தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவி நடிகை விஜே. சித்ரா கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு தொழிலதிபர் ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் சித்ராவின் தற்கொலைக்கு கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டு. பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி இரண்டு பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார் ஹேமந்த்.
இந்த வழக்கிலும் தற்போது ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ சீட்டு மோசடி குறித்து 2015இல் அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
VJ Chithra husband arrested in one more case