நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் சென்னை கே4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார்.

படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.

அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ்.

கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா.

Arnav Divya

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மகேஷ்பாபு.

இவர் நடித்த பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களை தான் தமிழில் விஜய் ரீமிக்ஸ் செய்து நடித்து வந்தார்

இவரை தெலுங்கு திரை உலகின் பிரின்ஸ் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவிக்கும் பிறந்தவர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் வயது முதிர்வு மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி மகேஷ்பாபு ரசிகர்களையும் தெலுங்கு திரையுங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை ஆஷா பரேக் பெறுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…

“இந்திய சினிமாவிற்கு திருமதி ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்றார்.

2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதை அறிவித்த அமைச்சர், குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த விழாவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

ஆஷா பரேக்

ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1992-ல் ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

1998- முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

ஐந்து உறுப்பினர் நடுவர் குழு திருமதி ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டதாக அனுராக் தாக்கூர் கூறினார்.

நடுவர் குழு விவரம் 1) திருமதி ஆஷா போஸ்லே 2) திருமதி ஹேமமாலினி, 3) திருமதி பூனம் தில்லான், 4) திரு டி எஸ் நாகாபரணா, 5) திரு உதித் நாராயண்.

கூடுதல் தகவல்கள்…

இந்த விருது இதற்கு முன்பு ராஜ் கபூர், யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென்,தேவிகா ராணி , அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு இந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

1960 முதல் 1980 கள் வரை கதாநாயகியாக நடித்த ஆஷா பரேக் பிரபல நடிகர் பரேக்கின் மகள் ஆவார்.

1960களில் முன்னணி நடிகர்களான ராஜ்கபூர், ஷம்மி கபூர், தேவ் ஆனந்த், தர்மேந்திரா என பலருடன் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 10 வயதாக இருந்தபோது மா (1952) படத்தில் நடித்தார்.

ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), ஃபிர் வோஹி தில் லயா ஹூன் (1963), தீஸ்ரி மன்சில் (1966) , பஹரோன் கே சப்னே (1967), பியார் கா மௌசம் (1969), மற்றும் கேரவன் (1971) இவரது புகழ்பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

சென்சார் போர்டின் தலைவராக பதவி வகித்துள்ளார். சென்சார் போர்ட் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.

சொந்தமாக நடனப்பள்ளியும், தனது பெயரில் ஒரு மருத்துவமனையையும் மும்பையில் நடத்தி வருகிறார் இவர்.

ஆஷா பரேக்

Actress Asha Parekh to be bestowed with Dadasaheb Phalke Award

டாக்டராகிறார் சுந்தர் .சி.; ‘காபி வித் காதல்’ குழுவினரின் குடும்பத்துக்கு ஆப்ரேசன் ப்ரீ – ஏ.சி.சண்முகம்

டாக்டராகிறார் சுந்தர் .சி.; ‘காபி வித் காதல்’ குழுவினரின் குடும்பத்துக்கு ஆப்ரேசன் ப்ரீ – ஏ.சி.சண்முகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

காபி வித் காதல்

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது…

“நானும் சுந்தர் சியும் ரிஷி பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில் தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது.

ஏ.சி.சண்முகம்

இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன்.

சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

காபி வித் காதல்

*நடிகர்கள்*

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

*தொழில்நுட்பக்குழு*

எழுத்து, இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர்.C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்
கலை – குருராஜ். B
நடனம் – ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி – தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு – பாலா கோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத்

காபி வித் காதல்

Coffee withs kadhal Producer A. C. Shanmugam speech

லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ மற்றும் வில்லன் என தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.

இந்த படத்தை செல்வராகவன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.

செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு போதுமான புரமோஷன் இல்லை என தனுஷ் ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் திடீரென லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக தொடங்கி அதிரடி ப்ரோமோஷன் செய்து வருகிறார் தாணு.

‘நானே வருவேன்’ பட தொடர்பான செய்திகள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிகாலை காட்சிகள் தேவையில்லை என தாணு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் தயாரித்த அசுரன் & கர்ணன்.. இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் வெளியிட்டேன்.

தமிழகத்தில் சில ஊர்களில் மட்டும்தான் அதிகாலை 4 & 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

மற்ற ஊர்களில் பொதுவாக 8 மணிக்கு தான் காட்சிகள் தொடங்குகின்றன.

அப்போதுதான், உலகம் முழுக்க அனைவராலும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்க முடியும்.

மற்றொரு காரணம்.. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவே திரையரங்குக்கு ரசிகர்கள் வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என நினைக்கிறேன்.

எனவே தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது” என நியாயமான காரணத்தை கலைப்புலி எஸ் தாணு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Why early morning shows cancelled for Dhanush mivies

More Articles
Follows