என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mahesh Babuஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் நாளை வெளியாகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மகேஷ்பாபு.

அவர் பேசும்போது….

‘தமிழகத்தில் பெரிய பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள். நான் யாருடனும் போட்டி போட இங்கு வரவில்லை.

‘ஸ்பைடர்’ படம் 125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்தால்தான் வசூலை ஈட்ட முடியும்.

அதனால் தான் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் என்று நான் பட்டங்களை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பட்டங்கள் மீது எனக்கு விருப்பமில்லை.

தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கேட்பதில்லை.

தமிழிலும் அதுபோன்ற பட்டங்களை வேண்டாம். எல்லோரும் என்னை நேசித்தால், ரசித்தால் போதும்.

இரண்டு மொழிக்கும் ஏற்ற கதைகள் இருந்தால் தமிழிலும் என் நடிப்பை தொடர்வேன்.” என்றார்.

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phonesகன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’.

சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.

கன்னடத்தில் 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறேன்.

இது என் 5வது படமாக உருவாகியுள்ளது.

தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இது வழக்கமான பேய் படமாக இருக்காது.

இன்று எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அதில் மெசேஜ் வழியாக பேய் வருகிறது.

அது மற்ற போன்களுடன் தொடர்பை ஏற்படுத்தி செல்கிறது என்கிற கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன்.’’ என்றார்.

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phones

ஸ்மூல் ஆப்ஸில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

ஸ்மூல் ஆப்ஸில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

smule senthilஸ்மூல் என்பது பாடலுக்கான செயலி (ஆப்ஸ்) ஆகும்.

இந்த செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துக் கொண்டால் நாம் அதில் உள்ள இசைக்கு ஏற்ப பாடி வீடியோவை ரெக்கார்டு செய்துக் கொள்ளலாம்.

அண்மைகாலமாக இதில் நிறைய ஆண்களும் பெண்களும் தங்களுக்கு பிடித்த பாடல்களை ஜோடியாக பாடி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை அதிலிருந்து நீக்க வேண்டும் என அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Ilayaraja songs should not be used in Smule App

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினிதான் சரியானவர்… கமல்

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினிதான் சரியானவர்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini is right person to have alliance with BJP says Kamalhassan2018 புத்தாண்டு தினத்தில் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை கமல் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

அவரும் இது தொடர்பான பேட்டிகளை பல்வேறு ஊடகங்களில் கொடுத்து வருகிறார்.

எனவே தினமும் கமல் பற்றிய ஒவ்வொரு செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டுள்ளனர்.

“ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர் ரஜினி. அவர்தான் அந்த பாஜக கூட்டணிக்கு ஏற்றவர்.

நான் பகுத்தறிவுவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்.

கம்யூனிசவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்” என கூறியுள்ளார்.

Rajini will be right person to have alliance with BJP says Kamal

ஆரவ்வை இப்பவும் காதலிக்கிறீங்களா? ஓவியா பதிலால் ஓ போட்ட ரசிகர்கள்

ஆரவ்வை இப்பவும் காதலிக்கிறீங்களா? ஓவியா பதிலால் ஓ போட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya aaravசென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா.

இந்நிகழ்வின் போது ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி ஆடல் பாடல் என அமர்க்களம் செய்து ரசிர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது சில ரசிகர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் இருந்த அனுயாவை ரொம்ப பிடிக்கும். அந்த நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை இருக்கிறது.

மேலும் ஒரு ரசிகர்… “ஆரவ்வை இன்னும் காதலிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

“எனக்கு உங்கள் அனைவரிடம் இவ்வளவு அன்பு இருக்கும் போது, ஏன் நான் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? உங்கள் அனைவரையும் காதலிக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டார் ஓவியா.

இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் ஓ என சத்தம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அட… ஓவியாவுக்கு நல்லா பேசவும் தெரிஞ்சிருக்கே…

Whether Oviya still love Aarav Here is the answer

oviya dance at omr

பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டுதான் இருக்காங்க… டிராபிக் ராமசாமி

பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டுதான் இருக்காங்க… டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Some actors acting in real life too says Traffic Ramasamy at NariVettai audio launchசேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா. ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இயக்குனர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரிவேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.

இந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.

சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.. அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர்.

இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.

இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என வாழ்த்தி பேசினார்.

அடுத்ததாக வாழ்த்திப்பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வேம்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப்போவது உறுதி. இந்தப்படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன்.

அதுமட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.

இதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்]நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடி வரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும்.

அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும். இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது” என்று படக்குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

இறுதியாக மேடையேறிய அய்யனார் வீதி’ இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், படக்குழுவினரை வாழ்த்தி பேசியதுடன், அடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள யதார்த்த நிலையையும் சுட்டிகாட்டினார்.

“பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார். அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும் கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும்.

இன்று இந்த விழாவில் இயக்குனரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள். ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்றுபோய்விட கூடாது.

நாளை இந்தப்படம் ரிலீசாவதற்குள் பல பிரசன்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டுமொத்தமாக நீங்கள் அளிக்க வேண்டும்.

பார்த்தால் பசிதீரும் என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால் தான் பசி தீரும்.

உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தா எந்த மோதலையும் ஜெயிக்கலாம்” என படக்குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர்மக்களின் ஆதரவும் இயக்குனருக்கு தொடர்ந்து இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.

அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை,

படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நகைச்சுவை நடிகர் போண்டாமனியின் மகன் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான்.

படத்தின் கதாநாயகி மகாலட்சுமி வேகமாக பைக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராம்.

இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடைபெற்றபோது, அங்கே ‘வேம்புலி வர்றான்’ என்கிற சாமி பாடல் படமாக்கப்பட்டபோது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீனியர் நடிகரான விஜய் கண்ணன், நிச்சயமாக மழை பெய்யும் பாருங்கள் என கூறினாராம்.

படக்குழுவினர் யாரும் அதை நம்பாத நிலையில், மழை அடித்து ஊற்றியதாம். இதைப்பார்த்து மகிழ்ந்துபோன ஊர்மக்கள் கிடாவிருந்து அளித்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம்..

இயக்குனர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர்.

மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல.. ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்துகொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தை மறக்கிறார்.

அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்.

தயாரிப்பு ; சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ
கதை, திரைகதை இயக்கம் ; ஆகாஷ் சுதாகர்
இசை ; சார்லஸ் தனா
படத்தொகுப்பு ; C.கணேஷ்குமார்
மக்கள் தொடர்பு ; செல்வரகு

Nari Vettai Audio Launch Photos (14)

More Articles
Follows