BREAKING சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்; ஒரே வருடத்தில் 3 பேரை இழந்த நடிகர் மகேஷ்பாபு

BREAKING சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்; ஒரே வருடத்தில் 3 பேரை இழந்த நடிகர் மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமானவர் கிருஷ்ணா.

இவர் தெலுங்குத் திரையுலகில் 350+க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கில் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர்.

மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் கிருஷ்ணா.

இவருக்கு தற்போது 79 வயதாகிறது.

கிருஷ்ணா

நேற்று இவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எனவே செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து மகேஷ் பாபுவின் ரசிகர்களும் கிருஷ்ணாவின் ரசிகர்களும் இந்திய திரையுலகினரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை கிருஷ்ணா காலமானார்.

கூடுதல் தகவல்கள்…

இந்த 2022ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் தன் சகோதரர் ரமேஷ் பாபு என்பவரை இழந்தார் நடிகர் மகேஷ்பாபு. 2022 ஜனவரியில் இறந்தார் ரமேஷ்.

ரமேஷ் பாபு

அண்ணன் ரமேஷ் பாபுவும் நடிகரே. 20க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார். மேலும் மகேஷ் பாபு நடித்த சில படங்களையும் தயாரித்துள்ளார் ரமேஷ் பாபு.

ஓரிரு மாதங்களுக்கு முன் செப்டம்பர் மாதத்தில் தன் தாய் இந்திராவை இழந்தார்.

தற்போது தன் தந்தையை இழந்து உள்ளார் நடிகர் மகேஷ்பாபு. இது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்திரா

Mahesh Babus daddy Actor Krishna passed away

—–

31 May 1942 – 15 Nov 2022 ??
.
.
#SuperStarKrishna #RipSuperStarKrishna #KrishnaGaru #RestInPeace

————–

2022 was Unfortunate and Devastating for Mahesh Babu

08/01/2022 – Brother Ramesh Babu Garu’s death,

28/09/2022 – Mother Indira Devi Garu’s death,

15/11/2022 – Father Krishna Garu’s death!

Stay Strong Mahesh Garu

#RipKrishnaGaru
#SuperStarKrishna
#Krishna #MaheshBabu

‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்.: அரை நிர்வாணமாக பெண்.; சரக்குடன் ஜாலியான கார்த்தி.!

‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்.: அரை நிர்வாணமாக பெண்.; சரக்குடன் ஜாலியான கார்த்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய அன்பறிவ் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (குழந்தைகள் தினம்) நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட்டனர். அதில் கையில் சரக்கு பாட்டிலுடன் ஒரு ஷோபாவில் படுத்து இருக்கிறார் கார்த்தி. அவருக்கு அருகில் நிறைய சரக்கு பாட்டில்கள் கிடக்கின்றன.

மேலும் அரை நிர்வாண கோலத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டோ பிரேமில் தங்க நிறத்தில் கார்த்தியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthis Japan movie first look goes viral

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 24ல் இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடித்த ‘ப்ரின்ஸ்’ படம் வெளியானது.

காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர்ந்தது.

ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான்.

அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.

ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் (சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்.

இந்த நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் ‘ப்ரின்ஸ்’ படம்.

தீபாவளி வெளியீடாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது.

நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.

Sivakarthikeyans Prince OTT release date is here

ஆர்.ஜே. பாலாஜி படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ்

ஆர்.ஜே. பாலாஜி படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது.

‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா – கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சலூன்

Hip hop Aadhi next with Vels films

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

Ishari Ganesh won president election of Indian taekwondo federation

தெய்வத்தையும் வலிமையையும் இணைத்து உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர்

தெய்வத்தையும் வலிமையையும் இணைத்து உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஐமா’ எனும் இத்திரைப்படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் கூட இத்திரைப்படத்தை எல்லா ஆடியின்ஸ்களும் குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ்களும்
ரசிக்கும்படி இத்திரைபடத்தின் திரைக்கதையும் காட்சிகளும், பாடல்களும், பின்னணி இசையும் அமைந்து உள்ளதே இத்திரைபடத்தின் சிறப்பு ஆகும் என்றாலும் தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஐமா திரைப்படம் ஒரு புதுமையான புதுவைகையான அனுபவத்தையும் உணர்வையும் கண்டிப்பாக உங்களுக்குள் உருவாக்கும்.

புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும்.

அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம் தான் ‘ஐமா’.

ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஐமா’.

ஐமா

அது என்ன ஐமா?

ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குனர்

எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்க் கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ‘ஐமா’.

துரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ‘ஐமா’ திரைப்படம் எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு.

ஐமா

இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல். ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

‘ஆருயிரே…’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார்
தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட ஒரு புது இயக்குனர்.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ‘ஐமா’ படத்தைத் தயாரித்துள்ளார்.

ஐமா

இப்படத்தில் கதாநாயகன் யூனஸ்,கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன், சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் கே.ஆர். ராகுல்.

இவர் பல விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார் சில குறும்படங்களிலும் சில மலையாள திரைப்படங்களிலும் இசைஅமைத்துள்ளார்

இத்திரைப்படத்தில் பாடல் வரிகளை தமிழ் புதுகவிஞர் பாடலாசிரியர் அருண்மணியன் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு செய்துள்ளவர் விஷ்ணு கண்ணன். இவர் சில படங்களில் பணியாற்றி உள்ளார் .படத்தொகுப்பு அருண் ராகவ். இவரும் சில மலையாளப் படங்களில் பணியாற்றியவர்.

இந்த திரில்லர் திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உண்டு. சண்டைப் பயிற்சி அஷ்ரப் குருக்கள், கலை இயக்குனர் ஜீமோன் செய்துள்ளனர்.

ஐமா

படத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா கூறும்போது…

பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது.

9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது .

இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஐமா

Aima A survival suspense thriller with a first of its kind story premise

AIMA is a survival thriller despite being an intense genre has been crafted with ingredients that will favour universal audiences, especially family crowds for its engrossing screenplay, songs and background score. It will endow a fresh, unique and emotional experience for the Tamil movie audiences and film buffs.

Tamil audiences have never missed to recognize, appreciate and acclaim movies that offer them a fresh and unique experience. AIMA has been created with the same belief, banking trust on Tamil audiences.

So, what’s the actual meaning of Aima?

Ai (ஐ) in Tamil represents God, and Ma (மா) signifies Strength.

The filim revolves around the game of survival. A villain who has decreed death, whether wins or loses. Two people who play the game of death believing that there is a destiny of good beyond the destiny of bad. Aima is tha movie that tells the story of the miracles that happen between the struggles of those two.

The film is written and directed by Rahul R Krishna, who has made short films and advertisements in Tamil and Malayalam.

Shanmugam Ramasamy is producing this movie for the banner of Tamil Exotic Films. The film features Yunus – Hero , Evlin Juliet – Heroine , Akil Prabhakaran, Sisira, Megha malu Manoharan, and Shaji as the titular characters with producer Shanmugam Ramasamy playing a pivotal role.

K.R. Rahul, who has composed music for many advertisements, is striking musical chords for this movie. Vishnu Kannan is the cinematographer, Art director – Jeemon and Arun Raghav who has worked in a few Malayalam movies is the editor. The film has a couple of full-length songs and 6 small-bit tracks. Ashraf gurukal has choreographed stunt sequences. All the technicians in the film are completely new to the Tamil movie industry.

The Movie’s All songs lyrics written by Tamil Newpoet Lyricist Arunmaniyan

Shedding lights on the film, director Rahul R Krishna says,

“I have crafted this film with a story that completely banks on suspense elements and visual substantiality. The audience will be glued to the screens from the beginning till the end. When missing a single scene or shot, they’ve more chances of losing out a major chunk of the film, and will not understand the narrative. We have made the film with so much of suspenseful attributes. Precisely, the entire film revolves around 9 characters predominantly.

The film has been shot across Kuttikkanam, Kumuli,- and Palakkad in Kerala. I have made this film accordingly suiting the regional tastes of our audiences.

Although the movie is a suspense thriller, it will have adequate elements that will enthrall the audiences of all age groups and from all walks of life,” says the director.

More Articles
Follows