வேகம் குறைவு.. பயணம் சிறப்பு..; கால் டாக்ஸி விமர்சனம்

வேகம் குறைவு.. பயணம் சிறப்பு..; கால் டாக்ஸி விமர்சனம்

நடிகர்கள் – சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், மொட்ட ராஜேந்திரன், கணேஷ்கர், ஆர்த்தி, மதன்பாப்

இசை – பாணர்

ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை

இயக்குனர் – பா.பாண்டியன்

தயாரிப்பு – கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா.

கதைக்களம்…

சிட்டியில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மேலும் அந்த கார்களும் திருடு போகிறது.

இதனால் சிட்டியே பரப்பரப்பாக இருக்கிறது.

ஹீரோ சந்தோஷ் சரவணனும் கால் டாக்ஸி டிரைவர் தான்.

ஒரு நாள் இவர் டூட்டி சவாரிக்கு தனது நண்பரான மற்றொரு டிரைவரை அனுப்பி வைக்கிறார்.

அந்தக் காரில் பயணிக்கும் கயவர்கள், டிரைவரைக் கொன்றுவிட்டு காரையும் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

கொலையாளிகளை கண்டு பிடிக்க டிரைவர்கள் சங்கத்தினர் காவல் துறையிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே நாயகன் தானே களத்தில் இறங்கி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார்.

கொலையாளிகள் சிக்கினார்களா? அவர்கள் யார்.? கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன் பரபரப்பு என நாயகன் சந்தோஷ் அசத்தல். காதல் காட்சிகளில் மெச்சூரிட்டி வேண்டும். கால் டாக்ஸி டிரைவர்களின் பரிதாப நிலையை எடுத்து சொல்லும்போது நம்மை கவர்கிறார்.

கதாநாயகி அஸ்வினி சந்திரசேகர் கொள்ளை அழகு. அவரது கண்களும் உதடுமே நிறைய பேசுகின்றன.

இவர் வக்கீலாக வருகிறார். இவரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருந்தால் இன்னும் நிறைய காட்சிகள் இருந்திருக்கும்.

கடவுள் ராஜேந்திரன், கணேஷ்கர் இருவரும் இந்த டாக்ஸியை கலகலப்பாக்கி ஓட்டிவிட்டுள்ளனர்.

ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்துக்கு பாடல் எழுதி இசையமைத்திருப்பவர் பாணர். பாடல்கள் ஓகே.

எம்.ஏ. ராஜதுரையின் ஒளிப்பதிவும், டேவிட் அஜய் செய்திருக்கும் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

படத்தின் முன் பாதியைவிட பின் பாதி செம விறுவிறுப்பு.

டாக்ஸி டிரைவர்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தரும் பாடமாக கால் டாக்ஸி வந்துள்ளது.

ஆக… கால் டாக்ஸி… வேகம் குறைவு.. பயணம் சிறப்பு

Call Taxi movie review in Tamil

Related Articles