*96* படத்தில் இளவயது ராம்-ஜானுவாக நடித்தவர்களிடையே காதல்.?

96 Jaanu fame Gowri clarifies her relationship with Aadhitya Baskarபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த படம் 96.

 

இதில் இளவயது விஜய் சேதுபதி, திரிஷாவாக ஆதித்யா மற்றும் கௌரி என்ற இருவரும் நடித்திருந்தனர்.

 

விஜய்சேதுபதி த்ரிஷா காதலைப் போல் இந்த பருவ வயது காதலும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

 

இந்நிலையில், இவர்கள் இருவரும் நிஜ வாழ்வில் ஒன்றாக இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது.

 

இதனால் அவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் சில வலைத்தளங்களில் வெளியானது.

 

இதனையடுத்து கௌரி என்ற அந்த இளம் பெண் கூறியதாவது…

96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். அது மட்டுமே. நாங்கள் இருவரும் நிஜத்தில் காதலிக்க வில்லை.

எங்களைப் பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த குட்டி ஜானு.

நடிகர் எம்எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா என்பதும் கௌரி ஒரு பத்திரிகையாளர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

96 Jaanu fame Gowri clarifies her relationship with Aadhitya Baskar

Overall Rating : Not available

Latest Post