மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 9 குறும்படங்களை ‘நவரசா’ என்ற தலைப்பில் வெளியிட உள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்.

இந்த 9 குறும்படங்களை அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரவீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த படங்களில் 40 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த குறும்படங்கள் “கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வழங்க ‘நவரசா’ தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விரைவில் நவரசா ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

navarasa directors
9 Kollywood directors joins for Mani Ratnam’s Navarasa

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார் தனஞ்செயன்.

இப்படத்தை அடுத்து பெங்காலி மொழியில் சூப்பர் ஹிட்டான ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய ‘வின்சி டா’ என்ற படத்தின் தமிழில் ரீமேக் உரிமையை பெற்று அதை தமிழில் படமாக்கவுள்ளார்.

இப்படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ராம் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் தனஞ்செயன்.

டபுள் ஹீரோ படமான இப்படத்தில் நடிக்கவுள்ள ஹீரோக்கள் யார்? என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

Director Ram and Producer Dhananjayan joins for Vinci Da Tamil remake

vinci da

விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் ‘பிக்பாஸ்’ தாத்தா

விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் ‘பிக்பாஸ்’ தாத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh chakravarthy in thuparivalan 2‘சக்ரா’ படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் 2 படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

இப்பட இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் மிஷ்கின் இந்த படத்திலிருந்து விலகினார்.

தற்போது விஷாலே படத்தை தயாரித்து இயக்கி நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் பாதி சூட்டிங் முடிவடைந்துள்ளது.

தற்போது மீதி படப்பிடிப்பை நவம்பர் 9ல் தொடங்கவுள்ளனர்.

இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ரகுமான், கெளதமி உள்ளிட்டவர்கடள நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் நடித்துள்ளதார் என தெரிய வந்துள்ளது.

இவர் அழகன் உள்ளிட்ட படங்களிலும், ஓரிரு சீரியல்களிலும் நடித்துள்ளர்.

தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றுள்ளார். அவரை போட்டியாளர்கள் தாத்தா என அழைத்து வருகின்றனர்.

Bigg Boss Suresh Chakravarthy is part of Vishal in Thupparivaalan2

சிம்பு-கௌதம் இணையும் படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

சிம்பு-கௌதம் இணையும் படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முன்வந்தார் ஞானவேல்ராஜா.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக இணைந்து இந்த படத்தில் நடித்து வந்தனர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டது.

கன்னடத்தில் முப்தி படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.

ஆனால் சிம்புவின் கால்ஷீட் பிரச்சினையால் இயக்குனர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே நார்தன் படத்திலிருந்து விலகினார்.

இதன்பின்னர் படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து வரும் சிம்பு ‘முப்தி’ ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை படத்தை சிலுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Major changes in Mufti tamil remake

sillunu oru kadhal director

‘முத்தின கத்திரிக்கா’ நாயகி பூனம் பாஜ்வாவுக்கு திருமணம்

‘முத்தின கத்திரிக்கா’ நாயகி பூனம் பாஜ்வாவுக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேவல் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

பஞ்சாபி பொண்ணான இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பின்னர் கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா, அரண்மணை 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது வருங்கால கணவரை இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பெயர் சுனில் ரெட்டி.

அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

poonam bajwa marriage

Actress Poonam Bajwa to marry Sunil Reddy

2 சூப்பர் ஸ்டார்களுக்கு சிஸ்டர் ஆகிறார்.; அஜித் பட ரீமேக்கில் கீர்த்தி.?

2 சூப்பர் ஸ்டார்களுக்கு சிஸ்டர் ஆகிறார்.; அஜித் பட ரீமேக்கில் கீர்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshசிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், சூரி, ஸ்ருதிஹாசன் நடித்த படம் ‘வேதாளம்’.

தமிழில் ஹிட்டான இந்த படத்தை தெலுங்கில் ‘ரீமேக் செய்யவுள்ளதை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

இதில் அஜித் பாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க இந்த படத்தை, மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடிப்பில், பில்லா படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் ரஜினி, சிரஞ்சீவி ஆகிய இரு சூப்பர் ஸ்டார்களுக்கும் சிஸ்டராக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh to play Chiranjeevi sister in Vedalam remake

More Articles
Follows