செப்டம்பரில் இணைய காத்திருக்கும் தனுஷ்-சிம்பு

செப்டம்பரில் இணைய காத்திருக்கும் தனுஷ்-சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushசுதந்திர தின ஸ்பெஷலாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தனுஷின் தொடரி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இப்படத்தின் இறுதியான ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படமும் செப்டம்பரில் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப்பட்டவுடன் இதன் ரிலீஸ் தேதியும் உறுதியாகும் எனத் தெரிகிறது.

ஆகையால், செப்டம்பரில் சிம்பு-தனுஷ் ஆகிய இருவரது படங்களும் இணைந்தே வர வாய்ப்புள்ளது.

கபாலி கோட்-ஜோக்கர் கோட்… என்ன வித்தியாசம்.?

கபாலி கோட்-ஜோக்கர் கோட்… என்ன வித்தியாசம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joker movie stillsஎன்னங்க சார் உங்க சட்டம்..? ஜோக்கர் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

குக்கூ இயக்குனர் ராஜீமுருகன் இயக்கியுள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டி, காயத்ரி, மு,ராமசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஷான் ரோல்டன்.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கபாலி படத்தில் ஏழைகளின் உரிமைக்காக ரஜினி போராடுவார். அதில் சூப்பர் ஸ்டார் கோட் சூட் அணிந்திருப்பார்.

ஜோக்கர் படத்திலும் நாயகன் சோமு கோட் அணிந்துள்ளார். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டார்?

அது ‘சூப்பர் ஸ்டார் கோட். இது புவர் ஸ்டார் கோட்’ என ராஜீமுருகன் பதிலளித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை பின்னுக்கு தள்ளிய ராஜமௌலி

சூப்பர் ஸ்டார் ரஜினியை பின்னுக்கு தள்ளிய ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini rajamouliஇந்திய நடிகர்களிலேயே அதிகபட்ச சம்பளம் பெறுபவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்கிறார்.

கபாலியில் ரஜினியின் சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என ரூ. 80 கோடியை தொட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இவரது சம்பளத்தை பாகுபலி இயக்குனர் மிஞ்சி விட்டதாக செய்திகள் வந்துள்ளன.

பாகுபலி 2 தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் 3 மொழிகளின் வியாபாரத்தில் இவருக்கு பங்கு அளிக்கப்பட உள்ளதாம்.

சம்பளம் மற்றும் லாப பங்கீட்டு தொகை ஆகியவற்றை சேர்த்து, ரூ. 100 கோடியை தொடும் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

விஜய் படத்தலைப்புக்கு எதிர்ப்பு; அஜித் அலர்ட் ஆவாரா?

விஜய் படத்தலைப்புக்கு எதிர்ப்பு; அஜித் அலர்ட் ஆவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vijayபரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என பெயர் வைக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

எனவே, இதனையறிந்த எம்ஜிஆர் பொதுநல சங்கத்தினர் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், எம்.ஜி.ஆரின் தொண்டர் படை சார்பில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பிடப்படலாம் என தெரிகிறது.

இதுவும் எம்ஜிஆர் படத்தலைப்பு என்பதால், இதற்கு எதிர்ப்பு வரும் முன்பே அஜித் அலர்ட் ஆவாரா? என்பதை பார்ப்போம்.

சூர்யாவுடன் முதன்முறையாக இணையும் பிரபலங்கள்

சூர்யாவுடன் முதன்முறையாக இணையும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vel suriya stillsசிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு, கிராமத்து மண்ணில் வேட்டிய மடிச்சி கட்டி களம் இறங்க போகிறார் சூர்யா.

இப்படத்தை கிராமத்து பின்னணியில் உருவாக்கவிருக்கிறார் முத்தையா.

இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இந்தக் கூட்டணியில் கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக இணையவுள்ள நிலையில், இப்படத்திற்கு இமான் இசையமைக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இது இன்னும் உறுதியாகாத நிலையில், ஒருவேளை நடந்தால், சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthi sureshசிவகார்த்திகேயன் நடிப்பில், 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ரெமோ.

இப்படத்தின் வியாபாரம் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது ஒவ்வொரு ஏரியாவாக உரிமைகள் விற்கப்பட்டு வருகின்றன.

கோவை உரிமையை சீனியர் விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறார்.

மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவை ஜி.என். அழகர் சாமி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்.

More Articles
Follows