சூட்டிங்கில் உயிரிழந்த லைட்மேன் குடும்பத்திற்கு லட்சங்களை வழங்கிய ‘வெப்பன்’ புரொடியூசர்

சூட்டிங்கில் உயிரிழந்த லைட்மேன் குடும்பத்திற்கு லட்சங்களை வழங்கிய ‘வெப்பன்’ புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் 12 லட்சம் ரூபாயை ‘வெப்பன்’ படப்பிடிப்பின் போது தற்செயலாக இறந்த லைட்மேன் எஸ்.குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

மறைந்த எஸ்.குமாரின் மனைவி ஜூலியட், அவரது தாயார் மற்றும் அவரது குழந்தைகள் காசோலையை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், நிர்வாக தயாரிப்பாளர் ரிஸ்வான், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, லைட் யூனியன் தலைவர் செந்தில், மேலாளர் கந்தன் மற்றும் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் ‘வெப்பன்’ படக்குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது இரங்கலைத் தெரிவிக்கையில்…

“எஸ் குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது.

தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்தவ ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில் ஒரு சிறு பகுதியாக இருக்க விரும்பினேன்.

அதனால் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்தேன். எஸ் குமார் என்றென்றும் என் பிரார்த்தனையில் இருப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன்.

மேலும் உறுதியான நம்பிக்கையுடனும், சக்தியுடனும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதைக் காண விரும்புகிறேன்” என்றார்.

’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

‘Weapon’ producer donates 12 lakhs to Lightman’s family who died on set

TRPக்காக பொய் சொல்லலாமா.? மீடியாவுக்கு பொறுப்பு வேண்டாமா.? கடுப்பான மக்கள்

TRPக்காக பொய் சொல்லலாமா.? மீடியாவுக்கு பொறுப்பு வேண்டாமா.? கடுப்பான மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

இவர் 1980களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் முள்ளும்மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் சரத்பாபு இறந்துவிட்டதாக இன்று மே 3ம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் பரவியது.

இதனை பாலிமர் உள்ளிட்ட பல முன்னணி மீடியாக்கள் செய்தியாக பதிவிட்டது.

இதனையடுத்து கமல், குஷ்பூ உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த செய்தியை உண்மை என நம்பி அவர்களும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவ நம்மிடமும் பல நண்பர்கள் விசாரிக்க தொடங்கினர்.

ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்று நாம் பலமுறை கூறினாலும் பெரிய பெரிய மீடியாக்களே பிரேக்கிங் செய்தி போட்டு விட்டார்கள் என கூற தொடங்கினர்.

பெரிய மீடியாக்கள் செய்தி பதிவிட்டால் அது உண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பலவீனத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.

இது போன்ற பல வதந்திகளை நாம் தொடர்ந்து பல மாதங்களில் பார்த்து வந்திருக்கிறோம்.

நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டார் என்ற செய்தியை பலமுறை கேட்டிருக்கிறோம். நடிகர் மைக் மோகன் இறந்து விட்டார் என்ற செய்தியை பலமுறை கேட்டிருக்கிறோம்.

அதுபோல கடலோரக் கவிதைகள் ரேகா இறந்துவிட்டார் என்ற செய்தியை நாம் கேட்டு இருக்கிறோம். அவரும் ஒரு முறை மேடை ஏறி இதை வருத்தப்பட்டு பேசியிருந்தார்.

இதுபோன்ற பல மீடியாக்கள் செய்தி பதிவிடுவதால் மக்களும் அதை நம்ப தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சரத்பாபுவின் சகோதரி அவர் நலமுடன் இருக்கிறார்.. விரைவில் மக்களை வந்து சந்திப்பார் என செய்தி வெளியிட்டனர்.

அதன் பிறகு முன்னணி ஊடகங்களில் வதந்திகளை நம்ப வேண்டாம் என செய்திகளை பதிவிட்டனர்.. இவர்களே காலமானார் என்ற செய்தியும் பதிவிட்டு இவர்களே நம்ப வேண்டாம் என்ற செய்தியும் பதிவிடுகின்றனர்.

ஒரு செய்தி உண்மைதானா என்பதை மீடியாக்கள் சம்பந்தப்பட்ட நபர் குடும்பத்தாரிடம் விசாரிக்க வேண்டும்.

அல்லது நடிகர்களின் மேனேஜர்கள் பிஆர்ஓ க்கள் ஆகியோரிடம் விசாரித்து செய்தியை பதிவிட வேண்டும்.

அதை விடுத்து இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தருகிறோம் என்ற போர்வையில் எது உண்மை? என்று ஆராயாமல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாக்களிக்க புறப்பட்டார் என பிரபல டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

அதுபோல கொரோனா காலகட்டங்களில் நடிகர் அஜித் இரண்டு கோடி நன்கொடை கொடுத்ததாக செய்தியை பிரபல ஊடகம் பதிவிட்டது. ஆனால் அவர் ரூ.25 லட்சம் மட்டுமே கொடுத்தார் என பிஆர்ஓ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அது போல தான் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவர் இறந்து விட்டதாகவும் பல பேர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். இதற்காகவே இவர்கள் ஒரு டிசைன் குரூப்பை வைத்து டிசைன் செய்து பதிவிடுகின்றனர்.

மரணம் அடையாத ஒருவரை மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பதிவிட்டால் அந்த குடும்பத்தினர் நிலை மனநிலை எப்படி இருக்கும் என இவர்கள் யோசிக்கவே மாட்டார்களா?

இந்த டிசைன் பிரிவினர்களின் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டார் என செய்தி பதிவிட்டால் அவர்கள் அதை எப்படி தாஙகிக் கொள்வார்கள்.? ஏன் இந்த மனநிலை.?எப்போது இந்த நிலை மாறும்.?

இப்படியாக முன்னணி ஊடக நிறுவனங்களே உண்மையை ஆராயாமல் பொய் செய்திகள் பதிவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்..

உண்மை செய்தியை கூட திரித்து மீம்ஸ் போடவும் பல விஷமிகள் காத்திருக்கும் நிலையில் பொய் செய்தியை பதிவிட்டால் என்ன ஆகும் மீடியாக்களின் நிலை.?

இனியாவது மீடியாக்கள் பொறுப்பை உணர்ந்து செய்தியை பதிவிட வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கும் மீடியாக்கள் மீது அதிக நம்பிக்கை பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Big Medias should have responsibility Don’t spread fake news for your TRP

மனோபாலா மரணம் குறித்து அவரது மகன் ஹரிஷ் உருக்கம்.; நடந்தது இதுதான்.!

மனோபாலா மரணம் குறித்து அவரது மகன் ஹரிஷ் உருக்கம்.; நடந்தது இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தமிழ் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா.

நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து மனோபாலாவின் மகன் ஹரிஷ் விளக்கம் அளித்துள்ளார்.

மனோபாலாவின் மகன் ஹரிஷ் குமார், தனது தந்தையின் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மனோபாலா 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.மேலும், சில வாரங்களுக்கு முன்பு அவர் மேலும் நோய்வாய்ப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, மனோபாலா தனது இதய நோய்க்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை மேற்கொண்டார்.அவர் குணமடையும் தருவாயில் இருக்கிறார் என மனோபாலாவின் மகன் ஹரிஷ் குமார் கூறி இருந்தார்.

இந்நிலையில், மனோபாலா இன்று மே 3-ம் தேதி மதியம் காலமானார்.

மேலும், மனோபாலா கடந்த மே 2ஆம் தேதி மாலை தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மே 3ஆம் தேதி அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Manobala’s son Harish explains the actor’s hospitalization

BREAKING NEWS : நடிகர் மனோபாலா உடலுக்கு விஜய் அஞ்சலி

BREAKING NEWS : நடிகர் மனோபாலா உடலுக்கு விஜய் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மனோபாலா இன்று மே 3-ம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில், நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொண்டார்.

நடிகர் மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.

https://www.youtube.com/shorts/k53PmXVopYU

Vijay tributes to actor Manobala

லியோ படத்தில் நடிக்கும் விஜய்யின் மகன்.. வெளிவந்த அதிகார பூர்வ தகவல்

லியோ படத்தில் நடிக்கும் விஜய்யின் மகன்.. வெளிவந்த அதிகார பூர்வ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேத்யூ தாமஸ் மலையாள திரையுலகின் இளம் மற்றும் பிரபலமான நடிகர் ஆவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘லியோ’ மூலம் கோலிவுட்டில் நுழைய உள்ளார். காஷ்மீர் ஷூட்டிங்கில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் மேத்யூ காணப்பட்டார்.

தனக்கு தமிழ் சரளமாக இல்லை என்றும், ஆனால் லோகேஷ் கனகராஜ் அதை கூலாக கையாண்டதாகவும் நடிகர் கூறினார். தளபதி விஜய் பற்றி கேட்டதற்கு, “அடிப்போலி” என்றார். மேத்யூவின் வார்த்தைகளின்படி, அவர் லியோவில் விஜய்யின் மகனாக நடிக்கிறார் என்பது தெளிவாகிறது.

‘Leo’ actor shares hot update about the characters in leo

சினிமா ஆர்வலர் – கமல்..; அருமை நண்பர் – ரஜினி..: மனோபாலா மறைவுக்கு இரங்கல்

சினிமா ஆர்வலர் – கமல்..; அருமை நண்பர் – ரஜினி..: மனோபாலா மறைவுக்கு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவர் நடிகராக பலராலும் அறியப்பட்டவர்.

40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மனோபாலா திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் வால்டர் வீரய்யா, கோஷ்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் மோகன் உடன் நடித்து வருகிறார் மனோபாலா.

சந்திரமுகி, ஆம்பள, தெறி, இந்தியா பாகிஸ்தான் அஞ்சான், தீரன் அதிகாரம் ஒன்று, கவலை வேண்டாம் என பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

மேலும் 10க்கு மேற்பட்ட படங்களில் படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களும் அடங்கும்.

சதுரங்க வேட்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன், விஜயகாந்த் நடித்த என் புருஷன் எனக்கு மட்டும்தான், சிவாஜி கணேசன் நடித்த பாரம்பரியம், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் உருவானதுதான்.

மேலும் பல டிவி சீரியல்களிலும் அல்லி ராஜ்ஜியம், மாயா, செம்பருத்தி உள்ளிட்ட டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களை பணியாற்றி உள்ள மனோபாலா கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு உள்ளார்.

இவருக்கு லிவர் (கல்லீரல்) பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மே மூன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் மனோபாலா.

இதனையடுத்து இளையராஜா, பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி & கமல் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

— ரஜினிகாந்த்…

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்… https://t.co/x9VldLKPS3

—– கமல்ஹாசன்

Rajini kamal express their shock over the Manobala demise

More Articles
Follows