மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

actor vishalதமிழ் சினிமாவில் சீரியல் நடிகர்கள் தற்போது தான் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் இளம் வயதிலேயே அரசியலுக்கு வர ஆசைப்பட்டவர் நடிகர் விஷால்.

கடந்த 2017ம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் விஷால்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுபடவில்லை.

அதுபோல நடிகர் சங்கத்திலும் சரி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சரி இவரது ஆதரவு அணிகள் தான் முன்பு பதவியில் இருந்தன.

இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை விஷால் மக்கள் நல இயக்க நண்பர்களுடன் இணைந்து இத்தேர்தலை சந்திக்கவிருக்கிறாராம் விஷால்.

Actor Vishal to contest in TN assembly election

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *