இன்று மாநில நிர்வாகி சுதாகருடன் ரஜினி ஆலோசனை..; நாளை 50 செயலாளர்கள் முன்னிலையில் அரசியல் அறிவிப்பு..?

இன்று மாநில நிர்வாகி சுதாகருடன் ரஜினி ஆலோசனை..; நாளை 50 செயலாளர்கள் முன்னிலையில் அரசியல் அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை நாளை ஆலோசனை நடத்துகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக 50க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து நாளை சென்னைக்கு வருகின்றனர்.

எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதில் கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட அரசு வழிமுறைகளை கடைப்பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் தன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தன்னுடைய அரசியல் இறுதி முடிவு தொடர்பான அறிவிப்பை தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை பகிர்ந்து கொள்வார் ரஜினி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சி பற்றி நாளை அறிவிப்பாரா? என்பதை பார்ப்போம்.

Rajinikanth to hold discussions with district secreatries tomorrow

கொரோனா தடுப்பு மருந்து உட்கொண்டவருக்கு பக்கவிளைவு.. மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ்..; அதிர்ச்சியில் மக்கள்

கொரோனா தடுப்பு மருந்து உட்கொண்டவருக்கு பக்கவிளைவு.. மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ்..; அதிர்ச்சியில் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

இதனால் மருத்துவதுறை வல்லுனர்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி & ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவில் புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.

தமிழகத்திலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார்

அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு, தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டது.

இதனால் சிகிச்சையில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…

“அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் இராமச்சந்திர மருத்துவமனை விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Alleging side-effects from Covishield vaccine trials, Chennai volunteer seeks Rs 5 crore compensation

‘ரஜினி நல்லவர்..; தெளிவான முடிவு எடுப்பார்.. அவரின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’..- தமிழக அமைச்சர்கள் கருத்து

‘ரஜினி நல்லவர்..; தெளிவான முடிவு எடுப்பார்.. அவரின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’..- தமிழக அமைச்சர்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா ஊரடங்காலும் பிரச்னையாலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

எனவே அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ரஜினி தற்போது இதில் கலந்து கொள்ள வருவதால் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமும் நாளைய ஆலோசனை கூட்டம் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என தமிழக அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி நல்ல மனிதர். ரஜினியின் அரசியல் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். மக்களில் ஒருவனாக நானும் எதிர்ப்பார்க்கிறேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார். அவர் நல்ல மனிதர். அவர் கட்சி ஆரம்பித்த பின்னர்தான் அவரின் கொள்கைகள் தெரிய வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

TN ministers about Rajini’s political entry

ஓய்வில்லாமல் உழைக்கும் மகன்..; சிம்புக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த உஷா ராஜேந்தர்

ஓய்வில்லாமல் உழைக்கும் மகன்..; சிம்புக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த உஷா ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து கொடுத்தார்

இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்.

ஓயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார்.

நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை (Mini Cooper Car) அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார்.

தனது தாயின் பாசமிகு பரிசை பெற்ற நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் தான் சுற்றி வருகிறாராம்.

Usha Rajendar gifted Mini cooper car to her son STR

Usha Rajendar

பள்ளிகள் திறப்பு தாமதம்..: 50% பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை முடிவு..?

பள்ளிகள் திறப்பு தாமதம்..: 50% பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN school studentsகொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் & பெற்றோர்களிடையே தினம் தினம் எழுந்தது.

தற்போது ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சில பாட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதும் பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலையே உள்ளது.

இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை 50% குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆனால் இது தொடர்பான எந்த அறிக்கையும் அரசு சார்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

About 50% school syllabus reduced in Tamil Nadu for 2020 ?

BIG NEWS வருவாரா? மாட்டாரா..? பாபாஜி ஜென்ம நட்சத்திர நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இறுதி முடிவு..?

BIG NEWS வருவாரா? மாட்டாரா..? பாபாஜி ஜென்ம நட்சத்திர நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இறுதி முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajinikanth to hold discussions with district secretaries of RMM on Monday

More Articles
Follows