தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. போதுமான தண்ணீர் இல்லை என்பதால் திறந்து விடமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.
மேலும் கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இது தொடர்பான ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தா’ படம் கர்நாடகத்திலும் வெளியிடப்படுகிறது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் சித்தார்த். அப்போது அங்கே நுழைந்த காவிரி நீர் போராட்டக்காரர்கள் சித்தார்த்தை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற சொன்னார்கள்.
ஒரு தமிழ் படத்திற்கு இங்கே பிரமோஷன் செய்யக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியின்றி சித்தார்த் பாதியில் புறப்பட்டு சென்றார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..
பல ஆண்டுகளாக திறமையற்ற அரசியல் கட்சியினரால் இந்த நிலை நீடித்து வருகிறது. இதில் கலைஞர்களை புறக்கணிக்க கூடாது என தெரிவித்துள்ளார் .
இதே கருத்தை அவர் கன்னட மொழியில் பதிவிடும்போது என் காவேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் பதிவு செய்யும்போது அந்த வார்த்தையை அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prakash raj double game in cauvery water issue








