சீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி

சீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bodhai Yeri Budhi Maariஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.

“தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, அந்த படத்தில் பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

மிகவும் பிஸியாக இருந்தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.

பிப்ரவரியில் ரிலீசாகும் ரீல்

பிப்ரவரியில் ரிலீசாகும் ரீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

reelஇந்நிகழ்வில் பேசிய இயக்குனர் முனுசாமி கூறும்போது, “இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நடிகர் உதயராஜ் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை. இத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது. சினிமா துறையில் என் பயணம் துவங்கியது, மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது ‘ரீல்’ படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.

திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிந்து, படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியீடு செய்ய பணிகள் முழு மூச்சில் நடந்து வருகின்றன என்ற தகவலையும் வெளியிட்டார் இயக்குனர் முனுசாமி.

ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyanஹரிஷ் கல்யாண் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு புதிய அலையை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையான படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கை வைத்த “பியார் பிரேமா காதல்” படத்தினை தொடர்ந்து, அடுத்து ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற காதலை மையப்படுத்திய படமும், இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். சஞ்சய் இயக்குனர் விஜயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டி காமெடி படம் ஒரு இளைஞனின் “ஜோதிட நம்பிக்கைகள்” பற்றி பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிறது. சமீபத்தில் “காயம்குளம் கொச்சூன்னி” போன்ற பல பெரிய பட்ஜெட் மலையாள படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவீஸ், கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த கோகுலம் கோபாலன் சகல வசதிகளையும் கொண்ட ஜி.ஸ்டூடியோவை சொந்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய ஒரு நாயகனை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. மிக முக்கியமாக திருமணம் ஆகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். கதையை கேட்டவுடன் அவரின் உற்சாகமும், ஈடுபாடும் எனக்கு பெரிய உந்துதலை கொடுத்தது. என் முதல் படத்திலேயே எனக்கு இப்படி ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தது என் பாக்கியம். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்க எனக்கு ஊக்கமளித்தனர். நாயகி மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பை தொடங்க உழைத்து வருகிறோம். தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை, தலைப்பை அறிவித்த பிறகு ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகும்” என்றார் இயக்குனர் சஞ்சய் பாரதி.

தமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை

தமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal met CM edappadi palanisamyஇளையராஜா 75″ நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 63 stillsவிஜய் & அட்லீ 3வது முறையாக இணையும் படத்தை தயாரிக்கிறது ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ்.

தற்காலிகபாக ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற கிறிஸ்தவ பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது..

மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஈரோட்டில் ஒரு வயதான பெண்மணி என்னிடம் வந்து நீங்களும் எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்றார்.

மோடி அரசு விமர்சனக் குரல்களை தடுக்க வெற்றுக் கூச்சலிடுகிறது.

தமிழக அரசை யாரும் மதிப்பீடு செய்ய வேண்டாம். அது திறனற்றது. ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசாக அது உள்ளது.” எனப் பேசினார்.

More Articles
Follows