கமல் படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் சித்தார்த்

கமல் படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தனக்கான டப்பிங் பகுதிகளை கமல்ஹாசன் ஏற்கனவே முடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை சித்தார்த் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

actor siddharth started his dubbing for indian 2 movie

”கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சூட் அப்டேட்.; தனுஷ் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்

”கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சூட் அப்டேட்.; தனுஷ் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவராஜ்குமார் நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அக்டோபர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller movie shivarajkumar wrapped up his shooting

ரஜினிகாந்த் 171 படத்தில் KGF நடிகர்.; லோகேஷ் போடும் செம ஸ்கெட்ச்

ரஜினிகாந்த் 171 படத்தில் KGF நடிகர்.; லோகேஷ் போடும் செம ஸ்கெட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்வில் ரஜினி, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்ற கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.

மேலும் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படங்களை அடுத்து ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ‘கே ஜி எஃப்’ நடிகர் யஷ் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

KGF fame Actor Yash will be part of Rajini 171

சிம்பு விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு.; நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் ஆப்பு

சிம்பு விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு.; நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் ஆப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கவும் முடிவெடுத்துள்ளனர்.

அவர்களிடம் உள்ள புகார் பட்டியலில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால் மற்றும் யோகிபாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரெடின் கிங்ஸ்லி, குணசித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் பிரச்சினை செய்து வரும் நடிகர்கள் மீது நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் ஒரு புது படம் ரிலீஸ் அன்று நெகட்டிவ் விமர்சனங்கள் செய்யும் விமர்சகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Shooting and Dubbing issue Action against top Actors

ஜெயிப்பது யார்.? ரஜினி – விஜய்க்காக மாறாத சன் பிக்சர்ஸ் அஜித்துக்காக மாறுமா.?

ஜெயிப்பது யார்.? ரஜினி – விஜய்க்காக மாறாத சன் பிக்சர்ஸ் அஜித்துக்காக மாறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இதன் படப்பிடிப்பு ஜூன் இறுதியில் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு முதன்முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்க உள்ளார் அஜித் என தகவல்கள் வந்துள்ளன.

இதனை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார்.

சிவா இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.

மேலும் ரஜினி நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ படத்தையும் சிவா இயக்கியிருந்தார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் அஜித் நடிப்பில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய பட பூஜையிலோ அல்லது இசை வெளியீட்டு விழாவிலோ பட ப்ரோமோஷன் விழா நிகழ்ச்சியிலோ அஜித் பங்கேற்க மாட்டார் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித் படத்தை தயாரிக்கவில்லை.

ஆனால் ரஜினி, விஜய், சூர்யா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வார்கள். மேலும் சன் டிவி தங்கள் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

தற்போது முதன்முறையாக சன் பிக்சர்ஸ் உடன் அஜித் இணையவுள்ளார்.

எனவே அஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிக் கொள்ளுமா.? சன் பிக்சர்ஸ் என பொருத்திருந்து பார்க்கலாம்.

Will Sun pictures change their formula for Ajith

‘லியோ’ பட போஸ்டரில் தம்மடிக்கும் விஜய்..; சத்யராஜ் விளக்கம்

‘லியோ’ பட போஸ்டரில் தம்மடிக்கும் விஜய்..; சத்யராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகர் சத்யராஜ்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு.. ‘லியோ’ பட போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற டிசைன் படம் இடம்பெற்றது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சத்யராஜ் பதில் அளிக்கையில்…

“தாங்கள் ஏற்று கேரக்டருக்கு ஏற்ப சில விஷயங்களை நடிகர்கள் செய்துதான் ஆகவேண்டியுள்ளது.

நான் வில்லனாக நடித்த போது புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு.” என்றார் சத்யராஜ்.

Sathyraj talks about Vijays smoking poster in LEO

More Articles
Follows