சிம்புக்கு அட்வைஸ் செய்யும் உரிமை எனக்கிருக்கு… விவேக் பேச்சு

சிம்புக்கு அட்வைஸ் செய்யும் உரிமை எனக்கிருக்கு… விவேக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivekசேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சக்க போடு போடு ராஜா”.

நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் விவேக் பேசியதாவது….

“ இங்கே சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.

அவர்கள் சிம்பு, சந்தானம் பெயரை சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால்,

யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு.

சினிமா எடுப்பதை போல் ரிலீஸ் செய்வதும் கஷ்டமாக உள்ளது. படம் வெளியாகும் சமயத்தில் தலைப்பு பிரச்சினை வருகிறது.

திருமணத்திற்கு மாப்பிள்ளை மணப்பெண் ரெடியாக இருந்தாலும், மண்டபம் கிடைப்பதில்லை.

அதுபோல், படம் ரெடியாகிவிட்டாலும் தியேட்டர் கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் நல்ல காட்சிகள் கிடைப்பதில்லை. அடை மழை வரக்கூடாது. வானிலை நன்றாக இருக்க வேண்டும். திருட்டு விசிடி வரக்கூடாது.

இப்படி பல பிரச்சினைகள் உள்ளது.

ஒரு ஸ்டார் சிம்பு இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது சந்தோஷம்.

அவரைப் பற்றி சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. எனவே ஒன்றை அவருக்கு சொல்கிறேன்.

சிம்பு நல்ல திறமைசாலியானவர்.

அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் உள்ளது.

அவர் தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சினிமாவில் தன் கவனத்தை செலுத்த வேண்டும்.” என பேசினார் விவேக்.

போதும் தல… டைரக்டர மாத்து; சால்ட்&பெப்பர் லுக்க மாத்து

போதும் தல… டைரக்டர மாத்து; சால்ட்&பெப்பர் லுக்க மாத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and sivaசிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தார் அஜித்.

அதன்பின்னர் இயக்குனர் கவுதம்மேனன் படத்தில் நடித்தாலும் பின்னர் மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்தார்.

அந்த வேதாளம் படம் வெற்றிப் பெறவே விவேகம் படத்தில் சிவா உடன் இணைந்தார்.

இப்படியாக ஒரே இயக்குனரின் படத்தில் நடித்து வருவதாலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதாலும் ரசிகர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் மீண்டும் சிவா இயக்க, ஏஎம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

இதனையறிந்த ரசிகர்கள், போதும் தல.. கூட்டணியை மாத்து. கெட்-அப்பை மாத்து என்கிறார்களாம்.

சிவா ஹிட் இயக்குனர்தான். ஆனால் வேறு புதிய டைரக்டர்கள் படத்தில் நடித்துவிட்டு மீண்டும் அவருடன் இணையலாமே என கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேஜிக்மேனும் டாக்டரும் இணைந்து மருத்துவ ஊழலை சொல்லும் மெர்சல்

மேஜிக்மேனும் டாக்டரும் இணைந்து மருத்துவ ஊழலை சொல்லும் மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஅட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல்.

தமிழக சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.

எனவே வெளிநாட்டுக்கு படத்தை அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு பிரிட்டிஷ் சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்துள்ளனர்.

பெரும்பாலும் ஒரு படம் சென்சார் செய்து முடிக்கப்பட்டால், அந்த பட தகவல்களை அவர்களின் இணையத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாம்.

இந்நிலையில் ‘மெர்சல்’ படம் குறித்து பிரிட்டிஷ் சென்சார் குழுவினர் குறிப்பிட்டுள்ளதாவது…

மெர்சல் இது ஒரு தமிழ் த்ரில்லர் படம். ஒரு மேஜிக் மேன் மற்றும் டாக்டரும் இணைகின்றனர்.

அவர்கள் இருவரும் இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை மக்கள் அறிய கொண்டு வருகின்றனர்.
படத்தில் ஆக்சன் காட்சிகள் வன்முறை இருக்கும்” என பதிவிட்டுள்ளனர்.

British censor team revealed Mersal story outline

அட அஜித் மகளா இது..; ஆச்சரியத்தில தல ரசிகர்கள்

அட அஜித் மகளா இது..; ஆச்சரியத்தில தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anikaகடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால்.

இதில் அஜித், த்ரிஷாவின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவரின் ஒரு புதிய படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சிறுமியாக இருந்தவர் இதில் பெரிய பெண் லுக்கில் இருக்கிறார்.

அட… அஜித்தின் மகளாக நடித்தவரா? இப்படி ஆகிட்டார்? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் விளம்பர பாணியில்.. ஒரு வேளை காம்ப்ளன் குடித்து நன்றாக வளர்ந்திருப்பாரோ? எனவும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

விவேகத்தை விட மெர்சலுக்கு குறைந்த காட்சிகளை ஒதுக்கிய தியேட்டர்கள்

விவேகத்தை விட மெர்சலுக்கு குறைந்த காட்சிகளை ஒதுக்கிய தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal will be screened less than Vivegam shows in Multiplexவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் அக். 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 3500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்பதை பார்த்தோம்.

ஆனால் சில மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மெர்சலுக்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மெர்சல் படத்தின் ரன்னிங் டைம்தானாம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் வெளியான விவேகம் படத்திற்கு நிறைய காட்சிகளை ஒதுக்கியிருந்தார்கள்.

ஏனென்றால் விவேகம் 2 மணி நேரம் 28 நிமிடம்தான் இருந்தது.

ஆனால், மெர்சல் 2 மணி நேரம் 43 நிமிடம் ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal will be screened less than Vivegam shows in Multiplex

ரசிகர்கள் கிண்டலை தவிர்க்க ஜுலிக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்

ரசிகர்கள் கிண்டலை தவிர்க்க ஜுலிக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani julieபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிவு மறைவு இல்லாத நடவடிக்கையால் ரசிகர்களிடையே ஓவர் பாப்புலர் ஆனார் ஓவியா.

ஆனால் இவருக்கு நேர் எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றவர் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜுலி.

இவர் தற்போது எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டாலும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் கலந்துக்கொண்டார்.

அப்போது ஜுலியை சந்தித்த அவர், என்ன கிண்டல் செய்தாலும், நீ எதையும் பொருட்படுத்தாமல் இருந்துவிடு. நாளடைவில் அவர்களே அதை மறந்துவிடுவார்கள் என்று அட்வைஸ் கூறியுள்ளார்.

Samuthirakani advice to Bigg Boss fame Julie

More Articles
Follows