போதை ஏறி புத்தி மாறி ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது – நடிகை துஷாரா

போதை ஏறி புத்தி மாறி ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது – நடிகை துஷாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணிபுரிந்தது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இது குறித்து நடிகை துஷாரா கூறும்போது, “இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையில் ஒரு சிறந்த அன்பான மற்றும் வேடிக்கையான அனுபவமாகும். உண்மையில், இந்த சுவாரஸ்யமான தருணங்கள் படப்பிடிப்பின் போது ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆரம்பத்தில், இயக்குனர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்த படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழு கதையை பற்றி கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் மையக்கரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க எனது ஆர்வத்தை தூண்டியது. இருப்பினும், இந்த படத்தை பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், ஓரிரு மாதங்களுக்கு பிறகு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்கிரிப்டை கேட்க அலுவலகத்திற்கு வர முடியுமா என்று சந்துரு சார் கேட்டார். இந்த திரைப்படத்தின் பூஜைக்கு 4 – 5 மணி நேரத்திற்கு முன்பு தான் நான் இந்த படத்துக்கு கையெழுத்திடுகிறேன் என்று கேள்விப்பட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என்றார்.

மேலும், இயக்குனர் சந்துரு குறித்து அவர் பாராட்டி பேசும்போது, “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் அவர் விரும்புவதை பெறுவதில் அவரது தெளிவு மிகவும் துல்லியமானது. இது படம் மிகச்சிறப்பாக வர வழி வகுத்தது. இருப்பினும், தொழில்நுட்ப அம்சங்களில் நான் தேர்ச்சி பெற்றவன் அல்ல என்று அவர் அவரை குறைத்து மதிப்பிட்டு கூறலாம். ஆனாலும், இறுதி வடிவத்தை எவ்வாறு சரியாக கொண்டு வருவது என்பது குறித்த தனித்துவமான பார்வை அவருக்கு உண்டு என்று நான் கூறுவேன்” என்றார்.

நாயகன் தீரஜ் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறும்போது, “அவர் மிகவும் எனர்ஜியுடனும், முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு நடிகர். ஒரு வெற்றிகரமான கலைஞர் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும், தீரஜ் அதை அதிகமாகவே வைத்திருக்கிறார். முதல் ஷாட்டில் நடிப்பவரை போலவே கடைசி நாள் படப்பிடிப்பிலும் கூட அவர் அதே ஆற்றலை கொண்டிருந்தார்” என்றார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாக படத்துக்கு பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி

இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த அவரின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

“இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு “சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. மன்னிப்பு வழங்குவது மட்டுமல்ல, பார்வையாளர்கள் குறிப்பாக எனது ரசிகர்கள் எனது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற அன்பை இப்பொழுது போலவே, என்றென்றும் தருவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார் யுவன் ஷங்கர் ராஜா.

சினிமாவுக்கு வராதே… தம்பிக்கு விஜய் தேவரகொண்டா நிபந்தனை

சினிமாவுக்கு வராதே… தம்பிக்கு விஜய் தேவரகொண்டா நிபந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakonda reveals why he stopped talking to his brother Anandதெலுங்கு சினிமா உலகில் இளைஞர்களுக்கு பிடித்த நாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜீன் ரெட்டி மற்றும் நோட்டா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கில் இவர் படு பிரபலம். இவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் நடிக்கும் ‘தொரசானி’ என்ற படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. இதில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலரை பலரும் பாராட்டி வந்தனர். ஆனால் விஜய் மட்டும் பாராட்ட இல்லை.

இதனிடையில் தொரசானி படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டு தன் தம்பியுடன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தான் பேசாமல் இருப்பது ஏன்? என்ற உண்மையை ரசிகர்களிடையே தெரிவித்தார்.

அதாவது அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தாராம் ஆனந்த். அதை விடுத்து சினிமாவில் நடிக்க போகிறேன் என தம்பி கூற அது அண்ணனுக்கு பிடிக்கவில்லையாம்.

தற்போது தன் தம்பி ஆனந்தை வாழ்த்த வந்துள்ளதாக தெரிவித்தார் விஜய் தேவரகொண்டா.

Vijay Devarakonda reveals why he stopped talking to his brother Anand

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி கன்பார்ம்

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Enai Noki Paayum Thota release date is hereகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆனந்த்ப்பட்டனர்.

ஆனால் இது செய்தி வந்து 3 ஆண்டுகள் ஆகியும் படம் முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.

எனை நோக்கி பாயும் தோட்டா என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக் பாடல்களும் வெளியானது.

பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பும் தடைபட்டு நீண்டுக் கொண்டே போனது.

இந்த நிலையில், தற்போது லைகா நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளதாகவும் ஜூலை 26-ந்தேதி படத்தை வெளியிடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் ராணா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்க தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Enai Noki Paayum Thota release date is here

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கும் முருகதாஸ்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss will launch first look of Shanmuga Pandiyans next movieதேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம், மதுரை வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனையடுத்து பல கதைகளை கேட்டு வந்துள்ளார்.

தற்போது பூபாளன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பூஜை, கடந்த மாதம் காஞ்சிபுரம் கோயிலில் நடைபெற்ற போது பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தன் மகனை வாழ்த்தினார்.

படப்பிடிப்பு நாளை (ஜூலை 11) தொடங்கவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.

AR Murugadoss will launch first look of Shanmuga Pandiyans next movie

விக்ரம்-சூர்யா படங்களில் நடிக்கனுமா.? அருமையான வாய்ப்பு இதோ…

விக்ரம்-சூர்யா படங்களில் நடிக்கனுமா.? அருமையான வாய்ப்பு இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is chance to act in Vikram and Suriya movies Dont Miss itஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் அண்மையில் வந்து சூப்பர் ஹிட் அடித்த படம் இமைக்கா நொடிகள்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் நடிக்க ஆர்வமுள்ள ஆண், பெண் குழந்தைகள், தங்களின் புகைப்படம் மற்றும் சில நிமிடங்கள் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என அறிவித்துள்ளனர்.

இதே போல் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

உங்கள் விவரங்களை www.mitro.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதுபோல் 63851 91483 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Here is chance to act in Vikram and Suriya movies Dont Miss it

More Articles
Follows