தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
‘உலகம்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை “உலகம்மை”. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்கம் – விஜய் பிரகாஷ்
தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்ஷ்ன்ஸ்)
இசை – இசைஞானி இளையராஜா
கதை (நாவல்) – சு.சமுத்திரம்
ஒளிப்பதிவு – K.V.மணி
வசனம் – குபேந்திரன்
திரைக்கதை – சரவணன்
கலை – வீரசிங்கம்
படத்தொகுப்பு – ஜான் அப்ரஹம்
உடைகள் – ஜெயபாலன்
ஒப்பனை – பாரதி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Gouri G Kishan’s new film is titled Ulagammai