அம்மா என்று பெயரிடவிருக்கிறாராம்.

இதற்காக இப்படத் தலைப்பை அவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க எந்த நடிகை கொடுத்து வைத்திருக்கிறாரோ?

Amma Jayalalithaa’s biopic will be directed by Dasari Narayana Rao

 

‘சிம்பு படிச்சவர்தானே; திருந்த மாட்டாரா.?’ மகளிர் அமைப்புகள் கண்டனம்

‘சிம்பு படிச்சவர்தானே; திருந்த மாட்டாரா.?’ மகளிர் அமைப்புகள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu2014ல் டிசம்பரில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வந்த போது, சிம்பு பாடிய பீப் சாங்கும் வெளியானது.

இது சர்ச்சைக்குள்ளாகி பல வழக்குகள் சிம்பு மீது பாய்ந்தது.

தற்போது 2016ஆம் ஆண்டு முடிவில் சிம்பு பாடிய டிரெண்ட் சாங் வெளியானது.

இதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் சில வரிகள் உள்ளன. (அங்கே பீப் ஒலிக்கிறது)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

சிம்பு நடிக்க, யுவன் சங்கர் ராஜா இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இப்பாடலும் பிரச்சினையில் சிக்கும் என்று நாம் தெரிவித்திருந்தோம்.

அதுபோலவே தற்போது மகளிர் அமைப்புகள் இப்பாடலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

“இவர்கள் எல்லாம் படித்தவர்கள்தானே. இப்படி ஒரு பாடலை பாடலாமா? சிம்பு திருந்த மாட்டாரா? இந்த போக்கை மாற்றிக் கொண்டு திருந்த வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Ladies association voice against Simbu’s Trend Song from AAA movie

More Articles
Follows