எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

நடிகர்கள் – அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அர்ஜூன், அபிஷேக், மகேஷ் மது மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – சஜோ சுந்தர்
தயாரிப்பு – கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் அஜிதா சஜோ
இசை – ஜோஹன்
ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ்
படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார்
கலை இயக்குனர் – கே.கதிர்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்

கதைக்களம்….

ஹீரோ மனோஜ் (அஜ்யராஜ்) ஒரு ஜர்னலிஸ்ட். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆராய்ச்சிக்காக ஓர் இணையதளத்தை பார்க்கும்போது தனது நண்பன் அங்கித்தின் (பிரசன்னா ஷெட்டி) மனைவி திருப்தியின் (அக்ரித்தி) நிர்வாண வீடியோ ஒரு இணையதளத்தில் இருப்பதை பார்த்து விடுகிறார்.

எனவே தனது மற்றொரு நண்பனான டேனியுடன் சேர்ந்து (நிஜய்) அங்கித்திடம் விஷயத்தை கூறுகிறார்.
அப்போதுதான் அவர் ஓர் உண்மையை கூறுகிறார்.

மனைவி எவ்வளவு மறுத்தும், அவளை எப்போதும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக நான் தான் அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறி கதறி அழுகிறார் அங்கித்.

அப்படி என்றால் அந்த வீடியோ இணையத்தளத்திற்கு எப்படி சென்றது? என குழம்புகிறார்.

மன விரக்தியால் அங்கித் தற்கொலை செய்துகொள்கிறார்.

நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் மனோஜும், டேனியும் போலீஸ் அதிகாரி இம்ரானுடன் (ஷான்) இணைந்து, அந்த வீடியோ எப்படி ஆபாச தளத்தில் பதிவிடப்பட்டது என ஆராய்கிறார்கள்.

அப்போது பல தகவல்கள் கிடைக்கிறது.

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சில சேர்ந்து கொள்ளை லாபத்திற்காக இது போன்ற ஆபாச படங்ளை மொபைல் போன் ரிப்பேர் செய்பவர்களிடம் இருந்து வாங்கி அதை இதுபோன்ற வெப்சைட்டுக்கு விற்று விடுகிறார்கள் எனத் தெரிய வருகிறது.

அந்த கும்பலை பிடிக்க நெருங்கிறார்.

ஆனால் வெப்சைட் நடத்துவதால் மட்டும் அவர்களை கைது செய்ய முடியாது என்பதால் ஒரு திட்டம் போடுகிறார் மனோஜ்.

என்ன திட்டம் அது? அவர்களை எப்படி மடக்கி பிடித்தார்? ஆபாச தளம் முடக்கப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளின் விடையே இந்த எக்ஸ் வீடியோஸ்.

கேரக்டர்கள்…

மொபைல் போன் காலத்திற்கு முன்பு, அடுத்தவர் வீட்டு பெட்ரூம்பை ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் இப்போது அந்த வேலையை கேமரா செய்துவிடுகிறது.

எனவே தங்கள் வீட்டில் இருந்தபடியே ரசிக்கிறார்கள்.

ஒரு சிலர் தன் கேர்ள் பிரண்ட்./ மனைவி உடை மாற்றும்போது, குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். நேரம் கிடைக்கும் போது அதை பார்த்து ரசிக்கின்றனர்.

சில நேரங்களில் அந்த மொபைல் ரிப்பேர் அல்லது காணாமல் போனால் அந்த போன் சில விஷமிகள் கையில் கிடைத்து விடுகிறது. அதன்பின்னர் பல பிரச்சினைகள் வரும். அந்த விழிப்புணர்வு பற்றிய படமே இது.

ஒரு சில இயக்குனர்களைப் போல் ஆபாச படத்தை எடுத்து வெற்றி பெற நினைக்காமல், ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் சஜோ சுந்தர்.

கபாலி படத்தில் ரஜினிக்கு பாண்டிச்சேரி முகவரியை தேடி கண்டு பிடிப்பாரோ அந்த விஷ்வாவை தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாத முகங்கள்தான்.

இது ஒரிஜினல் தமிழ் படம் இல்லை என்பதால் நிறைய வசன காட்சிகள் இங்கு ஒத்துப் போகவில்லை.

மற்றபடி நடிகர்கள் படத்திற்கு தேவையான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் பிரபுஜித் ஹைடெக் மிரட்டல்.

நாயகிகள் அக்ரித்தி மற்றும் ரியாமிக்காவின் நடிப்பும் கச்சிதம். இவர்களுக்கான காட்சிகள் குறைவு என்றாலும் இவர்களைச் சுற்றிதான் படத்தின் கதையே நகர்கிறது.

படத்தில் காமெடி இல்லை பாடல்கள் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜோஹன் தன் பேச வைக்கிறார்.

இது ஒரு நீல விழிப்புணர்பு படம் என்றாலும் படத்தின் நீளத்தை குறைத்து நம்மை ஈர்க்கிறார்கள்.

ஏதோ ஒரு சின்ன சின்ன ஆசைக்காக ஆபாச வீடியோக்கள் எடுப்பது நல்லதல்ல.

இதனால் நம் குடும்பத்தை நாமே இழக்க நேரிடும என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கணவரோ, பாய் ப்ரண்டோ யாராக இருந்தாலும் நம் அந்தரங்கத்தை படம் எடுக்கக்கூடாது என பெண்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளனர்.

அதற்காக சில காட்சிகளை கொஞ்சம் ஓவராகவே காட்டிவிட்டார்கள்.

அதுபோல் மொபைல் ரிப்பேர் செய்யும் கடை நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் ப்ளம்பர், எலக்ட்ரீசியன்கள் வந்தால் அவர்கள் கேமரா வைக்க வாய்ப்புண்டு. அதையும் நாம் கவனிக்க வேண்டும் என சில எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.

எக்ஸ் வீடியோஸ்…. நம் வீட்டு பெண்களுக்கு எச்சரிக்கை

Comments are closed.

Related News

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய…
...Read More
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ…
...Read More