சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

Rojaசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த விழாவில் நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது…

’நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னை பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட்டேன் என்றனர்.

ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். இந்த விழா வுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி.

வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்தி ருக்கிறார்கள்.

அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங் களை சந்தித்து வெற்றி பெற்ற தற்கு எனக்கு முன்னுதாரண மாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரி கிரிசன் நன்றி உரையாற்றினார்.

Actress Roja Selva Mani about her colour

Overall Rating : Not available

Latest Post