சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navarasaஇயக்குனர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படம் இயக்குநர் பாண்டிராஜுடன் ஒரு படம் என நடித்து வருகிறார் சூர்யா.

தற்போது இந்த படங்களின் சூட்டிங் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீராம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

‘நவரசா’ வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சூர்யா மற்றும் கௌதம் மேனனின் வெற்றி கூட்டணி ‘காக்க காக்க’ & ‘வாரணம் ஆயிரம்’ படங்களில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PC Sree ram gives update on Suriya’s Navarasa

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’, ’கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

90 வயதான இவர் ஜிஎன் ரங்கராஜன் இன்று காலை காலமானார்.

அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் அறிக்கையில்…

நான்‌ சினிமாவில்‌ நுழைந்த காலம்‌ தொட்டு இறக்கும்‌ தறுவாய்‌ வரை என்‌ மீது மாறாத பிரியம்‌ கொண்டவர்‌ இயக்குநர்‌ ஜி.என்‌. ரங்கராஜன்‌. கடுமையான உழைப்பால்‌ தமிழ்‌ சினிமாவில்‌ தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்‌ கொண்டவர்‌.

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ பல திரைப்படங்களைத் தமிழ்‌ ரசிகர்களுக்குத்‌ தந்தார்‌. அவரது நீட்சியாக மகன் ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனும்‌ சினிமாவில்‌ தொடர்கிறார்‌.

கல்யாணராமன்‌, மீண்டும்‌ கோகிலா, கடல்‌ மீன்கள்‌, எல்லாம்‌ இன்பமயம்‌, மகாராசன்‌ என என்னை வைத்துப் பல வெற்றிப்‌ படங்களைத்‌ தந்தவர்‌. என்‌ மீது கொண்ட மாறாத அன்பால்‌, தான்‌ கட்டிய வீட்டிற்கு ‘கமல்‌ இல்லம்‌’ என்று பெயர்‌ வைத்தார்‌. இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக்‌கூடும்‌.

ஜி.என்‌.ஆர்‌ தன்‌ வீட்டில்‌ இல்லையென்றால்‌ ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்‌ ரோட்டில்தான்‌ இருப்பார்‌ என்றே எங்களை அறிந்தவர்கள்‌ சொல்வார்கள்‌. சினிமாவில்‌ மட்டுமல்ல, மக்கள்‌ பணியிலும்‌ என்னை வாழ்த்தியவர்‌. எப்போதும்‌ எங்கும்‌ என்‌ தரப்பாகவே இருந்தவர்‌.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம்‌ செய்து பொலிவோடு இருக்க வேண்டும்‌. கமல்‌ பார்த்தால்‌ திட்டுவார்‌ என்று சொல்லி வந்தார்‌ எனக் கேள்வியுற்றேன்‌. தான்‌ ஆரோக்கியமாக இருப்பதையே நான்‌ விரும்புவேன்‌ என்பதை அறிந்தவர்‌.

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்‌. அண்ணி ஜக்குபாய்க்கும்‌, தம்பி இயக்குநர்‌ ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனுக்கும்‌ குடும்பத்தார்க்கும்‌ என்‌ ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌”

இவ்வாறு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan’s emotional tweet on director Ranga Rajan’s death

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தை நம்பி காத்திருக்கும் சாந்தனு.?

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தை நம்பி காத்திருக்கும் சாந்தனு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanuவிஜய் படம் மாஸ்டரை நம்பி இருந்தார் சாந்தனு. ஏதோ ஒரு துணை நடிகர் போல அவருக்கு அந்த படத்தில் வேடம் தரப்பட்டது.

தற்போது அவரது கைவசம் உள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதில் அதுல்யா நாயகியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்பட ட்ரைலர் வெளியானது.

இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான ’பீர்பால்’ பட தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாந்தனு.

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ‘திம்மரசு’ என்ற டைட்டிலில் ரீமேக்கானது. ஆனால் இன்னும் இந்த படம் ரிலீசாகவில்லை.

விரைவில் ’பீர்பால்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Shantanu to act in Kannada remake for his next

‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu ar rahman‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் சிம்பு கேங்க்ஸ்டராகவும் கௌதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கலையரசன், தீஜே உள்ளிட்டோர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ஏற்கெனவே ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் மற்றும் கிருஷ்ணா இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இந்த ’பத்து தல’ படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளை ஏஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டாராம்.

AR Rahman begun composing for STR’s Pathu Thala

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with his son sanjayநடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

விரைவில் அவர் திரையுலகில் தன் தந்தை போலவோ அல்லது தாத்தா போலவோ (நடிகர் அல்லது இயக்குனர்) ஆவார் என தெரிகிறது.

இந்த நிலையில் சஞ்சயின் வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Vijay son Sanjay video goes viral

இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal ilayarajaமிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இமானுவேல், பிரசன்னா நடிப்பில் 2017ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதால் , இப்படத்தின் இராண்டாம் பாகத்தை படமாக்கி வந்தனர்.

இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க விஷால் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்து வந்தனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலக மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு விஷால் ஒரு ட்விட் பதிவிட்டார்.

அதில்… இசைஞானிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தை இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் போட்டு காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார் விஷால்.

Update on Vishal’s Thupparivaalan 2

More Articles
Follows