ஓர் அதிரடி வெற்றி கொடுக்க இணையும் ஏஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன்

ஓர் அதிரடி வெற்றி கொடுக்க இணையும் ஏஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி 7ஆம் அறிவு, விஜய் நடித்த கத்தி சர்க்கார் துப்பாக்கி, அஜித் நடித்த தீனா ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் பெரும்பாலும் சமூக கருத்துடன் கூடிய தரமான படங்களாகவே இருக்கும்.

இவர் கடைசியாக இயக்கிய மகேஷ்பாபுவின் ஸ்பைடர், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து விஜய் படத்தை இயக்க ரெடியானார். அந்த படமும் கைவிட்டுப் போனது.

எனவே ஒரு வெற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஏஆர். முருகதாஸ்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் மதுவின் லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது ‘அயலான்’ & ‘மாவீரன்’ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான ‘பிரின்ஸ்’ படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே தற்போது ஓர் அதிரடியான வெற்றியை கொடுக்க ARM & SK இருவரும் இணைவது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss – Sivakarthikeyan join to deliver a blockbuster hit

யார் சூப்பர் ஸ்டார்.? ‘கவர்ச்சி பாம்’ ஷகிலா கொடுத்த ஷாக்கான பதில்

யார் சூப்பர் ஸ்டார்.? ‘கவர்ச்சி பாம்’ ஷகிலா கொடுத்த ஷாக்கான பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் ‘கவர்ச்சி பாம்’ என்று சொன்னால் அது நடிகை ஷகிலா தான்.

இவரது ஆபாச படங்கள் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மம்மூட்டிக்கு போட்டியாக கருதப்பட்டது.

எனவே ஷகிலா படத்திற்கு தடை விதிக்கவும் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது தனிக்கதை.

ஒரு கட்டத்தில் கவர்ச்சி வேடங்களை துறந்து ஆபாச வேடங்களை மறந்து சின்ன சின்ன வேடங்களில் அடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் யார் சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அதற்கு ஷகீலா பதிலளிக்கும் போது..

“ரஜினியை தான் சந்தித்தது பற்றிய அனுபவத்தை கூறியுள்ளார்.. எளிமையான மனிதர் அவர்.. என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு.? 20 வருடங்களுக்கு முன்பு ஆக்ஷனில் அசத்திய நடிகை விஜயசாந்தி தான் லேடி சூப்பர் ஸ்டார்.

இன்று அந்த இடத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா.. அவர்களெல்லாம் தண்ணீரை கூட அளவாகத்தான் குடிப்பார்கள்.

தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.. அதுபோன்ற அர்ப்பணிப்புக்கு கடின உழைப்புக்கு தான் அவர்களுக்கு இந்த அளவிற்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது.

என்னை எடுத்துக் கொண்டால் நான் எல்லாம் தினமும் பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன்.. நானெல்லாம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில்லை” எனவும் பதில் அளித்துள்ளார் ஷகிலா.

Actress Shakeela reply to Who is Super Star?

சுந்தர் சி & சந்தானம் பிறந்தநாள் விழாவில் விஜய்சேதுபதி – லைகா – ரெட் ஜெயன்ட் டீம்

சுந்தர் சி & சந்தானம் பிறந்தநாள் விழாவில் விஜய்சேதுபதி – லைகா – ரெட் ஜெயன்ட் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கிய படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

இவரது படங்களில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பல காமெடியன்கள் ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் நடித்துள்ளனர்.

சுந்தர் சி - சந்தானம்

சுந்தர் இயக்கத்தில் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் சந்தானம் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 21ஆம் தேதி சுந்தர் சி மற்றும் சந்தானம் ஆகிய இருவருமே தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

சுந்தர் சி - சந்தானம்

இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் நடிகர் சுந்தர் C மற்றும். சந்தானம் இருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் . M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures ராகுல், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத் குமார், தயாரிப்பாளர் K. விஜய் பாண்டி, நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுந்தர் சி - சந்தானம்

Vijay Sethupathi at Sundar C and Santhanam birthday party

டபுள் ரோலில் நடித்து படம் தயாரித்த தனுஷ் பட வில்லன்.; வைரலாகும் டிரைலர்

டபுள் ரோலில் நடித்து படம் தயாரித்த தனுஷ் பட வில்லன்.; வைரலாகும் டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜோஜு ஜார்ஜ்.

இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகராவார். இவர் நாயகனாக நடித்த படத்தை தான் ‘விசித்திரன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் ஆர்.கே.சுரேஷ்.

தற்போது மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இரட்டா”.

ஜோஜு ஜார்ஜ்

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இரட்டா

ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ் தனது கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது.

பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

‘இரட்டா’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி தவிர, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவு செய்ய. அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுத மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோவின் இசை அமைக்கிறார்.

மனு ஆண்டனி படத்தின் எடிட்டர் ஆக உள்ளார். ஆர்ட் ஒர்க் திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ், சண்டை காட்சிகளை கே.ராஜசேகரின் இயக்கி உள்ளார்.

விரைவில் திரைக்கு வருகிறது இரட்டா.

இரட்டா

Joju George in dual role Iratta trailer goes viral

ஹாலிவுட்டில் படமெடுக்க ராஜமௌலியை அழைக்கும் ‘அவதார்’ டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

ஹாலிவுட்டில் படமெடுக்க ராஜமௌலியை அழைக்கும் ‘அவதார்’ டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா அரங்கில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் விருது கோல்டன் குளோப் விருது.

அந்த கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர். டைரக்டர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆர்.ஆர்.ஆர்

இந்த விருது கோல்டன் குளோப் பாடல் பிரிவில் சிறந்த பாடலாக ‘நாட்டு.. நாட்டு..’ பாடல் விருதை வென்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சியில் விருதை பெற்றுக்கொண்டார்.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல டைரக்டர் ‘அவதார்’ புகழ் ஜேம்ஸ் கேமரூனை அப்போது ராஜமௌலியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில்… “நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால் சொல்லுங்கள்.. நாம் அது குறித்து பேசுவோம் என ராஜமௌலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன்

JamesCameron invite Rajamouli to direct Hollywood movies

#Rajamouli #JamesCameron

@JimCameron @ssrajamouli @RRRMovie #RRRMovie #GoldenGlobes2023

OFFICIAL ரஜினியை தொடர்ந்து விஷாலுடன் இணையும் பான் இந்தியா நடிகர்

OFFICIAL ரஜினியை தொடர்ந்து விஷாலுடன் இணையும் பான் இந்தியா நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் சமீபத்தில் இணைந்தார்.

இது பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இவர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்.

இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்திலும் இணைந்திருக்கிறார் என சற்றுமுன் அறிவித்தனர்.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வினோத்குமார் தயாரித்து வருகிறார்.

நாயகியாக ரித்து வருமா நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

ஜி வி பிரகாஷ் இசை அமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

சுனில்

Sunil join Vishal starring ‘Mark Antony’

More Articles
Follows