ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyan priya bhavani shankar“பியார் பிரேமா காதல்”, “தாராள பிரபு” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் ஹரீஷ் கல்யாண் டுவிட் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பிரியா பவானி சங்கர்…, ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல… நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

இதற்கு ஹரிஷ் கல்யாண்..

காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக சொல்வோம் என பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தான் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது ஒரு ரீமேக் படம் தொடர்பான அறிவிப்புதான். எனவே நாமும் காத்திருப்போம்.

Actor Harish Kalyan reveals his new film update tomorrow

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Cmகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதிமுதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சில வணிக நிறுவனத்திற்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரு சில வணிகங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீடிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மற்ற விவரங்கள் இதோ…

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு.

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும்

வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி

அரசு, தனியார் நிறுவனங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரை.

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

TN extends lockdown till october 31st

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..; சூட்டிங்கில் பங்கேற்கும் ரஜினி..; ரசிகர்கள் கவலை..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..; சூட்டிங்கில் பங்கேற்கும் ரஜினி..; ரசிகர்கள் கவலை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini in annathaரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘அண்ணாத்த’ .

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் (தன் மறைவுக்கு முன்னர்) ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதங்களில் இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை மிரட்ட வரும் விஜய் பட வில்லன்

மார்ச் இறுதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே மற்ற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பட கலைஞர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனா பிரச்னை முடிந்த இயல்புநிலை திரும்பிய பின்னரே ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 8-ஆம் தேதி சாலை மார்க்கமாக காரில் ஹைதராபாத் செல்ல இருக்கிறார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை முற்றிலும் முடிவு பெறாத நிலையில் ரஜினிகாந்த் சூட்டிங் செல்வது சரியாகுமா.?

தலைவரின் படத்தை விட எங்களுக்கு தலைவரின் உடல்நிலை ஆலோக்கியமே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படக்குழுவினருக்கும் இது தொடர்பான ஆலோசனைகளை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வழங்கி வருகின்றனர்.

Fans reaction on Rajinikanth resumes Annaatthe shooting

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & டைரக்டர் ஷங்கர் இருவரும் முதன்முதலில் இணைந்த படம் ‘சிவாஜி’.

2007ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கியது.

இதுநாள் வரை சில இடங்களில் இப்பட சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.

6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா?

இந்த படத்தில் சீரியஸான கருப்பு பணத்தை பற்றி மெசேஜ் இருந்தாலும் காதல், காமெடி காட்சிகளும் நிறையவே இருந்தன.

ஒரு காட்சியில் பயங்கர கருப்பு நிறத்தில் அங்கவை, சங்கவை என்ற கேரக்டரில் இரு பெண்கள் சாலமன் பாப்பையா மகளாக நடித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் நிஜத்தில் சிகப்பா அழகா இருக்காங்க… இதோ அவர்களின் புகைப்படங்கள்…

angavai sangavai real pic

Angavai Sangavai real pic goes viral

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp charanபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கு MGM மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.

எனவே இதற்கு விளக்கமளிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர்கள் & எஸ்பிபி மகன் சரண் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எஸ்பிபி சிகிச்சைக்கான பில் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எஸ்பி சரண் பதிலளித்தாவது…

” MGM மருத்துவமனைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல புரிதல் உள்ளது.

சிகிச்சைக் கட்டணத்தைப் பற்றியே ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? 10 கோடி ரூபாயாக இருந்தால் கூட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ரூ. 50 லட்சமாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?

நாங்கள் என் அப்பாவை இழந்திருக்கிறோம்.

அதிலிருந்து மீள எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

தொடர்ந்து எழும் வதந்திகளை குறித்து தொடர்பு கொண்டு விசாரிக்காதீர்கள்.

நான் சினிமாக்காரன்.. சினிமா எடுக்க வருவேன். உங்களை சந்திப்பேன்” என பேசினார்.

SP Charan refutes rumours about father’s unpaid hospital bills

‘பிக்பாஸ்’ முகென் ராவ்வை ஹீரோவாக்கியது ஏன்.? ‘வெற்றி’ இயக்குநர் அஞ்சனா பேட்டி

‘பிக்பாஸ்’ முகென் ராவ்வை ஹீரோவாக்கியது ஏன்.? ‘வெற்றி’ இயக்குநர் அஞ்சனா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjana ali khanஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய
இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.

தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். பிக்பாஸ் முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது….

இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது.

“வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது.

இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான்.

வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனித்தத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை.

முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுதனமாக இருப்பவர்.

தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இப்பட கதாப்பத்திரத்தின் குணத்துடன் ஒத்துபோககூடியவர். முகேன் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொளிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.

மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ராண்டி எனும் ரத்னவேலு மற்றும் ஆண்டனி ஆகியோருடன் 25 ஆண்டுகால பழக்கம் எனக்கு. அவர்கள் “வெற்றி” படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் திரைக்கதை கேட்டவுடனே இப்படத்தில் பணியாற்ற இருவரும் ஒத்துக்கொண்டார்கள்.

ஏனெனில் ரசிகர்களை எளிதாக கவரும் தன்மையுடன் அவரவர் துறைகளில் பல புதுமைகளை படைக்க நிறைய வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தது. ரத்னவேலு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளாராக விளங்குபவர். இந்திய அளவில் கவனம் பெற்ற எந்திரன், சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்தவர்.

தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலஹாசனின் “இந்தியன் 2 “ படத்திலும் பணியாற்றி வருகிறார். மிகப்பெரும் படங்களில் பணியாற்றும் அதே நேரம் கலைக்கு மதிப்பளித்து, தரமான சிறு படங்களிலும் பணியாற்ற தவறுவதில்லை அவர். வெகு சிறு பட்ஜெட் படமான குமாரி 21F தெலுங்கு படத்தில் பணியாற்றினார் அவர்.

ரஜினிகாந்த், மகேஷ்பாபு போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் இடைவெளியில் இம்மாதிரியான சிறு படங்கள் செய்து, இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் எங்கள் படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு பெருமை.

தமிழ் சினிமாவில் எடிட்டிங்கில் பல புதுமைகள் செய்து அசத்தியவர் ஆண்டனி. ஒரு ஷாட்டை வைத்து கதையின் பல முனைகளை மாற்றக்கூடியவர். அவருடான கதை விவாதம் பெரும் சந்தோஷம் தந்தது. திரையில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நிவாஸ் K பிரசன்னா இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் மிகுந்த திறமை கொண்டவர். இசையின் பல பிரிவுகளிலும் எளிதாக பயணம் செய்து அசத்துபவர் அவர் எங்கள் படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி.

அமித்தா ராம் எங்கள் குழுவில் இணைந்திருப்பது எங்கள் குழுவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பலம். படத்தை பற்றிய அவரது நுண்ணிய விவரங்கள் ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது.

தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிப்பது எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “வெற்றி” திரைப்படம் இந்த அனைத்து நம்பிக்கைளும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெருமென நம்புகிறேன் நன்றி.

Director Anjana ali khan about her new film Vetri

More Articles
Follows