JUST IN ‘ரஜினி’ பெயரில் படம்.; ஹீரோ எவரு.? தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா தலைவர்.?

JUST IN ‘ரஜினி’ பெயரில் படம்.; ஹீரோ எவரு.? தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா தலைவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா வரலாற்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது.

தமிழ் சினிமாவின் மார்கெட்டை உலகளவில் கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி என்று சொன்னால் அது மிகையல்ல.

ப்ளாக் & ஒயிட் பட காலம் தொடங்கி அனிமேசன் மோசன் கேப்சரிங் படம் வரை நடித்து இன்றும் நம்பர் 1ஆக திகழ்கிறார்.

தற்போது இவர் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்காக இவரின் சம்பளம் மட்டும் ரூ 100 கோடியை தாண்டிவிட்டது.

இந்த நிலையில் இவரின் பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது.

‘ரஜினி’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை வெங்கடேஷ் இயக்குகிறார்.

பழனிவேல் என்பவர் தயாரிக்க அம்ரீஷ் இசையமைக்கிறார்.

விஜய் சத்யா என்பவர் நாயகனாக நடிக்கிறார். இவரை பற்றிய வேறு தகவல்கள் இல்லை. புதுமுகமாக இருக்கலாம்.

ரஜினி என்ற படத்தலைப்புடன் A Common Man என்கிற வார்த்தையும் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளது.

ரஜினியை அவரது ரசிகர்கள் தலைவர் என்றே அழைக்கின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இன்று பூஜையுடன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ரஜினி என்ற பெயரில் ஒரு ஹிந்தி படம் உருவான போது ரஜினி குடும்பத்தார் அந்த தலைப்புக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A new movie title gets Super Star name ?

Rajini film

சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தார் சமக சரத்குமார்.

தாங்கள் கேட்ட சீட் கிடைக்காத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.

பின்னர், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பின்னர் கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சியான தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டது.

இதனை அடுத்து சமக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

இதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது “தேர்தல் களத்தில் உள்ள சமக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க வேண்டும்.

எனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை” என்றார்.

மேலும், “அதிமுக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றக்கூடியதாக உள்ளன.

மக்கள் உழைத்து பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே, இலவசப் பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை” எனவும் சரத்குமார் கூறினார்.

SMK candidates list announced by Sarath Kumar

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் இப்பட சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் 8 மாதத்திற்கு பிறகு இதன் சூட்டிங் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது.

அங்கு படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே சூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் “தான் அரசியலுக்கு வரப்போவதில்லை. மன்னித்து விடுங்கள் மக்களே” என அறிக்கை விட்டார். (2020 டிசம்பர் 29)

இதையடுத்து நிறுத்தப்பட்ட சூட்டிங் சென்னையில் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி ரீலிசாக உள்ளது.

Famous villain joins Rajiniaknth’s Annatthe

Capture

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venbaகுடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள்.

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது.

சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதில் கௌதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார் வெண்பா. இவரின் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது.

பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன் எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.

கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல் தான் குடும்பகதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும்.

முன்பே சொன்னதுபோல் விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள்.

எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும்.

அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.

Actress Venba is on board for Gautham Karthik’s next film

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டனர்.

இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில், தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது.

இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Soorarai Pottru is out of OSCARS

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு் நொந்து போனவர்களுக்கு ஆறுதலாய் அமைந்தது அஜித்தின் ‘பில்லா’ ரீ-ரீலீஸ்.

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தின் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இதனை தல ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சில ரசிகர்கள் சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி ஆட்டம் போட்டனர்.

இன்னா தல இப்பூடி பண்றாங்கோ.. என அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை திட்டியப்படி சென்றனர்.

சமீபத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு எல்லை மீறிய ரசிகர்களை கண்டித்து அஜித் அறிக்கை விட்டார். தற்போது அடுத்த அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். இனி என்னாகுமோ?

அலப்பறை Starts in @Priya_Cinemas

#BillaInPriyaCinemas
#Valimai

Ajith fans attrocities in billa re release theatres

More Articles
Follows