வனமகன் விமர்சனம்

வனமகன் விமர்சனம்

நடிகர்கள் : ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, வருண், ஷாம் பால், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் : திரு
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏஎல் அழகப்பன்

vanamagan stills 1

கதைக்களம்…

அந்தமான் தீவில் புத்தாண்ட கொண்டாட தன் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் செல்கிறார் நாயகி காவ்யா (சயிஷா)

அப்போது அனுமதி மறுக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு த்ரில்லுக்காக செல்கின்றனர்.

அங்கே எதிர்பாரா விதமாக காட்டுவாசியான நாயகன் மீது காரில் மோதிவிடுகின்றனர்.

இதனால் அவரின் மருத்துவத்திற்காக சென்னைக்கு அழைத்து வந்துவிடுகின்றனர்.

அதன்பின்னர் காட்டுவாசி நம் நாட்டுக்கள் பல கலாட்டக்களை செய்ய அதை ரசிக்கிறார் நாயகி.

இதனிடையில் அந்த காட்டுக்குள் வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுகிறது.

இந்த இரண்டையும் ஒரு முடிச்சில் இணைத்து, ஒரு வளமான விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

vanamagan sayyesha

கேரக்டர்கள்…

தன் பெயரிலேயே ஜெயம் இருப்பதால் அதனை தக்கவைத்துக் கொள்ள போராடும் ஜெயம் ரவி இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

படத்தில் நமக்கு புரியாத வார்த்தைகளை இவர் பேசினாலும் நடிப்பின் மூலம் ஒன்ற வைக்கிறார்.

குரங்கு போல தாவுவதும், புலியிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுவதும், சயிஷாவின் தழுவலுக்கு சாய்வதும் என ரசிக்க வைக்கிறார்.

தமிழ் ரசிகர்களின் பிடித்தமான புதுவரவு சயிஷா. நடனத்தில் மேனியை ரப்பராக வளைத்து நமக்கு சுளுக்கு வரவைக்கிறார்.

காட்டுவாசியிடம் காட்டும் அன்பாகட்டும், கண்களில் காட்டும் கவர்ச்சியாகட்டும் என அனைத்திலும் கட்டி போட்டுவிடுகிறார் இந்த வனமகள்.

நமக்கு கூகுள் மேப் போல, இவிங்களுக்கு ஈகிள் மேப் என்பது தொடங்கி, இடிச்ச சுவர் வழியே வெளியே போனா என்ன? கேட்கும் வரை தன் கேரக்டரை நிற்க வைக்கிறார்.

தான் வளர்த்த பாப்பா, இன்று வளர்ந்து மேடம் ஆகிவிட்டதால், மேடம் பாப்பா என்று கூப்பிடுவது கூட அழகுதான்.

தன் வழக்கமான நடிப்பால் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். புதுநடிகர் ஷாம் பால் இந்த மிரட்டல் போலீஸ் யார்யா? என கேட்க வைக்கிறார்.

தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

vanamagan duet

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மதன் கார்க்கியின் வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை சூப்பர் மேட்ச்.

செயற்கையாக நாட்டை விட இயற்கையான காடுதான் எப்போதுமே அழகு என்பதை ஒளிப்பதிவாளர் திரு நிரூபித்து இருக்கிறார்.

டேம்ன் டேம்ன் பாடல், யம்மா அழகம்மா மற்றும் பச்சை உடுத்திய காடு ஆகியவை இதமான ராகம்.

ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சி மற்றும் அந்த புலி பைட் சீன் அருமை.

vanamagan press meet

இயக்கம் பற்றிய அலசல்…

நாம் புலிக்கு உதவினால், அந்த விலங்கு கூட நம் அன்புக்கு வசமாகும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படங்களை கொடுப்பதில் எப்பவுமே விஜய் பெஸ்ட்தான். இதிலும் நிறைவாக செய்துள்ளார்.

நம்மிடம் இருக்கும் ஏசியை விட காடுகளில் குளிர் அதிகமாக இருக்கும். அங்கே மேலாடை இல்லாமல் இருக்கும் ஹீரோ, இங்கே டிரெஸ் போட்டும் கொண்டும் ரூம் ஏசிக்கு நடுங்குவது ஏன்.? எனத் தெரியவில்லை.

அழுக்கு காட்டுவாசி ஒரு பாடலில் மட்டும் அழகுவாசியாக மாறுவது ஏனோ? அது கனவுப் பாடலாக இருந்தாலும், யதார்த்தை மீறி திணிக்கப்பட்டது போல உள்ளது.

பிரகாஷ்ராஜ் துப்பாகியால் சுட்டபின் அவ்வளவு நேரம் ஜெயம் ரவி பைட் செய்து பிழைப்பது எப்படி?

இதுபோன்ற சில குறைகளை தவிர்த்தால் வனமகனையும் வனமகளையும் ரசிக்கலாம்.

வனமகன்… ரசிகர்களின் வசீகரன்

Comments are closed.