ரூட் நம்பர் 17 விமர்சனம்.. காட்டையும் விடாத காட்டுமிராண்டிகள்!

ரூட் நம்பர் 17 விமர்சனம்.. காட்டையும் விடாத காட்டுமிராண்டிகள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’.

14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஓர் அடர்ந்த காட்டுக்குள் தங்கள் ஆதாயத்திற்காக ஒரு சாலை அமைக்க விரும்புகின்றனர் சில அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்… ஆனால் இதற்கு தடையாக இருக்கிறார் நேர்மையான அதிகாரி ஜித்தன் ரமேஷ். இது ஒரு ஃபிளாஷ்பேக் கதை..

ஸ்டோரி…

நாயகனும் நாயகியும் ஒரே ஒரு நாள் எந்த செல்போன் தொந்தரவும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை இன்பமாக கழிக்க விரும்புகின்றனர்.. அதன்படி செல்போனை வீட்டில் வைத்துவிட்டு ஒரு அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா செல்கின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரையும் ஜித்தன் ரமேஷ் கடத்தி சென்று விடுகிறார். பிரம்மாண்ட குகைக்குள் இவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்.

மினிஸ்டர் மகனை தேடி வரும் காவல் அதிகாரியையும் அந்தக் குகைக்குள் அடைத்து வைக்கிறார்.. இவர்களை அடைத்து வைப்பதன் நோக்கம் என்ன? ஜித்தன் ஃப்ளாஷ்பேக் & இந்த கதைக்கும் என்ன தொடர்பு?

இதனை கண்டுபிடிக்க மற்றொரு போலீஸ் அதிகாரி அருவி மதன் வருகிறார்.

அவர் வந்த பிறகுதான் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது.. அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்…

நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க நாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார்.

ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ்.. இதுவரை ஏற்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவர் நாயகனா? வில்லனா? என்று குழப்பம் நீடிக்கும் வகையில் முயற்சி எடுத்து இருக்கிறார்.

நேர்மையான அதிகாரியாக தன்னுடைய பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கிறார். பின்னர் நீண்ட தலை முடி தாடி என பயங்கரமான தோற்றத்தில் வருகிறார்.. ஆனால் நமக்கு தான் பயம் வரவில்லை.

அருவி மதன் & ஹரிஷ் ப்ர்ராடி ஆகியோரின் பாத்திரங்கள் அருமை.

நாயகி அஞ்சுவை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படம் தொடங்கி சில நேரம் கலர்ஃபுல் காட்சிகளில் வந்தாலும் அதன் பின்னர் சேற்றில் விழுந்து ஒரே உடையில் படம் முழுவதும் நடித்திருக்கிறார் அதுவும் அந்த சேற்றுடன் அவர் எப்படி தான் அடித்தாரோ என்ன வியக்க வைக்கிறது.

இவர்களுடன் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் மற்றும் பலர் கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிரசாந்த் ஒளிப்பதிவு செய்ய மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இசையமைத்துள்ளார்.

பல விமர்சனங்களில் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி என சொல்லி இருப்போம்.. நிச்சயமாக இந்த படத்தின் ஒளிப்பதிவு அந்த வகையை சாரும்.. கூல்டிரிங்ஸ் தவறி கீழே விழுவது முதல் அடர்ந்த காட்டு ரோட்டுக்குள் டயர் நிற்பது வரை தன்னுடைய கேமரா கண்களில் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

அவுசப்பசன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை மிரட்டல்.. அது போல தாலாட்டு பாடல் தாலாட்டும் படியாக உள்ளது..

பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மலையாள இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க பேய் படம் என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி திடீரென திரில்லருக்கு மாறி தன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

தங்கள் சுயநலத்திற்காக தங்கள் சுயலாபத்திற்காக இந்த நாட்டின் வளத்தை சுருண்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் காட்டு வளத்தையும் விட்டு வைக்கவில்லை..

நாட்டு வளத்தை அழித்தால் மக்கள் போராடுவார்கள்.. ஆனால் காட்டை அழித்தால் மிருகங்கள் போராடப் போவதில்லை என நினைத்து விட்டார்களே என்னவோ.?! அதிலும் ஒரு ரூட்டை கண்டுபிடித்து அவர்கள் சுய லாபம் அடைவது தான் இந்த ரூட் நம்பர் 17 படத்தின் முக்கிய கரு..

இப்படம் 2023 டிசம்பர் 29ஆம் தேதி வெளியானது.

Route Number 17 movie review and rating in tamil

மூத்தகுடி விமர்சனம்…

மூத்தகுடி விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

படத்தின் ஆரம்பத்தில் டாஸ்மாக் திறக்க கூடாது என மூத்த குடிமக்கள் போராடுகின்றனர்.. அவர்கள் போராட என்ன காரணம் என்பது பிளாஷ்பேக்காக விவரிக்கிறது.

1970-களில் ஒரு குடிபோதை பிரச்சனையால் மூத்தகுடி என்ற என்ற கிராமம் கலவரம் ஆகிறது. இதனால் ஊர் மக்கள் அடித்துக் கொள்ள பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.
.
எனவே ஊர் பெரிய மனுசி KR விஜயா இந்த கிராமத்தில் இனி எவரும் குடிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிராமத்தினர் நடக்கின்றனர்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அங்கு ஒரு சாராய பாக்டரியை திறக்க வேண்டும் என பிரச்சனை செய்கிறார் வில்லன் ராஜ்கபூர்.

ஆனால் இதற்கு எவரும் ஒத்து வராத நிலையில் சில சதித்திட்டங்களை செய்கிறார் ராஜ்கபூர். இதனை எடுத்து மீண்டும் பிரச்சனை எழுகிறது.

இந்த பிரச்சனைகளை அந்த கிராம மக்கள் எப்படி சந்தித்தார்கள்..? நாயகன் நாயகிக்கு என்ன வேலை? அவர்கள் கதையில் எப்படி சம்பந்தப்பட்டார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

தருண்கோபி ( வீரய்யன் )
பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை )
அன்விஷா ( ஜோதி )
K.R. விஜயா ( மூக்கம்மா )
R.சுந்தர்ராஜன் ( நச்சாளி )
ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் )
யார் கண்ணன் ( பழையசோறு )
சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி )

நாயகன் பிரகாஷ் சந்திரா பிரகாசம் குறைவுதான். அப்பாவியாகவே முகத்தைக் காட்ட சொன்னார்களோ என்னவோ?

வீரையனாக தருன் கோபி. கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்து சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார். தான் ஆசைப்பட்ட காதலி கிடைக்காத ஏக்கத்தில் ஓவர் பாடி லாங்குவேஜ் காட்டி இருக்கிறார்.

நாயகி அன்விஷா.. இவர் தான் இந்த மூத்த குடி கிராமத்திற்கு பௌர்ணமியாக வந்து ஜொலிக்கிறார். அழகிலும் நடிப்பிலும் கவர்ந்திருக்கிறார்.

ஆர் சுந்தரராஜனிடம் 5000 ரூபாய் வாங்கிவிட்டு சிங்கப்புலி ஏமாற்றுவது கதைக்கு ஒட்டாத காமெடி.

கே ஆர் விஜயா அலட்டிக் கொள்ளாத நடிப்பு. பழைய வில்லத்தனத்தை மீண்டும் காட்ட முயற்சித்துள்ளார் ராஜ்கபூர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன்
இசை – J.R. முருகானந்தம்
பாடல்கள் – நந்தலாலா
எட்டிடிங் – வளர்பாண்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
நடனம் – ரம்யா தேவி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
கதை, வசனம் – M.சரக்குட்டி
திரைக்கதை, இயக்கம் – ரவி பார்கவன்.

ரவி பார்க்கவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். குடியால் ஒரு குடும்பம் மட்டுமல்ல ஒரு ஊரே காலியாகும்.. எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

டாஸ்மாக்கை அனுமதித்தால் லைப் காலியாகி விடும் என்பதையும் கருத்தாக சொல்லி மக்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.

ஒரு பிரச்சனையை மக்கள் கையில் எடுத்து போராடினால் மட்டுமே மாற்றம் உண்டாகும். மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்பதை மூத்தகுடி மூலம் உணர்த்திருக்கிறார் இயக்குனர் ரவி பார்க்கவன்.

Moothakudi movie review and rating in tamil

அதிசய கோயில்கள்..; நந்திவர்மன் விமர்சனம்..

அதிசய கோயில்கள்..; நந்திவர்மன் விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படத்தின் தலைப்பே சொல்கிறது.. இது ஒரு அரசர் காலத்து பின்னணியில் உருவான கதையாக இருக்கும் என்பது.. உங்கள் கணிப்பு சரிதான்.!

ஸ்டோரி…

900+ வருடங்களுக்கு முன்பு நடந்த கதை…

செஞ்சி பகுதியில் நந்திவர்மன் கட்டிய சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்து விட்டது.

அந்தக் கோயிலில் புதையல் இருப்பதாக தகவல் தொல்லியல் துறைக்கு தெரிகிறது தெரிகிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக ஆராய்ச்சி செய்ய முடிவெடுக்கின்றனர்.

அதன்படி தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, அதிகாரி போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் சில மாணவ மாணவிகள் ஆராய்ச்சிக்கு அந்த பகுதிக்கு செல்கின்றனர்.

அங்கு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது சில மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனை எடுத்து ஆராய்ச்சியை நிறுத்த சொல்லி அந்த ஊர் பகுதி மக்கள் போராட்டம் செய்கின்றனர்.

தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு ஆதரவாகவும் அதே சமயம் விசாரணைக்காகவும் மீசை ராஜேந்திரன் & சுரேஷ் ரவி ஆகியோர் தலைமையிலான போலீஸ் விசாரணையில் இறங்குகிறது.

மர்மமான முறையில் கொல்லப்பட்டது நோக்கம் என்ன? கொன்றவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகனாக சுரேஷ் ரவி போலீஸ் கேரக்டருக்கு ஃபிட்டாக இருக்கிறார். ஆனால் எப்போதுமே போலீஸ் யூனிபார்ம் போல விரைப்பாக இருப்பதால் ரொமான்ஸ் பெரிதாக ஒட்டவில்லை.

நாயகியாக ஆஷா வெங்கடேஷ்.. பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்து வேளையில் சிறப்பு. இவரது காஸ்டியூம் இவருக்கு கூடுதல் கவனத்தை கொடுக்கிறது.

பெரும்பாலும் காட்சிகள் அனைத்தும் போஸ் வெங்கட் சுற்றிய நகர்கிறது.

நிழல்கள் ரவி & கஜராஜ் ஆகியோரின் கதாபாத்திரம் எதிர்பாராத ட்விஸ்ட்.. முதலில் சாதுவாக தோன்றும் இவர்களின் நடிப்பு வேறு பரிமாணத்தை காட்டுகிறது.

மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் ஆகியோரும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

குடிகாரனாக வரும் கோதண்டம் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். போலீசாக வரும் ஜே எஸ் கே கோபி கம்பீரமான தோற்றத்தில் ஈர்க்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து.. தொல்லியல் துறை ஆராய்ச்சி அதிலிருந்து கண்டெடுக்கப்படும் புதையல்.. நடராஜர் சிலை.. உள்ளிட்ட காட்சிகள் தத்துரூபமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.

ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பின்னணி இசை கூடுதல் கவனத்தை பெறுகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பலம். யார் என்று தெரியாமல் இருட்டுக்குள் சுரேஷ் ரவி மோதும் சண்டை காட்சிகள் ரியல் ஃபைட் போல உள்ளது.

நந்திவர்மனின் மாய வாள், கிராபிக்ஸ் காட்சி காட்சிகள் கலை இயக்குனரின் கைவண்ணத்தை காட்டுகிறது. இதற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை பல காட்சிகளில் நம்மால் உணர முடிகிறது.

திரைக்கதை அமைத்த விதத்தைப் போலவே நடிகர்கள் தேர்விலும் இயக்குனர் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.

அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்… நம் முன்னோர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட நிறைய புதையல் மர்மங்கள் நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. அதனை பலருக்கும் அறியப்படுத்தும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் பெருமாள் வரதன்.

தமிழக கோயில் வரலாற்றை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் படம் தான் நந்திவர்மன்.

Nandhivarman movie review and rating in tamil

வெல்டன் வெங்கட்..: மதிமாறன் விமர்சனம்.. 3.75/5..

வெல்டன் வெங்கட்..: மதிமாறன் விமர்சனம்.. 3.75/5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமா வெற்றிப்பாதையில் தற்போது தமிழ் சினிமாவும் பயணித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத குள்ள மனிதர்களின் வாழ்க்கையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்

ஸ்டோரி…

நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தபால் காரராக பணிபுரிகிறார் எம்.எஸ். பாஸ்கர். இவரது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. அதில் ஒருவர் இவானா மற்றொருவர் வெங்கட் செங்குட்டுவன்.

கல்லூரி படிப்பை எட்டிய போதும் வெங்கட் 3 அடி உயரம் மட்டுமே இருக்கிறார். ஆனால் இவனா சராசரி பெண்ணாக வளர்கிறார்.

தன் தந்தையைப் போல நானும் ஒரு போஸ்ட்மேன் ஆக வேண்டும் என என நினைக்கிறார் வெங்கட் செங்கட்டுவன்.

இவரது உயிரக் குறைவால் பள்ளியிலும் கல்லூரிகளிலும் பல கிண்டல் பேச்சுகளை எதிர்கொள்கிறார். ஆனால் இவரது குடும்பத்தார் இவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

ஆனால் தன் திறமையாலும் அறிவாற்றலாலும் பலரை அசத்தி வருகிறார். இதனால் அவரது மதிப்பு கூடுகிறது.

ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் இவானா திடீரென கல்லூரி பேராசிரியை காதலித்து வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.

இந்த அவமானத்தால் எம் எஸ் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒரு பக்கம் பெற்றோரை இழந்தும் மறுபக்கம் தன் அக்காவை தொலைத்தும் வாழ்க்கை விளிம்பில் இருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

இவானா & வெங்கட் செங்குட்டுவன்.. அக்கா தம்பியாக ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளாக நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இது மாதிரி குள்ள மனிதர்களை வைத்து நாயகனாக படம் எடுப்பது பெரிய விஷயம். அதற்காக தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

குள்ள மனிதர்கள் படம் என்றாலே அவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் செய்வது தான் வழக்கம். ஆனால் ஒரு மாஸ் ஹீரோவாக வெங்கட்டை காட்டி இருக்கின்றனர். அவரும் தன் கேரக்டரை உணர்ந்து வெளுத்துக்கட்டி இருக்கிறார். வெல்டன் வெங்கட்.

இவர் தான் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் ஏலியனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

டேய் குள்ளா என்று கூப்பிட்டாலே ஒரு குத்து விடும் காட்சிகள் ரசிக்கும் ரகம்.

இடைவேளைக் காட்சி முக்கியமானதாக அமைந்திருந்தாலும் அதன் பின்னர் அதில் சுவாரசியம் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்.

அண்ணாதுரை சச்சின் போன்றவர்கள் உயரம் குறைவானவர்கள் அவர்களும் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் சாதித்த பின்னர் அந்த குள்ளம் ஒரு தடையாக தெரியவில்லை.. அப்படி இருக்கும்போது சாதித்தால் மட்டும்தான் எங்களை கூட சாதாரண மனிதனாக ஏற்றுக் கொள்வீர்களா? என வெங்கட் கேட்கும் போது நிச்சயம் கைதட்டல் அள்ளும்.

சராசரி உயரம் கொண்டவர்கள் மட்டும் எல்லாரும் சாதனையாளர்களா? என அவர் கேட்கும் சமயம் நம்மை கன்னத்தில் யாரோ அறைந்தார் போல ஒரு உணர்வு ஏற்படும்

இவானா கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். தன் உடன் ஒட்டி பிறந்த வெங்கட்டுக்கு ஆதரவாக அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிக்கும் ரகம். ஆனால் தன் தம்பியை விட்டு அவர் ஓடி செல்வது நம்மையே கண் கலங்கும் செய்கிறது. மதி என்ற கேரக்டரில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

போலீசாக வேண்டும் என நினைத்து ஆராத்யா அது போலவே போலீஸ் ஆகி கெத்து காட்டுவது ரசிக்க வைக்கிறது. அழகான பெண் போலீசாகவும் நம்மை கவர்கிறார்.

எம் எஸ் பாஸ்கர் ஒரு நடிப்பு களஞ்சியம் என்பது நமக்கு தெரியும்.. கொடுத்த கேரக்டரில் வெளுத்துக்கட்டி இருக்கிறார் சில காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார்.

ஆடுகளம் நரேன்.. அவரின் மகன் போலீஸ் ஆபீஸர் ஆகியோரும் கச்சிதம்.

டெக்னீசியன்ஸ்…

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ளது

இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்..

கார்த்திக் ராஜாவின் இசையை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. இளையராஜா குரலாக ஒலிக்கச் செய்து நம்மை மெய் மறக்க செய்கிறார் பின்னணி இசையும் இந்த திரில்லர் படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்துள்ளது.

குள்ளராக இருந்தாலும் அவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் விதமே கூடுதல் சுவாரசியத்தை கொடுக்கிறது.

குள்ளம் என்பது ஊனமில்லை அது ஒரு குறையும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திறக்கதை அமைத்து கைத்தட்டல் பெறுகிறார் மந்த்ரா வீரபாண்டியன்.

இந்த 2023 வருட இறுதியில் ஒரு நல்ல தரமான படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம்..

ஆக மதிமாறன்.. வெல்டன் வெங்கட்

Mathimaran movie review and rating in tamil

முக்கோண (கள்ளக்) காதல்..; மூன்றாம் மனிதன் விமர்சனம்

முக்கோண (கள்ளக்) காதல்..; மூன்றாம் மனிதன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணவன் மனைவி என்ற இருவருக்குள் இடையில் வேறு ஒருவனோ ஒருத்தியோ உள்ளே நுழைந்தால் என்ன மாதிரியான விளைவுகளை அந்த குடும்பம் சந்திக்கும்.. அந்தப் பிள்ளைகள் சந்திப்பார்கள் என்பதுதான் படத்தின் கரு. அதுவே இந்த மூன்றாம் மனிதன்.

ஸ்டோரி…

இயக்குனர் ராம்தேவ் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார். இவரது மனைவி பிரணா. ஒரு கட்டத்தில் குடிக்க அடிமை ஆகிறார் வேலைக்கும் சரியாக செல்வதில்லை இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே மனைவி பிரனா ஒரு போலீஸ் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தான் சோனியா அகர்வால்.

அங்கு பிரானாவுக்கு போலீஸ் உடன் உடன் கள்ளக்காதல் ஏற்படுகிறது இதனால் மேலும் குடிக்கிறார் ராம்தேவ். மனைவியை கண்டிக்கிறார் கணவன். நீ குடியை நிறுத்தினால் நான் அந்த உறவை நிறுத்துவேன் என்கிறார். இதனால் பிரச்சனை அதிகமாகிறது.

இந்த சூழ்நிலையில் போலீஸ் கொலை செய்யப்படுகிறார். பாக்யராஜ் தலைமையில் போலீஸ் விசாரணை வேட்டையில் இறங்குகிறது.

ராம்தேவ் மீது சந்தேகம் கொள்ளும் பாக்யராஜ் விசாரிக்கிறார். ஆனால் அவர் கொலை செய்யவில்லை என்கிறார். அப்படி என்றால் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிகதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

போலீஸ் இன்ஸ்பெக்டர் (இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்- இயக்குனர்,K. பாக்யராஜ்

ராமர் – இயக்குனர் ராம்தேவ்

செல்லம்மா – பிரணா

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் – ரிஷிகாந்த்

ரம்யா – சோனியா அகர்வால்

கௌதம் – இயக்குனர் ஸ்ரீநாத்

கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ரெண்டு பசங்க – ராஜ், கார்த்திக்ராஜா.

ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர் – சூது கவ்வும் சிவக்குமார்

பாக்கியராஜ் சார் உடன் வருபவர் – எஸ் ஐ ராஜகோபால்

போலீஸ் ஏட்டையா – மதுரை ஞானம்

ராமர் என்ற கேரக்டர் நடித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். ஒரு குடிகாரனுக்கு உரிய பிரச்சினைகளை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் சோனியா அகர்வால் ஹைலைட்டாக காட்டப்பட்டாலும் நாயகி என்னமோ பிரனா தான். தன்னுடைய கேரக்டருக்கு ஏற்ப சின்ன வயதிலேயே முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று பிரகாசிக்க செய்கிறார்.

கையாலாகாத கணவன் குடிகாரன் ஆகிய பிரச்சினைகளை சந்திக்கும் மனைவியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இதனால் குடும்பம் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை காட்சிகளாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

இதில் கிட்டத்தட்ட 4-5 குடும்பங்கள் காட்டப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் கள்ளக்காதலே பிரச்சினையாக இருப்பது ஏன் என்பது தெரியவில்லை?

தாய் தந்தையின் தவறான பாதையால் கொலைகாரனாக இரண்டு சிறுவர்கள் மாறுகிறார்கள்.. நடிப்பில் நல்ல முதிர்ச்சி..

அக்கா பிரானாவுக்கு அட்வைஸ் சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. எங்கள் வாழ்க்கை தான் தடம் புரண்டு விட்டது. உங்கள் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என கொலை பழியை அவர்கள் சுமக்கும் போது கண்கலங்கவும் வைக்கிறது.

கதையின் ஓட்டத்திற்கு உதவும் போலீசாக வந்து செல்கிறார் பாக்யராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – மணிவண்ணன்

பாடல்கள் இசை – வேணுசங்கர்& தேவ் ஜி

பின்னணி இசை – அம்ரிஷ் .P

பாடல்கள் – ராம்தேவ்

எட்டிடிங் – துர்காஸ்

கலை இயக்குனர்

T.குணசேகர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்:ராம்தேவ்

இணை தயாரிப்பாளர்கள்

மதுரை C.A. ஞானோதயா

டாக்டர்.M. ராஜகோபாலன்

டாக்டர்.D. சாந்தி ராஜகோபாலன்

தயாரிப்பு : ராம்தேவ் பிக்சர்ஸ்

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி என்ற உறவுக்குள் வேறு யாரேனும் நுழைந்தால் என்ன மாதிரியான பிரச்சினைகளை அந்த குடும்பம் சந்திக்கும் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய பிரியாணி காதல் கதையும் ஒரு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது.

என்னதான் மெசேஜ் சொல்லும் படமாக மூன்றாம் மனிதன் இருந்தாலும் நாடகத்தன்மை இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பிள்ளைகளின் வாழ்வை கல்வியை குணத்தில் கொள்ளும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Moondram Manithan movie review and rating in tamil

கிராமத்து மண் வாசனை..: வட்டார வழக்கு விமர்சனம் 3.5/5..

கிராமத்து மண் வாசனை..: வட்டார வழக்கு விமர்சனம் 3.5/5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 களில் நடக்கும் கதையாக இந்த ‘வட்டார வழக்கு’ உருவாகியுள்ளது.

எளிய மனிதர்களின் கிராமத்து வாழ்வியலை கொடுத்திருக்கிறார் கண்ணுசாமி ராமச்சந்திரன். இவரே இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.

ஸ்டோரி…

நம் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப்போன பங்காளிகளின் சண்டைதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

ஒரு குடும்பத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் ஒரு பிரச்சனையில் ஒருவரை கொலை செய்து விட அவர்கள் இவரை தேடி பழி தீர்க்க அழைக்கின்றனர்.

மற்றொரு பக்கத்தில் நாயகன் நம்பி சந்தோஷ் மற்றும் ரவீனா ரவி இடையே ஒரு காதல்.. படுத்த படுக்கையாக கிடக்கும் தன் தந்தைக்கு பணிவிடை செய்து அறிவொளி இயக்கம் நடத்தும் பெண்ணாக ரவீனா ரவி.

நாயகனை வெட்டி தீர்க்க அலையும் கும்பலின் திட்டம் நிறைவேறியதா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் இந்த வட்டார வழக்கு

கேரக்டர்ஸ்…

கிராமத்து முரட்டு இளைஞனாக சந்தோஷ் நம்பி ராஜன் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் வீராப்பு முறைப்பு எனத் தெரியும் நாயகன் சந்தோஷ்.. காதல் என்று வந்து விட்டால் கவிழ்வதும் அருமை.

‘தொட்டிச்சி’ கேரக்டரில் வெளுத்து கட்டி இருக்கிறார் ரவீனா ரவி. இவரது இவரது குரலும் கூடுதல் கவனிப்பை பெறுகிறது. முதலில் நாயகனை வெறுக்கும் ரவீனா மெல்ல மெல்ல காதலில் கரைவதை உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார்.

கண்ணாடியில் முகத்தை பார்ப்பது மட்டுமல்லாமல் எவர்சில்வர் பாத்திரத்தில் காதலனை காண்பதும் கவிதைத்துவமான காட்சி.. படிக்காத பாட்டிமார்களை ரவீனா திட்டி படிக்கச் சொல்லும் அதட்டலும் ரசிக்கும் ரகமே.

இவர்களுடன் டீக்கடை தாத்தா முதல் இளசுகள் பெருசுகள் என அனைவரையும் அவர்களது போக்கிலேயே வேலை வாங்கி இருக்கிறார் டைரக்டர்.

டெக்னீசியன்ஸ்…

கரிசல் எழுத்தாளர் மறைந்த கி.ரா அவர்களின் கதை மாந்தர்கள் பேசும் வசனங்கள் உள்ளன. எனவே டைட்டிலில் கி. ராவை நினைவுகூர்ந்து உள்ளார் இயக்குனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் படம் இது. புதிதாக போட்ட மெட்டுக்களுடன் 1980களில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறார் இசைஞானி. (இது இயக்குனர் வைத்து வேண்டுகோள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது)

அந்தப் பாடலை இந்தக் கதையுடன் இணைத்து பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. தன் கிராமத்து மண்வாசையை மக்களுக்கு கலந்து கொடுத்திருக்கிறார் இளையராஜா.

எங்குமே சினிமாத்தனம் இல்லாத மக்களின் எளிய வாழ்க்கையை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

“ஊமை கனவு கண்டது போல சொல்ல முடியல” என்று சொல்லும் தாத்தாவிடம் ஒரு இளந்தாரி” ஊமை என்னதான் கனவு கண்டா?” என்று கேட்க தாத்தா தரும் விளக்கம் ரசிக்கும் காட்சி..

மேலும் கிராமத்துக்கே உரித்தான ஆட்டு கிடா முட்டு, டீக்கடை கலாட்டா.. பெருசுகளின் நையாண்டித்தனம் இளசுகளின் இம்சை என கிராமத்து மனிதர்களின் கலகலப்பையும் கலந்து கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பு நேர்த்தி.

இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். வித்தியாசமான முயற்சி என ரிஸ்க் எடுக்காமல் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் ஒரு கதைக்களத்தை எடுத்து அதை மக்கள் வாழ்வியலோடு கலந்து கொடுத்திருக்கிறார்.

அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருந்தாலும் கிராமத்து பாஷையில் கெட்ட வார்த்தை கேட்கும் போது பெரிதாக நெருடல் இல்லை என்பதை உண்மை.

மதுரா டாக்கீஸ் & ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ளது.

டிசம்பர் 29ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது.

Vattara Vazhakku movie review and rating in tamil

More Articles
Follows