எங்க அம்மா ராணி விமர்சனம்

எங்க அம்மா ராணி விமர்சனம்

நடிகர்கள் : தன்ஷிகா, வர்ணிகா, வர்ஷா, சங்கர் ஸ்ரீ ஹரி, நமோ நாராயணா, அணி முரணி, ரியாஸ் கே அஹ்மது மற்றும் பலர்.
இயக்கம் : பாணி
இசை : இளையராஜா
ஒளிப்பதிவாளர் : எ. குமரன், சந்தோஷ் குமார்
எடிட்டர்: ஏஎல் ரமேஷ்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : முத்துகிருஷ்ணன்

Enga Amma Rani still 1

கதைக்களம்…

தன்ஷிகாவுக்கு இரண்டு குழந்தைகள் (மீரா தாரா என இரட்டை குழந்தைகள்). கணவரை பிரிந்திருக்கும் இவர் ஒரு சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்து கொண்டு மலேசியாவில் வசிக்கிறார்.

இந்நிலையில் தாரா ஒரு கொடிய நோயால் (எந்த ஒரு நோய் அறிகுறியும் இல்லாமல்) திடீரென இறக்கிறார்.
இதனால் இந்த நோய் அடுத்த குழந்தை மீராவுக்கும் பரவுகிறது.

இந்நிலையில் டாக்டரின் அறிவுரைப்படி ஒரு குளிர் பிரதேசத்தில் வசிக்க செல்கின்றனர் இவர்கள்.

அப்போது அந்த குடியிருப்பில் மரணித்த ஒரு சிறுமியின் ஆத்மா மீராவினுள் நுழைகிறது.
இதனால் மீராவுக்குள் இருக்கும் நோய் இல்லாமல் போகிறது.

enga amma rani 4

இந்த சூழ்நிலையில் தன் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறது அந்த ஆன்மா.

தன் குழந்தையை கொலைக்காரி ஆக்கிவிடாதே. விட்டு போய்விடு என அந்த ஆன்மாவிடம் கேட்கிறார் தன்ஷிகா.

நான் மீராவை விட்டு சென்றால், அவளை அந்த நோய் மீண்டும் தாக்கிவிடும் என அந்த ஆன்மா சொல்கிறது.

எனவே அந்த தாய் என்ன செய்தாள்? ஆன்மா சென்றதா? குழந்தை என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு தன் பாணியில் விடையளித்திருக்கிறார் டைரக்டர் பாணி.

Enga Amma Rani still 2

கேரக்டர்கள்…

ஒரு இளம் நாயகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நடிக்க துணிந்ததற்கே தன்ஷிகாவை பாராட்டலாம்.

படத்தின் பலமே தன்ஷிகாதான். ஒரு அம்மாவாக படம் முழுவதும் ஆட்சி செய்கிறார்.

ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் கூட சில காட்சிகளில் மேக்அப்புடன் வருகிறார். வேலைக்கு செல்வதாக அப்போது காட்சிகள் காட்டப்படவில்லை. எனவே அவர் அழும் சில காட்சிகளில் கொஞ்சம் நெருடல்.

இரட்டை குழந்தைகளாக வர்ணிகா, வர்ஷா. இதில் வர்ணிகாவே பல காட்சிகளில் வருகிறார்.

ஆன்மா வந்தவுடன் அவர் செய்யும் ஆக்ஷன் ரசிக்க வைக்கிறது.

என்னை பேயாக பாக்காதீங்க. குழந்தையாய் பாருங்கள் என கெஞ்சும்போது கவர்கிறார் வர்ணிகா.

இவர்களுடன் டாக்டராக வரும் சங்கர் ஸ்ரீஹரி மற்றும் நமோ நாராயணன் ஆகிய இருவரும் சிறப்பான தேர்வு.

Enga Amma Rani still 3

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இளையராஜா இசைக்கு பழனிபாரதியின் வரிகள் பலம். வா வா மகளே பாடல் ரசிக்கலாம்.

பின்னணி இசையில் என்றுமே ராஜா இளையராஜாதான். ஆனால் இவரின் இசை வேகத்துக்கு இயக்கத்தில் வேகமில்லை.

எ. குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

பேயும் நோயும் என வித்தியாசமான களத்தில் ஒரு குடும்ப கதையை சொல்லியுள்ளார் பாணி.

படத்தின் க்ளைமாக்ஸ் நிச்சயம் தாயின் பெருமையை உணர்த்தும்.

எங்க அம்மா ராணி… தன்னையே இழப்பவள் தாய்

Comments are closed.