தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘விக்ரம்’.
அனிருத் இசையமைக்கிறார்.
இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.
அந்த படத்தின் ஷூட்டிங்கை காரைக்குடியில் நடத்தவுள்ளனர்.
படத்தின் நாயகன் முதல் வில்லன் வரை போஸ்டர்கள் வந்தாலும் ஹீரோயின் யார்? என்ற தகவல்கள் இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் பல டிவி சீரியல்களில் நடித்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் காளிதாஸுக்கு ஜோடியாக நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாக கூறப்படுகிறது.
ஷிவானியும் காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் எனத் தெரிகிறது.
நாயகி குறித்துப் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
செப்டம்பரில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை ‘விக்ரம்’ படக்குழு வெளியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது.
Bigg Boss Shivani is on board for Kamal Haasan’s Vikram