தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கர்பச்சான் இயக்கியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு தன் அனுபவம் பற்றி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில்…
“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்களுடன் இதில் நடித்துள்ளேன்.
இவர்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம்.. ஏனென்றால், அனைவருமே மேதைகள்.
இதில் இவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் தங்கர்பச்சான் தான்.
நாம் மறந்த வாழ்க்கையை நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான்.
‘பள்ளிக்கூடம்’, ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘அப்பாசாமி’ போன்ற அவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற படங்கள் தான்.
எங்களை வைத்து குடும்ப படத்தை எடுத்திருக்கிறார். அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி.. மீண்டும் பயணிக்க ஆசையாக இருக்கிறது. ஜாலியாகவும், அதே நேரத்தில் கோபமாகவும் பணியாற்றுவார். அதனால் தான் வேலைகள் சரியாக நடக்கின்றன.
இசையை ஜிவி பிரகாஷ் அமைக்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஜாம்பவான் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை சுற்றித் தான் படத்தின் கதை இருக்கும்.”.
இவ்வாறு யோகிபாபு பேசியுள்ளார்.
Yogibabu talks about his experience with Thangar Bachan