ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

3 நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி டீசர்.

‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார்.

இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது…‘

‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்..

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன்.

அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்,என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்: அரவிந்தசாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி, தம்பிராமையா, ஜெயபிரகாஷ்..

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: செல்வா

இசை: இமான்

ஒளிப்பதிவு:கோகுல் பினாய்

எடிட்டிங்: ஆண்டனி

பாடல்கள்:விவேகா, அருண்ராஜா காமராஜ்

நடனம்:ஸ்ரீதர், தினேஷ்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன்
கணேஷ் ரவிச்சந்திரன்

Actor Arvindswami in 6 different avatars in Vanangamudi

ஜிவி. பிரகாஷ் & காயத்ரி இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த சீனு ராமசாமி

ஜிவி. பிரகாஷ் & காயத்ரி இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயத்ரி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இதில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி.

இவர்களுடன் செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்டோரும் உண்டு்.

பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இந்தப் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இப்பட டைட்டில் லுக் போஸ்டரை நடிகரும், எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டனர்.

GV Prakash and Seenu Ramasamy new film is titled Idi Muzhakkam

நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.

இவரே தயாரித்து நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே 2 முறை (சிம்பு மற்றும் பிரபுதேவா) லவ் ப்ரேக் அப் ஆனவர் நயன்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 வருடங்களாக காதலில் உள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாராவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.

அப்போது நயன் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார் நயன்தாரா.

Nayanthara talks about her engagement ring

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ராதிகா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி ரஜினி கமல் சரத்குமார் முதல் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி வரை அனைவருடனும் நடித்துள்ளார்.

தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிசியாகவே இருக்கிறார் ராதிகா.

இன்றோடு இவர் திரைக்கு வந்து
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது.

அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார்.

43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் படபிடிப்பு இடைவேளையில் சர்பிரைசாக கேக் கொண்டுவரப்பட்டு பாட்டு பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

ராதிகா அவர்களுக்கு டைரக்டர் ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

ராதிகாவிற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… “அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில் முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள்.

இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ராதிகா,” என பாராட்டி வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.

#43YearsOfRadhika

Sarath Kumar wishes his wife Radika on completing 43 years in cine industry

ரோல்ஸ் ராய்ஸ் நுழைவு வரியை கட்டிய விஜய் & தனுஷ்..; இத்தனை லட்சங்களா.?

ரோல்ஸ் ராய்ஸ் நுழைவு வரியை கட்டிய விஜய் & தனுஷ்..; இத்தனை லட்சங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் விவகாரத்தில் கோர்ட்டில் வரி விலக்கு கேட்டு இருந்தனர் விஜய் மற்றும் தனுஷ்.

இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இருவரையும் நீதிபதி சுப்ரமண்யம் காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.

விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு செய்திருந்தார்.

48 மணிநேரத்தில் தனுஷ் ரூ 30 லட்சம் கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விஜய், தனுஷ் இருவருமே நுழைவு வரி கட்டுகிறோம் என தங்கள் தரப்பில் தெரிவித்தனர்.

விஜய், தனுஷ் இருவருமே ஏற்கெனவே பாதி நுழைவு வரியை கட்டியிருந்தனர்.

தற்போது விஜய் மீதமுள்ள ரூ 40 லட்சத்தையும் தனுஷ் மீதமுள்ள ரூ 30 லட்சத்தையும் நுழைவு வரியாக கட்டிவிட்டதாக சொல்லப்படுகின்றது.

Vijay and Dhanush pays the entire entry tax for his Rolls Royce car

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் ஆனார்

இந்த நிலையில்தான் ‘பீஸ்ட்’டில் இப்போது தனுஷும் இணைய போகிறார் என ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறது.

ஒருவேளை பாடல் பாடவோ அல்லது பாடல் எழுதவோ தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சில தினங்களுக்கு முன்பு நெல்சன் & அனிருத்தின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதி பாடலாம் என்ற தகவல்கள் கசிந்தன.

Dhanush joins Thalapathy Vijay’s Beast ?

More Articles
Follows