யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adah Sharmas Yoga and cleaning video goes viralபிரபு மற்றும் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தவர் அடா சர்மா.

இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் யோகா செய்துகொண்டே வீட்டை சுத்தப்படுத்துவது எப்படி என செய்து காட்டுகிறார்.

“வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். அதான்ப்பா உடற்பயிற்சி செய்யல. நேரம் பத்தல என பலரும் சொல்கிறீர்கள்.

என்னிடம் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என கூறி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Adah Sharmas Yoga and cleaning video goes viral

https://www.instagram.com/p/B-HZw0YnSR_/

 

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Action King Arjuns next risk for his daughter Aishwarya தென்னிந்திய சினிமாவின் ஆக்சன் கிங் என்றால் அது அர்ஜுன் தான்.

படத்தில் நடிப்பதோடு இல்லாமல் படங்களை தயாரிப்பதில் இயக்குவதிலும் ஆர்வம் இவருக்கு உண்டு.
தற்போது சில படங்கள் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் இவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

இப்படம் வெற்றி பெறவில்லை.

இதன் பின்னர் சொல்லி விடவா எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் தன் மகளை நடிக்க வைத்தார். தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படம் வெளியானது.

இந்த படமும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இயக்குநராகிறார் அர்ஜுன். இந்த முறை தெலுங்கு சினிமா செல்கிறார். அங்கு தான் இந்த அறிமுகம்.

இந்த முறையாவது இவரின் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துவோம்.

Action King Arjuns next risk for his daughter Aishwarya

BREAKING கொரோனா பாதிப்பு.: கோடிகளை கொட்டி கொடுத்த பவன் கல்யாண்

BREAKING கொரோனா பாதிப்பு.: கோடிகளை கொட்டி கொடுத்த பவன் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts உலகத்திற்கே எமனாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ்.

இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றன.

பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.

ஆக.. மொத்தம் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts

லூசுங்க என்ன வேணா சொல்லிக்குங்கடா… அஜித் ரசிகர்களை கிழித்த கஸ்தூரி

லூசுங்க என்ன வேணா சொல்லிக்குங்கடா… அஜித் ரசிகர்களை கிழித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kasthuri condemns Dirty Ajith fans நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை இடாத நாட்களே இல்லை எனலாம்.

தற்போது கொரோனா பீதி இருக்கும்போதும் கூட இவர்களின் சண்டை நீடித்து வருகிறது.

இந்த முறையையும் கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் வம்பிழுக்க கடுப்பான கஸ்தூரி, காட்டமான ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அதில்… ஊரையே மூடிட்டாங்க, இந்த #dirtyajithfans லூசுங்க வாயை மூடாது போல. என்ன வேணா சொல்லிக்குங்கடா.

நான் என் அறக்கட்டளையில் இருக்கற 60 குடும்பங்களுக்கு மூணு வாரத்துக்கு சோத்துக்கு வழி பண்ண ஓடுறேன். No time for nonsense. Everybody be safe. 21 days !!!!
என பதிவிட்டுள்ளார்.

Kasthuri scolds Thala fans as Dirty Ajith fans

தன் வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்க கமல் சம்மதம்

தன் வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்க கமல் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Pandemic Kamal wants convert his home to hospitalகொரோனா வைரஸை பாதிப்பில் இருந்து மீள இன்று முதல் இந்தியா முழுவதும் 144 உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

ஆனால் கொரோனா வைரசின் தீவிரம் புரியாமல் மக்கள் ஆங்காங்கே இன்னமும் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தனது வீட்டை மருத்துவமனைக்கு தர தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ என்று பதிவு செய்துள்ளார்.

அரசு சம்மதம் சொல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Corona Pandemic Kamal wants convert his home to hospital

பெப்சி-க்கு கமல் 10 லட்சம்; ஷங்கர் 10 லட்சம்; தனுஷ் 15 லட்சம் உதவி

பெப்சி-க்கு கமல் 10 லட்சம்; ஷங்கர் 10 லட்சம்; தனுஷ் 15 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Dhanush Shankar and Lokesh donates to FEFSIகொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தினக்கூலியை நம்பியுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகள் தங்களால் முடிந்த பண உதவியை கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் வேலையிழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு, நடிகர் நடிகைகள் உதவிட வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் 1 லட்சம் என பல்வேறு பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

Kamal Dhanush Shankar and Lokesh donates to FEFSI

More Articles
Follows