56000 திரைகளில் செப்டம்பர் 6ஆம் தேதி ரஜினியின் 2.0 ரிலீஸ்

New Project (9)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது நடிப்பில் உருவான 2.0 படம் கடந்தாண்டு 2018ல் வெளியானது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை ஷங்கர் இயக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் முதலுக்கு மோசமில்லாத நல்ல வசூலை பெற்றது.

இந்த நிலையில் சீனாவில் படத்தை வெளியிட்டு, பெரிய லாபம் ஈட்ட திட்டமிட்டனர்.

கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட இருந்த நிலையில் ‘தி லயன் கிங்’ படம் வெளியானதால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது வருகிற செப்டம்பர் 6ம் தேதி படத்தை வெளியிடஉள்ளனர்.

சீனாவில் மட்டும் மொத்தமாக 56000 (48000 3டி திரைகள்) திரைகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post