எனக்கு கூலிக்கு மாரடிக்க தெரியாது; ரங்கராஜ் பாண்டேவை கிழித்த ஸ்ரீப்ரியா

எனக்கு கூலிக்கு மாரடிக்க தெரியாது; ரங்கராஜ் பாண்டேவை கிழித்த ஸ்ரீப்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sri Priya slams Journalist Rangaraj Pandeyஊரடங்கு உத்தரவை சரியாக திட்டமிடாமல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என கமல்ஹாசன் நீண்ண்ண்ட கடிதம் எழுதியிருந்தார்.

மோடியின் அரசு பால்கனி மக்களுக்கான அரசு. அடித்தட்டு மக்களை பற்றி மோடி கவலைப்படவில்லை.

நான் கோபமாக இருந்தாலும் என்றும் உங்களுடன் இருப்பேன் என மோடியை விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

கமலின் கடிதத்தை பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விமர்சித்திருந்தார்.

கமல் எந்த குடிசை வீட்டில் வாழ்ந்தார். அவர் வீட்டில் பால்கனி இல்லையா? என கேட்டிருந்தார்.

இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக பாண்டேவுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா ஒரு குறுங்கடிதம் எழுதி அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actress Sri Priya slams Journalist Rangaraj Pandey

இதோ அந்த கடிதம்…

Actress Sri Priya slams Journalist Rangaraj Pandey

ரஜினி கமல் இணையும் பட வேலையை ஆரம்பித்த ‘மாஸ்டர்’ டைரக்டர்

ரஜினி கமல் இணையும் பட வேலையை ஆரம்பித்த ‘மாஸ்டர்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajதர்பார் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கிவிட்டாராம் டைரக்டர் சிவா.

கொரோனா பிரச்சனை தீர்ந்த பிறகு அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளது.

இதன் சூட்டிங்கில் சில நாட்கள் தான் ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தன் 40 ஆண்டுகால நண்பர் கமலுக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை தயாரிப்பதுடன் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறாராம் கமல்.

இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே, மூன்று முடிச்சு உள்ளிட்ட படங்களை பல படங்களை தொடர்ந்து தற்போது இருவரும் இணையுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஊரடங்கால் தன் அடுத்த பட வேலைகளை வீட்டிலிருந்தே தொடங்கி விட்டராம் மாஸ்டர் டைரக்டர் லோகேஷ்.

அதுபோல் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு 2 பட வேலைகளை ஒரு பக்கம் கவுதம் மேனன் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட பிறகு ஷூட்டிங் மீண்டும் துவங்கவில்லை என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.

விஜய், விஜய் சேதுபதியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் கொரோனா வைரஸ் பிரச்சினை தீர்ந்தவுடன் ரிலீசாகும் என தெரிகிறது.

3 கோடி தான் கொடுத்தேன்.. இன்னும் செய்யனும்…; ஏப்ரல் 14ல் லாரன்சின் அடுத்த அறிவிப்பு

3 கோடி தான் கொடுத்தேன்.. இன்னும் செய்யனும்…; ஏப்ரல் 14ல் லாரன்சின் அடுத்த அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrenceகொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் செய்து வருகிறது.

இதற்கு கோடிக்கணக்கான தொகை தேவைப்படுவதால் மக்களிடம் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்திய அரசு.

இதனையடுத்து பல பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாயை உதவி தொகையாக அளித்தார்.

அதை பிரதமரின் PM Cares நிதி, தமிழக முதல்வர் நிவாரண நிதி, FEFSI சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் என பலருக்கும் பிரித்துக் கொடுத்தார் லாரன்ஸ்.

அதற்கு பிறகும் நிதி உதவி கேட்டு லாரன்ஸுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறது. அவர்களுக்கு உதவ முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார் லாரன்ஸ்.

அதனால் தூக்கம் இழந்து தவித்துள்ளார். ஒரு முக்கிய முடிவை எடுக்க அதை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆடிட்டரிடம் ஆலோசனை செய்திருக்கிறாராம்.

அதன்படி ஏப்ரல் 14ல் தமிழர் புத்தாண்டு அன்று தன் அடுத்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

கொரானா ஊரடங்கு.. வீட்டில் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா..?

கொரானா ஊரடங்கு.. வீட்டில் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசை பரவாமல் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.

சினிமா நடிகர்களும் ஏதாவது ஒன்றை செய்து அதை வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை வீட்டிலேயே அமர வைத்து மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்பு அவரது வீட்டில் சமைத்து வருகிறாராம்.

இதை அவரது நண்பர் மஹத் வீடியோ காலில் பேசி பதிவிட்டுள்ளார்.

அந்த படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

சிம்பு தற்போது எந்த சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவதில்லை.

ஆனால் சிம்புவின் இந்த குக்கிங் போட்டோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது எனலாம்.

simbu

கேரளாவுக்கு அள்ளி கொடுத்த விஜய் சேட்டா… என்டே தமிழ்நாடு ஓர்ம உன்டோ.?

கேரளாவுக்கு அள்ளி கொடுத்த விஜய் சேட்டா… என்டே தமிழ்நாடு ஓர்ம உன்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy fans upset with Vijays silence in Corona relief fund கடந்த 2018ல் ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத கன மழையை கேரளா சந்தித்தது.

இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகள் உடமைகளை இழந்து தவித்தனர்.

அப்போது கேரளா மீண்டு வர உலகெங்கும் இருந்து பல நிதியுதவிகள் வழங்கப்பட்டன. ஒரு வழியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்தனர் மலையாளிகள்.

தமிழில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கினர்.

அப்போது கேரளாவில் அதிகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்யும் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

நம் தளத்தில் கடந்த 2018ல் வெளியான செய்திக்கான லிங்க் இது…

https://www.filmistreet.com/cinema-news/actor-vijay-donates-rs-70-lakhs-to-kerala-flood-relief/

கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் )

இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல ஆயிரம் சினிமா தொழிலாளர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் இதுவரை கொரோனா தொடர்பான ஒரு விழிப்புணர்வு அறிக்கை கூட விடவில்லை.

தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சினிமாவுக்கும் சரி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் சரி இதுவரை விஜய் ரூ. 1 கூட வழங்கவில்லை.

அவர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்பது அவர்களது ரசிகர்களையே குழப்பமடைய வைத்துள்ளது.

சில விஜய் ரசிகர்களால் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் (கொரோனா) நிவாரண நிதிக்கு நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே நிதி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர்கள் நடிகையர் பெப்சி தொழிலாளர்களுக்கு வாரி கொடுத்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thalapathy fans upset with Vijays silence in Corona relief fund

அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajithநடிகர் அஜித் ஒரு தீவிர பைக் பிரியர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவர் பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிகம் கலந்துக் கொண்டுள்ளார்.

இவருடன் கலந்துக் கொண்டவ்ர்களில் ஒருவர் பெண் ரேஸர் அலீஷா அப்துல்லா.

இவர் நடிகர் அஜித் பற்றி ஒரு விஷயத்தை ட்விட்டர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தன் திரைப்பட புரமோசன்களில் கூட கலந்துக் கொள்ளாதது ஏன்? என தெரிவித்துள்ளார்.

அஜித்தை கண்டால் ரசிகர்கள் தனியாக விடமாட்டார்கள் என்பதால் தான் அவர் வெளியே வருவதில்லை.

பைக் ரேஸ் டிராக்கில் அவரை நடக்கக்கூட யாரும் விடமாட்டார்கள். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியாது. இதனை நானே பார்த்திருக்கிறேன்.

இதனால் தான் அஜித் வெளியே வர கூடாது என முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். (See below pic)

அஜித்தை விட எத்தனையோ பெரிய பெரிய விஐபிக்களை நாம் பார்த்திக்கிறோம். அவர்களை விடவா அஜித்துக்கு பெரிய கூட்டம் உள்ளது.

அவர்கள் எல்லாம் வெளியே வருவதில்லையா..? இதெல்லாம் ஒரு காரணமா..? சரி அது அஜித்தின் இஷ்டம் என்று விட்டுவிடுவது தான் நல்லது.. நமக்கேன் ஏன் வம்பு..

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajith

Why ajith does not come out

More Articles
Follows