அந்தோணிதாசன் சிறந்த மனிதர்.. அவர் ரசிகைகளில் நானும் ஒருத்தி – பாடகி சித்ரா

அந்தோணிதாசன் சிறந்த மனிதர்.. அவர் ரசிகைகளில் நானும் ஒருத்தி – பாடகி சித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

இதன் துவக்கவிழாவில் பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா பேசுகையில்…

அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர்.

தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.

சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கைத்தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.

கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப்பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது.

விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக்கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

#FolkMarleyRecords #AnthonyDaasan

வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு வெளிச்சம் காட்டும் அந்தோணிதாசன் – சீனு ராமசாமி

வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு வெளிச்சம் காட்டும் அந்தோணிதாசன் – சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவிசெய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.

ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அடையாறு இசைக்கல்லூரி முன்னாள் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கிய விழாவில் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் சிஇஓ முருகன் மந்திரம் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை கவிதா மற்றும் கேபிஒய் பாலா தொகுத்து வழங்கினார்கள்.

இயக்குனர் சீனுராமசாமி, சின்னக்குயில் சித்ரா, இசையமைப்பாளர் பாடகர் பிரதீப்குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ், பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட “”நாடோடிப் பாட்டுக்கு“” பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

பத்திரிகைத் தொடர்பு பணியை பிஆர் ஓ குணசீலன் சிறப்பாக செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை சின்னா மற்றும் ராஜா பக்கிரிசாமி சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்…

அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப்போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குறியது.

எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு, அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என்று பேசினார்.

‘துணிவு – வாரிசு’ மோதல்.: கதையே வெற்றியை தீர்மானிக்கும் – திருப்பூர் சுப்ரமணியன்

‘துணிவு – வாரிசு’ மோதல்.: கதையே வெற்றியை தீர்மானிக்கும் – திருப்பூர் சுப்ரமணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரையில் மோத உள்ளன .

இரு படங்களும் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி தான் ‘வாரிசு’ படத்தையும் ஐந்து ஏரியாக்களில் வெளியிடுகிறார்.

ஆனாலும் மற்ற ஏரியாக்களிலும் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் இந்த மோதல் குறித்து தன் கருத்தை தெரிவித்தார்..

அவர் கூறியுள்ளதாவது… “அஜித் – விஜய் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.

‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இரு படங்களுக்கும் சரிசமமாக பிரித்து தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.

அந்தப் படத்தின் கதை தான் வெற்றியை தீர்மானிக்கும்” என தெரிவித்துள்ளார்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ போட இணையும் ‘ஈரம்’ கூட்டணி

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ போட இணையும் ‘ஈரம்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் அறிவழகன், முதல் பட ஹீரோ ஆதியுடன் இணையும் புதிய படம் “சப்தம்” !!

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் (டிசம்பர் 14, 2022) பூஜையுடன் துவங்கியது.

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார்.

ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘ஈரம்’ படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது.

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

‘சப்தம்’ படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல டிசம்பர் 14-ம் தேதி திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நவம்பர் இறுதி வரை படப்பிடிப்பு நடந்ததால் தாமதம் ஆனது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதிய வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும், 30 மார்ச் 2023 அன்று பத்து தல திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா 42 படப்பிடிப்பின் புதிய ஷெட்யூலை தயாரிப்பாளர்கள் சென்னையில் தொடங்கினர்.

இந்த ஷெட்யூலில் சில ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் தற்போதைய ஷெட்யூலில் இருக்கிறார்.

கோவா ஷெட்யூலில் தற்காலப் பகுதிகளுக்கு திஷா பதானி யோகி பாபுவுடன் இணைந்து அதிரடி காட்சிகளில் நடித்து வருகிறார்.

இப்படம் சரித்திரம் (1000 ஆண்டுகள் பழமையான) மற்றும் சமகாலப் பகுதிகளைக் கொண்டிருக்கும் என்றும் சூர்யா முதல்முறையாக ஐந்து விதமான வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

More Articles
Follows