BREAKING ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் உடலுக்கு ரஜினி அஞ்சலி.; உருக்கமான பேச்சு

BREAKING ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் உடலுக்கு ரஜினி அஞ்சலி.; உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைப்பதற்காக உலக அளவில் பல மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சுதாகர் இன்று ஜனவரி 6 உடல்நலக் குறைவால் காலமானார்.

ரஜினி ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்ன செய்தியாளர்களிடம் பேசும் போது..

“எனது நீண்ட கால நண்பரை நான் இழந்து விட்டேன். எனக்கு நெருக்கமான ஒரு நண்பரை இழந்தது வருத்தம் அளிக்கிறது.

என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் சுதாகர்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. எவ்வளவு மருத்துவங்கள் செய்தும் அது பயனில்லை. இன்று அவரை இழந்தது பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.”

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth paid last respect to Sudhakar

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன் அஜித் டூப்.? மஞ்சுவாரியர் நெத்தியடி பதில்

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன் அஜித் டூப்.? மஞ்சுவாரியர் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இந்த படம் தொடர்பான அவரின் சமீபத்திய பேட்டியில்…

“துணிவு’ படத்தில் எந்த டூப்பும் போடாமல் 100 % அஜித் தான் நடித்தார்.

அவர் எதுவாக இருந்தாலும் டிரைவ் செய்வார். டிரைவ் தெரியாதது என்று எதுவுமே அவருக்கு இல்லை.

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன்..்எனக்கு அது தான் முதல் தடவை என்பதால், அவரே சொல்லிக் கொடுத்தார்.

அந்த அனுபவம் ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என் செல்போனிலேயே இருக்குது.” என்றார்

Manju warrier about boat scene making in thunivu

நீங்களே இப்படியா.? சோனு சூட்-க்கு ரயில்வே கண்டனம்.; மறைமுகமாக நிர்வாகத்தை கண்டித்த நடிகர்

நீங்களே இப்படியா.? சோனு சூட்-க்கு ரயில்வே கண்டனம்.; மறைமுகமாக நிர்வாகத்தை கண்டித்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் சோனு சூட்.

தமிழில் கள்ளழகர் சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் ஏழைகளுக்கு இவர் செய்த உதவிகள் ஏராளம் ஏராளம்.

எனவே இவரை தெய்வமாகவும் ரோல் மாடலாகவும் லட்சக்கணக்கான மக்கள் போற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் 13 தேதியில் ஓடும் ரயிலின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரரில் நடிகர் சோனு சூட் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வடக்கு ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில்…

“அன்புள்ள, சோனு சூட் அவர்களே, நாட்டிலும், உலகிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. ரயில் படிகளில் பயணம் செய்வது ஆபத்தானது.

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் உங்கள் ரசிகர்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கலாம். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்! சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை தொடரவும்” என தெரிவித்துள்ளது.

இதற்கு நடிகர் சோனு சூட் பதிலளிக்கையில்.. “மன்னிக்கவும், கன்ஃபார்ம் டிக்கெட்டை வாங்க முடியாமல், தினமும் ரயில் கதவுகளில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக இதைச் செய்தேன். இந்த செய்திக்காக நன்றி” என தெரிவித்துள்ளார் சோனு சூட்.

#SonuSood apologises as he gets criticised for sitting at the footboard of local train

@SonuSood

#SonuSood apologises for his video, thanks railways for better infrastructure

BREAKING அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் திடீர் மரணம்

BREAKING அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைப்பதற்காக உலக அளவில் பல மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 10 – 15 வருடங்களாக மட்டுமே ரஜினிகாந்த் எந்த புதிய மன்றங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதற்கு முன்பு ரஜினிகாந்தின் அனுமதி பேரில் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

20 வருடங்களுக்கு முன்பு அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக சத்யநாராயணா செயல்பட்டு வந்தார்.

தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு… அதன் பின்னர் அரசியல் விலகல் உள்ளிட்ட அறிவிப்புகள் வந்த போது சுதாகர்தான் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சுதாகர் இன்று ஜனவரி 6 உடல்நல குறைவால் காலமானார்.

இந்த தகவலை ரஜினியின் பி ஆர் ஓ தரப்பிலும் ரசிகர் மன்றங்கள் சார்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ரஜினி ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

#SuperstarRajinikanth’s Fans Association Head VM Sudhakar passed away this morning due to prolonged illness.
This is so unfortunate… Rest in peace.. ???

Address 152/16 Lotus colony, 6th Avenue, N block , Annanagar east chennai 600102.

அதுபோல கதையோடு என்னிடம் யாரும் வரவில்லையே.; சூர்யாவிடம் கமல் ஆதங்கம்

அதுபோல கதையோடு என்னிடம் யாரும் வரவில்லையே.; சூர்யாவிடம் கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை நிச்சயம் பிடிக்கும்.

அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.

இவரது பல பேட்டிகளில் கமல்ஹாசனை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

இந்த நிலையில் முன்னணி ஊடகத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல்ஹாசனை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில் சிலவற்றை இங்கே..

“கமல் சினிமா சந்தைக்கான படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார். ஒரு போதும் சோர்வடைய மாட்டார்.

பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார், அடுத்தும் பெரிய படத்துடன் தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது, நான் யோசிப்பேன். ஒரு தோல்வியிலிருந்து அவர் நினைத்தால் மிக எளிதாக வெளியே வரலாம்.

சகலகலா வல்லவன் படம் சக்சஸ் ஃபார்முலா படங்களில் ஒன்றாக பேசப்படுவது. அடுத்து ஏன் அவர் அதே மாதிரி ஒன்றோடு திரும்ப வருவதில்லை?.

ஆனாலும் அவர் அபூர்வ சகோதரர்கள் தான் யோசிக்கிறார்?. இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது.

“ஜெய் பீம்’ பார்த்து அரை மணி நேரம் பேசினார். இந்தப் படம் எங்கேயும் சினிமாவாகத் தெரியவில்லை. நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன் ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை” என கமல் என்னிடம் கூறினார்.

இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.

#KamalHaasan
#Suriya l #filmistreet

no one came to me with like jai bhim story.; Kamal is worried about Surya

ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஃபார்ஸி.

இதில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது.

மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.

செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது.

அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி -யை எழுதியுள்ளனர்.

படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டிகே கூறுகையில்..

“தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளிடையே பயனித்துப் படமாக்கியுள்ளோம்.” என்றார்.

Crime Thriller Farzi Starring Shahid Kapoor and Vijay Sethupathi release updates

More Articles
Follows