BREAKING அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் திடீர் மரணம்

BREAKING அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைப்பதற்காக உலக அளவில் பல மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 10 – 15 வருடங்களாக மட்டுமே ரஜினிகாந்த் எந்த புதிய மன்றங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதற்கு முன்பு ரஜினிகாந்தின் அனுமதி பேரில் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

20 வருடங்களுக்கு முன்பு அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக சத்யநாராயணா செயல்பட்டு வந்தார்.

தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு… அதன் பின்னர் அரசியல் விலகல் உள்ளிட்ட அறிவிப்புகள் வந்த போது சுதாகர்தான் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சுதாகர் இன்று ஜனவரி 6 உடல்நல குறைவால் காலமானார்.

இந்த தகவலை ரஜினியின் பி ஆர் ஓ தரப்பிலும் ரசிகர் மன்றங்கள் சார்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ரஜினி ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

#SuperstarRajinikanth’s Fans Association Head VM Sudhakar passed away this morning due to prolonged illness.
This is so unfortunate… Rest in peace.. ???

Address 152/16 Lotus colony, 6th Avenue, N block , Annanagar east chennai 600102.

அதுபோல கதையோடு என்னிடம் யாரும் வரவில்லையே.; சூர்யாவிடம் கமல் ஆதங்கம்

அதுபோல கதையோடு என்னிடம் யாரும் வரவில்லையே.; சூர்யாவிடம் கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை நிச்சயம் பிடிக்கும்.

அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.

இவரது பல பேட்டிகளில் கமல்ஹாசனை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

இந்த நிலையில் முன்னணி ஊடகத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல்ஹாசனை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில் சிலவற்றை இங்கே..

“கமல் சினிமா சந்தைக்கான படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார். ஒரு போதும் சோர்வடைய மாட்டார்.

பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார், அடுத்தும் பெரிய படத்துடன் தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது, நான் யோசிப்பேன். ஒரு தோல்வியிலிருந்து அவர் நினைத்தால் மிக எளிதாக வெளியே வரலாம்.

சகலகலா வல்லவன் படம் சக்சஸ் ஃபார்முலா படங்களில் ஒன்றாக பேசப்படுவது. அடுத்து ஏன் அவர் அதே மாதிரி ஒன்றோடு திரும்ப வருவதில்லை?.

ஆனாலும் அவர் அபூர்வ சகோதரர்கள் தான் யோசிக்கிறார்?. இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது.

“ஜெய் பீம்’ பார்த்து அரை மணி நேரம் பேசினார். இந்தப் படம் எங்கேயும் சினிமாவாகத் தெரியவில்லை. நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன் ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை” என கமல் என்னிடம் கூறினார்.

இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.

#KamalHaasan
#Suriya l #filmistreet

no one came to me with like jai bhim story.; Kamal is worried about Surya

ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஃபார்ஸி.

இதில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது.

மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.

செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது.

அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி -யை எழுதியுள்ளனர்.

படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டிகே கூறுகையில்..

“தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளிடையே பயனித்துப் படமாக்கியுள்ளோம்.” என்றார்.

Crime Thriller Farzi Starring Shahid Kapoor and Vijay Sethupathi release updates

இது வதந்தி அல்ல.; பிரின்ஸ் பிக்சர்ஸ் உடன் இணையும் ஆண்ட்ரூ லூயிஸ்

இது வதந்தி அல்ல.; பிரின்ஸ் பிக்சர்ஸ் உடன் இணையும் ஆண்ட்ரூ லூயிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’.. கார்த்தி நடித்த ‘தேவ்’ & ‘சர்தார்’.. சசிகுமார் நடித்த ‘காரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களது புதிய படத்தை இயக்குபவர் ஆண்ட்ரூ லூயிஸ்.. இவர் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைக்காரன்’ படத்தை இயக்கியவர்.

சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘வதந்தி’ என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஆண்ட்ரூ லூயிஸ் இணையும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று ஜனவரி 5ல் வெளியிட்டுள்ளனர்.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[email protected]_Pictures excitedly
announce that they have signed #Kolaigaran and #Vadhandhi fame director @andrewxvasanth for his next film in Tamil. More details soon.

@lakku76 @venkatavmedia @johnmediamanagr https://t.co/q2RrpZbKpw

Prince pictures have signed director andrews for his next

நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பை துவங்கிய சமந்தா . வைரலாகும் புகைப்படம்

நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பை துவங்கிய சமந்தா . வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தாவைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அந்த அழகான பெண் சாகுந்தலம் படத்திற்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார், மேலும் தனது சமூக ஊடக சுயவிவரத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் இன்ஸ்டாகிராமில் : “இந்த பைத்தியக்காரத்தனம், சோகம் மற்றும் உலகில் உள்ள இழப்புகள் அனைத்திற்கும் கலை எனது மருந்து. அதன் மூலம் நானே வீட்டிற்குச் செல்வேன். -நிக்கி ரோவ் #ஷாகுந்தலம்”

என பகிர்ந்து டப்பிங்கை தொடங்கிய சமந்தாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Samantha resumes work after long time – photo goes viral

மருத்துவமனையில் இருந்து மார்வெல் ஸ்டார் கொடுத்த ஹெல்த் அப்டேட்

மருத்துவமனையில் இருந்து மார்வெல் ஸ்டார் கொடுத்த ஹெல்த் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட கடுமையான விபத்தைத் தொடர்ந்து ‘அவெஞ்சர்ஸ்’ நடிகர் ஜெர்மி ரென்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஜனவரி 2 ஆம் தேதி நடிகரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், புதன்கிழமை தனது உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார் . அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்து ஒரு செல்ஃபியை பதிவிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் அன்பை அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Marvel star gives health update on social media after being hospitalised

More Articles
Follows