தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவர்கள் தற்போது இணைந்துள்ள மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனவே படத்தின் வியாபாரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாம்.
இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு பல சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டியிட்டதாம்.
இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இவ்வளவு விலைக்கு விஜய் படம் விற்கப்பட்டுள்ளதால், கோலிவுட் வட்டாரமே மெர்சலாகியுள்ளதாம்.
Mersal satellite rights bagged by Zee Tv for Rs 30 crores