மகேஷ்பாபு 28 சூட்டிங் ஸ்டார்ட்..; அனல் தெறிக்கும் சண்டையுடன் ஆரம்பித்த த்ரிவிக்ரம்

மகேஷ்பாபு 28 சூட்டிங் ஸ்டார்ட்..; அனல் தெறிக்கும் சண்டையுடன் ஆரம்பித்த த்ரிவிக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தை தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.

இது தற்காலிகமாக SSMB28 என அழைக்கப்படுகிறது.

இதில் நாயகியாக ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டாலும் கதையில் சில மாற்றங்களை மகேஷ் பாபு சொன்னதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் உடன் சில பிரச்சினைகள் உருவானதால் தற்போது ராம் லக்ஷ்மன் என்ற இரட்டை சண்டைப் பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி மகேஷ் பாபுவின் 28 வது படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இன்று முதல் காட்சியாக ராம் லக்ஷ்மன் அமைக்கும் சண்டை காட்சிகளை படமாக்க உள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

இங்கு இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருப்பதால் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு நடித்து வருகிறார் மகேஷ் பாபு.

மேலும் இந்த படத்திற்காக அவர் நீண்ட தலை முடி முடியை வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

#SSMB28 Shoot Begins Today with an Action Sequence in Ram-Laxman Choreography

கோல்டன் குளோப்.; டாப் 10ல் ஒருவர்.; இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த ராம்சரண்

கோல்டன் குளோப்.; டாப் 10ல் ஒருவர்.; இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் ஆஸ்கர்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் திரைத்துறைக்கான விருது கோல்டன் குளோப்.

இதில் 2022-க்கான விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது.

இதனால் இயக்குனர் ராஜமவுலி இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் சிவப்பு கம்பள நிகழ்வில் கலந்து கொண்டு நேர்த்தியான உடை அணிந்த டாப் 10 நபர்களின் பட்டியலை கோல்டன் குளோப் விருது கமிட்டி அறிவித்துள்ளது.

அதில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்த ராம்சரண் முதல் பத்து நபர்களில் இடம் பெற்றுள்ளார்.

இதில் இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையையும் ராம்சரண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RamCharan rated amongst the top 10 Best Dressed on the red carpet at Golden Globes Awards

Mega Power Star @alwaysRamCharan rated amongst the top 10 Best Dressed on the red carpet at @GoldenGlobes Awards 2023.
Dresses in an Indian ensemble by @Tarun_Tahiliani , Ram Charan is the first Indian actor to make it to the list.

#RamCharan @onlynikil

பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி மீண்டும் உறுதி!

பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி மீண்டும் உறுதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபாஸின் ஆதிபுருஷ் கண்டிப்பாக ஜூன் 16, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது. இதையே இன்று பிரபாஸ் படத்தின் தயாரிப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

3டி திரைப்படம் திட்டமிட்ட தேதிக்கு வராது என்ற வதந்திகளுக்கு மத்தியில் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது.

கடந்த நவம்பரில் ரிலீஸ் தள்ளிப்போனபோது, ​​இயக்குனர் ஓம் ராவத், “பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்க, படத்தில் பணிபுரியும் குழுக்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும். இந்தியாவே பெருமைப்படும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்” என்றார். ஆகையால் இந்த கால தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.

Adipurush Release date reconfirmed!

தளபதி 67 அப்டேட் : பிக்பாஸ் பிரபலம் இணைந்தார்.; 20 வருடங்களுக்கு மீண்டும் விஜய்யுடன் இணைந்த மிஷ்கின்

தளபதி 67 அப்டேட் : பிக்பாஸ் பிரபலம் இணைந்தார்.; 20 வருடங்களுக்கு மீண்டும் விஜய்யுடன் இணைந்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கும் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொடைக்கானலும் அதன்பின் காஷ்மீரும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், மனோபாலா, ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்விராஜ், சுகுமாரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கவிருக்கிறாராம்.

தற்போது முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார்.. இது தொடர்பாக அவரது பேட்டியில்..

“விஜய் கொஞ்சம் கூட மாறவில்லை. அவர் இன்னும் இளமையாக மாறியிருக்கிறார்.

அவருடன் செம்ம சண்டை காட்சி.. ரத்தம் வரவளவுக்கு அடித்து சண்டையிட்டோம்.

லோகேஷ் கனகராஜ் சிறப்பாக படத்தை எடுத்து வருகிறார்.. நடிப்பை சொல்லி கொடுப்பதில்லை.. தேவையில்லாத காட்சிகளை அவர் எடுப்பதில்லை. அவரது இயக்கம் எனக்கு பிடித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்..

கூடுதல் தகவல்..

2002ல் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskin joined vijay’s thalapathy 67

இன்றும் மக்கள் மனதில் நாயகன் எம்ஜிஆர் தான்.; கமல்ஹாசன் நெகிழ்ச்சி

இன்றும் மக்கள் மனதில் நாயகன் எம்ஜிஆர் தான்.; கமல்ஹாசன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் இதயக்கனி என தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.

இன்று ஜனவரி 17ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல நலத்திட்டங்களையும் கொண்டாட்டங்களையும் எம் ஜி ஆர் ரசிகர்களும் தொண்டர்களும் பக்தர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்தாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,”தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan tweeted about MGR on his birthday

பயப்படுகிறாரா ரஜினி.? ஆல்ரெடி 3 சூப்பர் ஸ்டார்.; இப்போ பான் இந்தியா நடிகர்.!

பயப்படுகிறாரா ரஜினி.? ஆல்ரெடி 3 சூப்பர் ஸ்டார்.; இப்போ பான் இந்தியா நடிகர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இதில் தமன்னா ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் முக்கிய வேடங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் சுனில் என்பவரும் இணைந்து இருக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

பொதுவாக ரஜினி படங்களில் ரஜினி தான் எல்லாமே.. அவரின் கேரக்டர் மட்டுமே பெரிய அளவில் பேசப்படும். மற்ற நடிகர்கள் பெயரளவில் மட்டுமே இருப்பார்கள்.

ஆனால் தற்போது முதன்முறையாக மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வருவதால் முந்தைய படங்களின் தோல்வியால் ரஜினி பயந்து விட்டாரா.? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான ‘தர்பார்’ & ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Pan India Actor Sunil joins in the sets of Jailer

More Articles
Follows