தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் ‘ஆதிபுருஷ்’.
இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.
‘ஆதிபுருஷ்’ படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
அதே சமயத்தில், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது.
இதனை படக்குழு “ரூ.410 கோடி குளோபல் பாக்ஸ் ஆபிஸ்” என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
prabhas’s adipurush film six days rs 410cores collections