இசைக்கு இளைஞர்.. என் மனதுக்குக் கிளைஞர்..; இளையராஜாவுக்கு கமல் சித்ரா வாழ்த்து

இசைக்கு இளைஞர்.. என் மனதுக்குக் கிளைஞர்..; இளையராஜாவுக்கு கமல் சித்ரா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan ilayarajaஇசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

2.6.1943 இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்தவர் இவர்.

1960களில் பல மேடை நாடகங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தனது தம்பிகளுடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என இசை குழுவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளனர்.

இவரது 33 ஆவது வயதில் “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் இயக்குநர் பஞ்சுஅருணாச்சலம் இவரை இளையராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு “இசைஞானி“ என்ற பட்டத்தை வழங்கினார்.

இந்திய அரசின் தேசிய விருதினை 1985-சாகர சங்கமம் (தெலுங்கு), 1987- சிந்து பைரவி (தமிழ்), 1989- ருத்ர வீணை (தெலுங்கு), 2009- பழஸிராஜா (மலையாளம்), 2016- தாரை தப்பட்டை (தமிழ்) போன்ற படங்களுக்காக 5 முறை பெற்றுள்ளார்.

இசைஞானிக்கு அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்னணி பாடகி சித்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் சித்ரா பாடிய பாடலை பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ( “கிழக்கு வாசல்” படத்திலிருந்து வந்ததே ஓ..குங்குமம்.. என்ற பாடலைப் பாடி வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.)

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Kamal birthday wishes to Ilayaraja

JUST IN புதுவையில் 3 நியமன MLAக்கள் விவகாரம்..; மத்திய அரசு வாதம்..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

JUST IN புதுவையில் 3 நியமன MLAக்கள் விவகாரம்..; மத்திய அரசு வாதம்..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றியது என்ஆர் காங்கிரஸ்.

இந்த கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றது.

எனவே 10+6 எம்எல்ஏக்கள் 6 ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் மே 8ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி சிகிச்சைக்காக , சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்றும் தன் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டனர்.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர்..

இந்நிலையில், அப்போது, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை என மத்திய அரசு வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Madras high court judgement on Pondicherry nominated MLAs

pondy mla

பாலியல் தொல்லை எல்லா துறையிலும் இருக்கு… எனக்கும் நடந்தது.; வேதனையில் நடிகை சோனா

பாலியல் தொல்லை எல்லா துறையிலும் இருக்கு… எனக்கும் நடந்தது.; வேதனையில் நடிகை சோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sonaகவர்ச்சி, காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சோனா.

துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என திகழ்பவர். காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் துணிவான பாத்திரங்களில் கலக்கி வருபவர் தற்போது Colours Tv க்காக “அபி டெய்லர்ஸ்” சீரியலில் முன்னணி பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.

இது குறித்து நடிகை சோனா கூறியதாவது…

சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமா தான் என் வாழ்க்கை. தொலைக்காட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால் அதில் மனதிற்கு பிடித்த மாதிரியான பாத்திரம் அமையாததால், எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் “அபி டெய்லர்ஸ்” வாய்ப்பை மறுக்க முடியவில்லை.

இதில் நாயகன், நாயகி மற்றும் என்னுடைய பாத்திரத்தை வைத்து தான் மொத்த கதையும் நகர்கிறது. மிகவும் வித்தியாசமான பாத்திரம். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

தமிழில் ஆரம்பத்தில் கவர்ச்சி கதாப்பத்திரங்களில் நடித்ததால் இப்போது வரையிலும் கவரர்ச்சி கதாப்பத்திரங்கள் தான் அதிகம் வருகிறது.

மலையாளத்தில் அப்படி இல்லை அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறுப்பட்ட பாத்திரங்கள் செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பது தான் என் விருப்பம். இப்போது தான் கொஞ்சம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்கள் வர துவங்கியுள்ளது.

“அபி டெய்லர்ஸ்” சீரியலை “வாலிப ராஜா” படத்தை இயக்கிய சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார்.

படத்தில் வேலை பார்த்த குழு தான் இந்த சீரியலிலும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சீரியல் போல இருக்காது படம் போல தான் இருக்கும்.

இந்த கதாப்பாத்திரம் செய்ய அதுவும் ஒரு முக்கிய காரணம். நிஜத்தில் நான் ரொம்பவும் எளிமையாக ஜாலியாக இருக்கும் ஆள், ஆனால் எனது கதாப்பத்திரம் மிகவும் அழுத்தமிக்க தைரியமான பிஸினஸ்
வுமன் பாத்திரம் என்னுடைய இயல்புக்கு நேரெதிரானது. என்னால் எல்லா வகை பாத்திரமும் செய்ய முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகும் என நம்புகிறேன்.

சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள் ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு தான். சினிமா தான் என் வாழ்க்கை இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் இருப்பேன் அதில் எந்த மாற்றமுமில்லை.

மாறுபட்ட கதாப்பத்திரங்களுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் Metoo, பாலியல் குற்ற வழக்குகள் குறித்து கருத்து கேட்ட போது…

பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது பாருங்கள் பள்ளியில் இருந்தும் இது போல் குற்றசாட்டுகள் வந்திருக்கிறது.

பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கான முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். திரைத்துறையை பொறுத்த வரை, தனித்து குற்றம் சொல்ல முடியாது சில வருடங்களுக்கு முன் எனக்கும் அது போல் நடந்தது.

அப்போதே அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கான உரிமைக்கு நாம் தான் போராட வேண்டும். அதற்காக அதை கடந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல.

உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள் உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள் மக்களுக்கு தெரியும்.

எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள் வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்து விட்டேன் அது தான் நல்லது என்றார்.

நேற்று எனது பிறந்த நாள். பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

Actress Sona on me too issue

ஆதாயத்திற்காக அல்ல.. ஆத்ம திருப்திக்காக சினிமாவில் களமிறங்கிய கணேஷ் தேசிங்

ஆதாயத்திற்காக அல்ல.. ஆத்ம திருப்திக்காக சினிமாவில் களமிறங்கிய கணேஷ் தேசிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் தமிழ்சினிமா பல்வேறு ஆளுமைகளை கண்டுள்ளது. சரியான திறமைகளோடு வருபவர்களை சரியான நேரத்தில் உச்சத்தில் வைத்து அழகு பார்த்திக்கிறது நமது தமிழ்சினிமா.

அந்த வகையில் நேர்த்தியான பார்வையோடு தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கிறார் கணேஷ் தேசிங்.. பெயரில் எதோ வடநாடு சாயல் இருப்பது போல் தெரியும் கணேஷ் தேசிங் நமது விருதுநகர் காரர்.

பார்ப்பதற்கு தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல… தயாரிப்பாளராக..

யெஸ் மிகச்சிறப்பான கதையம்சங்களை தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில் பீஸ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங்..

இப்படத்தில் மலையாள சினிமாவின் முக்கிய முகம் ஜோதி ஜார்ஜ். நடித்துள்ளார். நடிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற பெருமைக்குரிய ஜோதிஜார்ஜ் நடிக்கும் படத்தை ஷன்பீர் இயக்கி இருக்கிறார்…

சினிமாவிற்கு வந்ததிற்கான காரணம் குறித்தும் தனது கேரியர் குறித்தும் கணேஷ் தேசிங் கூறியபோது…

“சினிமா இண்டஸ்ட்ரி மட்டும் அல்ல…எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்த படிப்பை கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும்/ இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நான் இன்ஜினீயர் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி பற்றிய ட்ரேடிங்கில் இருக்கிறேன்.

Udhaya Pharama என்ற பார்மஸ்ட்டிக்கல் கம்பெனியில் டைரக்டராக இருக்கிறேன். Bitrix global Corp என்று சொந்தமாக ஒரு கம்பெனியும் நடத்தி வருகிறேன். க்ரிப்டோ கரன்ஸி என்ற விசயம் இப்போது பெரிய டாபிக்காக வலம் வருகிறது.

அதைப்பற்றிய விவாதங்களும் விசாரணைகளும் அதிகம் வந்துள்ள நிலையில் நிறையபேர் அது சம்பந்தமாக தொடர்பு கொள்கிறார்கள்.

நான் சினிமாவிற்கு வந்தது ஆதாயத்திற்காக மட்டும் அல்ல.. ஆத்ம திருப்திக்காகவும் தான். திரைக்கலை மூலமாக நிறைய நல்லவற்றை நாம் விதைத்துச் செல்ல முடியும்.

அதனால் தான் படத்தயாரிப்பு என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

நிறைய தகுதி வாய்ந்த படைப்பாளிகள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது. எப்போதுமே வேலை செய்வதை விட வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமுண்டு.

அதனால் தான் இன்ஜினியர் படித்துவிட்டு ஐடி வேலைக்குச் செல்லாமல் வேலை கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் திறமையானவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் நிறையபேர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.

மேலும் பணம் அதிகம் புழங்கும் சினிமாவில் பணம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் நிறைய பெற்ற என்னால் சரியாக நிர்வாகம் செய்ய முடியுமென நம்புகிறேன்.

அந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு கரம் கொடுப்பது போல எங்களின் முதல்படமான ‘பீஸ்’ வந்துள்ளது.

ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டரை தமிழில் விஜய்சேதுபதியும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் ரக்‌ஷன் ஷெட்டியும் வெளியிட்டு வாழ்த்தினார்கள்.

மேலும் நடிகர் ஜெய் அவர்களும் போஸ்டரை வெளியிட்டு பாராட்டினார். எனக்கு நடிக்கும் ஆர்வம் முன்னமே இருந்தாலும் தற்போது தான் அதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறேன்.

Madarase events என்ற மாடலிங் கம்பெனியின் co founder-ஆகவும் இருப்பதால் மாடலிங் துறையில் பெரிய பரிச்சயம் உண்டு. அந்த அனுபவமும் நடிப்பிற்கு பெரிதாக ஊக்கம் கொடுக்கிறது.

அந்த ஊக்கம் பிரகாசமான வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் கணேஷ் தேசிங்.

Peace hero Ganesh Desingh talks about his upcoming film

Tamil film peace

BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

BREAKING சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modiசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவரின் பேசியதாவது..

“மாணவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதில் எந்த சமரசமும் இருக்காது.

மன அழுத்த சூழலில் மாணவர்கள் இருக்கும் போது அவர்களை தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருக்கும் கவலை முடிவுக்கு வரப்பட வேண்டும்.

என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

CLASS 12 EXAMINATION UNDER CBSE IS CANCELLED

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

‘ஜகமே தந்திரம்’ பட ட்ரைலரை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush (2)கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை இன்று ஜூன் 1-ம் தேதி காலை இணையங்களில் வெளியிட்டனர்.

இந்த டிரைலரை வெளியிட்ட தனுஷ் தன் ட்விட்டரில்..

“சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என் ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறாக ஓடிடி தள ரிலீசில் தனக்கு விருப்பமில்லை. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை மறைமுகமாக தந்திரமாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush about his upcoming film release in OTT

More Articles
Follows