‘சார்லி சாப்ளின் 2′ போல பார்ட் 3 பார்ட் 4 வர வேண்டும்.. : பிரபுதேவா

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequelsஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2′.

அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரித்துள்ளார்.

வருகிற ஜனவரி 25-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரபுதேவா பேசியதாவது:

இப்பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்த நாட்கள் ரொம்ப சந்தோஷமான நாட்கள்.

படத்தைப் பார்த்து சிலர் திட்டுவார்கள், சிலர் பாராட்டுவார்கள்.

மற்றவர்கள் படத்தை திட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கு இல்லயா. அதைப் போல நம்ம படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘சார்லி சாப்ளின் 2′ படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இப்படம் பாகம் 3, 4, 5 என வர வேண்டும்” என பேசினார் பிரபு தேவா.

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequels

Overall Rating : Not available

Latest Post