15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் நடித்த நகுல்

Nakul stillsட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில், நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியி ருக்கிறேன். தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. திரைக்கதை யாசிரியர் ராஜேஷைத்தவிர டெக்னிசீயன்ஸ் எல்லாரும் புதியவர்கள். இவர்களின் சப்போர்ட் எனக்கு இருந்ததால் இப்படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது என்றார்.

நடிகர் நகுல் பேசுகையில், ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் செய். இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் உள்ளது.

‘நடிகா நடிகா’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும் போது வியப்பாகவும், மனதிற்கு திருப்தியாக இருந்தது.

Overall Rating : Not available

Related News

தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்…
...Read More
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில்…
...Read More

Latest Post