விஜய் – மகேஷ் பாபு யார் சூப்பர் ஸ்டார்.? சூர்யா பட ஹீரோயின் கீர்த்தி நச் பதில்

விஜய் – மகேஷ் பாபு யார் சூப்பர் ஸ்டார்.? சூர்யா பட ஹீரோயின் கீர்த்தி நச் பதில்

விஜய் சேதுபதி வில்லனாக தெலுங்கில் நடித்த படம் ‘உப்பென்னா’.

இந்தப் படத்தின் மூலம்தான் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டி

தன் முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ லிங்குசாமி இயக்கிய ’தி வாரியர்’ ஆகிய படங்களிலும் நடித்தார்.

தற்போது பாலா இயக்கும் ’வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் கீர்த்தி ஷெட்டி.

அப்போது வழக்கம்போல நடிகர்கள் பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

விஜய், சூர்யா, மகேஷ்பாபு பற்றி கேள்விகளும் கேட்கப்பட்டன.

சூர்யா பற்றிய கேள்விக்கு.., என் சந்திப்பில் மிகவும் மரியாதைக்குரியவர் மனிதர் அவர்.

விஜய் பற்றிய கேள்விக்கு.. என்கேரஜிங் சூப்பர் ஸ்டார் என்றும்… மகேஷ்பாபு பற்றிய கேள்விக்கு.. நிஜத்திலும் சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என பதிலளித்தார் கீர்த்தி.

கீர்த்தி ஷெட்டி

Krithi Shetty talks about Vijay Suriya and Maheshbabu

விஜய் ஆண்டனி பட அப்டேட்: 1980களின் கதை.. 1 கோடியில் செட்.. 50 மும்பை ஸ்டன்ட் கலைஞர்கள்

விஜய் ஆண்டனி பட அப்டேட்: 1980களின் கதை.. 1 கோடியில் செட்.. 50 மும்பை ஸ்டன்ட் கலைஞர்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது.

1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் டைரக்டர் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர் மக்கள் தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விஜய் ஆண்டனி

Vijay Antony starrer Valli Mayil movie update

நடிப்பிலிருந்து நழுவும் நடிகை நயன்தாரா.; ஓ இதான் காரணமா.?

நடிப்பிலிருந்து நழுவும் நடிகை நயன்தாரா.; ஓ இதான் காரணமா.?

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நயன்தாரா.

முக்கியமாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ஓரிரு மாதங்களுக்கு முன் மணந்தார்.

இவர்கள் இணைந்து ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது மலையாளத்தில் ‘கோல்ட்’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவர் தனது 75-வது படத்தை நெருங்கும் வேளையில் விரைவில் நடிப்பிலிருந்து நழுவவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுக்கிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் இல்லற வாழ்க்கை மற்றும் சினிமா தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாரா

Here is reason why Nayanthara quits Cinema

‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து 2021 டிசம்பரில் வெளியான படம், ‘புஷ்பா’.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் ரிலீசாகி இந்த படம் இந்தியளவில் வசூல் வேட்டையாடியது.

இந்தப் படத்தில் சமந்தா ஒரு ஒரே பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் இந்தப் பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட்டாகி பட்டையை கிளப்பியது.

தற்போது இதன் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமந்தா ஆடிய “ஊ…. சொல்றியா மாமா..” என்ற பாடலைப் போல ஒரு ஐட்டம் சாங் இந்த படத்திலும் வைக்கப்பட உள்ளதாம்.

ஆனால் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைகா அரோராவை ஒரு பாடலுக்கு ஆட்டம் போட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

மலைகா அரோரா

‘புஷ்பா’ முதல் பாகத்தை சமந்தாவுக்காகவே அந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Actress will play item song in Pushpa 2

ஒரே ஷாட்.. 6 மாசம் ரிகர்சல் ப்ளான்.; ஒரே வாரத்தில் முடித்துக் கொடுத்த கிஷோர்

ஒரே ஷாட்.. 6 மாசம் ரிகர்சல் ப்ளான்.; ஒரே வாரத்தில் முடித்துக் கொடுத்த கிஷோர்

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”.

இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது.

நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களை படித்து படப்பிடிப்பு தளத்தில் தூங்காமல் ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் கிஷோர்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர்.

சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப்பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார்.

டிராமா படத்தை தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிஷோர்.

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும்
இந்த படமானது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கிஷோர்

Drama will be milestone in my life says Kishore

சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித் நடித்து வரும் அவரின் 61வது படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் இந்தப் படத்தில் டைட்டில் என்ன என ரசிகர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘துணிவே துணை’ என டைட்டில் வைக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

துணிவே துணை படத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக டிடி என்று கூறலாம். இதை எழுத்து உடைய சில படங்கள் சமீபத்தில் வந்தன. சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் (ET).. விஜய்க்கு துள்ளாத மனமும் துள்ளும் (TMT).. சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு (VTK) தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் (T) ஆகியவை குறிப்பிடத்தக்கது.

துணிவே துணை

Ajith 61 movie title may be Thunivae Thunai

More Articles
Follows