ரஜினி-கமலை இணைக்க ராஜமௌலி திட்டம்..; இந்த ட்விஸ்ட் செம மாஸ்..

ரஜினி-கமலை இணைக்க ராஜமௌலி திட்டம்..; இந்த ட்விஸ்ட் செம மாஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வாரம் மார்ச் 25ல் ரிலீசானது.

ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ 500 கோடி வசூலை உலகளவில் எட்டியுள்ளது.

இதனிடையில் ராஜமௌலி தன் சமீபத்திய பேட்டியில்.. ஒருவேளை இது போல 2 ஹீரோக்களை வைத்து படமெடுத்தால் யாரை வைத்து படம் எடுப்பீர்கள்? என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு ராஜமௌலி பதிலில்… என்னுடைய சாய்ஸ் கமல் ரஜினி தான்.

ஒருவேளை என் கதைப்படி ரஜினி ஹீரோவாக இருந்தால் கமல் வில்லனாக இருப்பார். கமல் ஹீரோவாக இருந்தால் ரஜினி வில்லனாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

வாவ்… கேட்கவே செம மாஸ் இருக்குல்ல.. ரஜினி கமல் இதற்கு ஒப்புக் கொள்வார்களா..?

ரஜினி கமல் இருவரும் இணைந்து 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Will SS Rajamouli bring Rajini and Kamal together a film?

விஜய்-அஜித் இந்த வார் வாந்தியை பாருங்க.; கடுப்பான காஸ்ட்யூம் டிசைனர்

விஜய்-அஜித் இந்த வார் வாந்தியை பாருங்க.; கடுப்பான காஸ்ட்யூம் டிசைனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் அஜித் ஆகிய இரு நடிகர்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிர்கள் உள்ளனர். நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் விரோதி போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு நடிகரின் படம் வந்தால் மற்றொரு நடிகரின் ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்டுக்களை கொடுத்து வருகின்றனர். மேலும் மோசமான ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அஜித் விஜய் அவர்களது ரசிகர்களை கண்டிப்பதும் இல்லை. எனவே இது தொடர்கதையாகவே உள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் Aids_Patient_Ajith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களும் RIPJosephVijay என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும், பதிவு செய்தனர்.

மேலும் மாஃபிங் செய்யப்பட்ட கேவலமான போட்டோக்களையும் அஜித், விஜய் ஆகிய இருவரின் குடும்ப உறுப்பினர்களையும் அசிங்கமாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் பிரபல சினிமா காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் இவர்களை கண்டித்து விஜய் அஜித்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

I kindly request @actorvijay avl / #ajithkumar avl 2step in give a statement ending this social war Vomiting in the name of love. Misusing ur names images n wasting time n creating a culture. This has to STOP or we are allowing a next generation from turning into antisocials.

Costume designer Vasuki Baskar talks about Vijay – Ajith fan war

‘ஹீரோ & விஸ்வாசம்’ படங்களின் வசனகர்த்தா இயக்கத்தில் ஜெயம்ரவி

‘ஹீரோ & விஸ்வாசம்’ படங்களின் வசனகர்த்தா இயக்கத்தில் ஜெயம்ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைலண்ட்டாக பல படங்களை ஒப்புக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ல் ரிலீசாகவுள்ளது.

இதன்பின்னர் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ என்ற படத்திலும் அஹ்மது இயக்கத்தில் ‘ஜன கன மண’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ரவி.

இந்த நிலையில் ஆண்டனி பாக்யராஜ் என்ற புதுமுக இயக்குனிரில் படத்தில் நடிக்கிறாராம் ஜெயம் ரவி.

இரும்புத்திரை, ஹீரோ, விஸ்வாசம் போன்ற பல படங்களில் வசனம் எழுதியவர் ஆண்டனி பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Viswasam dialogue writer Antony Bhagyaraj joins with Jayam Ravi

ஏப்ரல் 10ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ ட்ரீட்..; பூஸ்ட் எனர்ஜி தரும் சன் பிக்சர்ஸ்

ஏப்ரல் 10ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ ட்ரீட்..; பூஸ்ட் எனர்ஜி தரும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து……’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘ஜாலியோ ஜிம்க்கானா……’ என்ற பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார்.

இந்த இரண்டு பாடல்களும் வெளியாகி இணையத்தளங்களில் பட்டைய கிளப்பி வருகிறது.

அடுத்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்பட இசை வெளியீடு விழாவை சன் பிக்சர்ஸ் நடத்தவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில் விஜய் மற்றும் பீஸ்ட் படக்குவினர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்பு நேர்காணலை ஏப்ரல் 10 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது

எனவே இது பீஸ்ட் வருவதற்கு முன்பு ரசிகர்களுக்கு பூஸ்ட் குடித்த உற்சாகத்தை தரும் என நம்பலாம்.

Vijay special interview for Beast movie

ரூ 4 கோடி சம்பள பாக்கி.; பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

ரூ 4 கோடி சம்பள பாக்கி.; பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan case filed against famous producer?

வசூலில் அலறவிடும் ‘RRR’..; ரூ 500 கோடி ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

வசூலில் அலறவிடும் ‘RRR’..; ரூ 500 கோடி ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த வாரம் மார்ச் 25ல் உலகமெங்கும் வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கான், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மரகதமணி இசையமைத்திருத்தார்.

இப்படம் ரிலீசான முதல் நாள் முதலே வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அவர்கர் ராஜமௌலியை மகா ராஜா மவுலி என பாராட்டியிருந்தார்.

மூன்று நாட்களில் RRR படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் 3 படங்களின் மூலம் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 1’ படத்தின் மொத்த வசூல் 710 கோடியை எட்டியது. பின்னர் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் 1600 கோடியை வசூலித்தது என்று கூறப்பட்டது.

தெலுங்கில் தயாரான ஆர்ஆர்ஆர் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்த படத்தை லைகா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாகுபலி 2’ படங்களின் வசூலை ஆர்ஆர்ஆர் படம் முறியடிக்குமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்..

RRRMovie has crossed 500 crores worldwide

More Articles
Follows