தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
அங்காடித்தெரு மகேஷ் என்ற நாயகனை நினைவிருக்கா? அவர்தான் இந்த படத்தின் நாயகன்.
இவரும் இவரது தந்தையும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஓட்டல் எதிரே நாயகி மேக்னாவின் ப்யூட்டி பார்லர் உள்ளது. அப்படியே இவர்கள் சைட் அடிப்பது வழக்கம்.
தந்தையும் மகனின் காதலுக்கு உதவுகிறார். (சூப்பர் அப்பா..)
மகேஷ் மற்றும் நண்பர்கள் ஜாலியாக தண்ணி அடித்து விளையாடி ஊர் சுற்றி வருவது வழக்கம். இவர்களின் விளையாட்டுத்தனத்தால் இவர்கள் நண்பர்களில் ஒருவனின் திருமணம் நின்றுவிடுகிறது.
இந்த கட்டத்தில் ஊரில் அடிக்கடி லாரியில் அடிப்பட்டு நிறைய விபத்துக்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் அனைத்தும் அதிகாலை அல்லது இரவில் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் சமயத்தில் ஊர் தலைவர் சரியாக வந்து காப்பாற்றுவதும் வழக்கம் உள்ளது. மேலும் மணல் கொள்ளையும் போலீஸ் துணையுடன் அரங்கேறுகிறது.
இது அடிக்கடி தொடரவே ஒரு மர்மம்மாக ஊர் மக்களுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகேஷின் தந்தையும் விபத்தில் இறக்கிறார்.
இந்த விபத்துக்களை செய்வது யார்? அவரின் நோக்கம் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
அங்காடி தெருவில் நம்மை அழவைத்தவர் நாயகன் மகேஷ். இதில் ஆரம்ப காட்சியில் மட்டுமே ஸ்மார்ட்டாக வருகிறார். அதன்பிறகு அழுக்காகவே வருகிறார். காதலியிடம் காதலை சொல்லாமல் தவிக்கிறார்.
படத்தின் சூட்டிங்கை எப்போ ஆரம்பித்து எப்போ முடித்தார்களோ தெரியவில்லை. ஒரு சிலகாட்சிகளில் நார்மலா இருக்கிறார். சில காட்சிகளில் ஓவர் குண்டாக தெரிகிறார் மகேஷ்.
படத்தின் நாயகி மேக்னா கண்களாலும் காதல் மொழி பேசுகிறார். தந்தை இழந்த நாயகனுக்கு ஆறுதல் சொல்லும் காட்சிகளில் ரசிக்கலாம்.
மகேஷின் நண்பர்கள் நல்ல தேர்வு. ஒரு சில நேரங்களில் ஹீரோவை விட இவர்களே படு ஸ்மார்ட்டாக இருக்கின்றனர்.
வில்லனாக வரும் சதீஷ் நம்மை கவனிக்க வைக்கிறார்.
இரட்டையர்கள் ரித்தேஷ்-ஸ்ரீதர் இசையில் ஓரிரு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. சில பாடல் முடிந்த உடனே அடுத்த பாடல் வருவது தேவையில்லை.
ஜீரோ பாயிண்ட் மற்றும் அந்த கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்.
காட்சிகள் ஒன்றோடு ஒன்று சரியாக ஒட்டவில்லை. எனவே நாமும் படத்துடன் முழுமையாக ஒட்ட முடியவில்லை.
இயக்குனர் செந்தில்குமார் கதையில் இன்னும் ட்விஸ்ட் வைத்து நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருக்கலாம்.
Veerapuram 220 movie review and rating in Tamil