யுவனின் வாழ்க்கை திரைப்படமானால் ஹீரோ யார்? அவரே அளித்த சுவாரசிய பதில்

யுவனின் வாழ்க்கை திரைப்படமானால் ஹீரோ யார்? அவரே அளித்த சுவாரசிய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இளையராஜாவின் வாரிசு என அறிமுகமானாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இசை ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் யுவன்.

இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ஓரிரு படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் தனது இசை பயணத்தை தொடங்கி 25 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்களுடன் கலந்து உரையாடினார்.

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அதில் ஒருவர் உங்களின் வாழ்க்கை படத்தை தயாரிக்க இருந்தால் அதில் யாரை நடிக்க வைப்பீர்கள்? யாரை நடிக்க வைக்க உங்களுக்கு விருப்பம்? என கேட்கப்பட்டது

“தற்போது வரை அது போன்ற எண்ணங்கள் எனக்கு இல்லை. ஒருவேளை என் வாழ்க்கை படமானால் அதில் நானே நடிக்க விருப்பம்” என பதிலளித்தார்.

JUST IN நான் மாஸா.? க்ளாஸா.? வெந்து தணிந்தது காடு விழாவில் சிம்பு பன்ச் டயலாக்

JUST IN நான் மாஸா.? க்ளாஸா.? வெந்து தணிந்தது காடு விழாவில் சிம்பு பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் கலந்து கொண்டு “லூசு பெண்ணே….” என்ற பாடலை சிம்புக்காக பாடினார்.

நடிகர் சிம்பு பேசும்போது…

“பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை விழாவுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட். நான் வேட்டையாடு விளையாடு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.. அந்தப் படமும் சூப்பர் ஹிட்.

அவர் நடித்த விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் சென்று இருந்தேன்.. இன்று என் பட விழாவுக்கு அவர் வந்திருக்கிறார். மீண்டும் அந்த மேஜிக் வெற்றி நடைபெறும் என நம்புகிறேன்.

யுவன் என் படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுப்பது போல ரகுமானும் எனக்கு ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார்.

முதலில் எனக்கு ஒரு காதல் கதையை சொன்னார் கௌதம் மேனன். ஆனால் நான் அது வேண்டாம் வேறு ஏதாவது சொல்லுங்கள்.. என்றேன்

இந்த கதையை சொன்னார். இந்த படத்திற்காக நான் 19 பையனாக மாறி உள்ளேன்.. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இல் ஒரு விஷயம் இருக்கு.

சென்ற முறை மாநாடு இசை விழாவில் அழுதுவிட்டேன். அந்த படம் ஹிட்டானது. இப்போ அழுதா செண்டிமெண்ட்டா ஹிட் ஆகும் சொன்னாங்க. என் கண்ணீரை ஏற்கனவே துடைச்சு விட்டுட்டாங்க.

இந்த காலத்தில் நிறைய பேர் நன்றி மறந்துடறாங்க. செஞ்ச உதவியை யாரும் மறக்காதீங்க.. அப்பா, அம்மாவை பார்த்துக்கோங்க.. என் ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே நீங்க இல்லன்னா நான் இல்ல. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்.

நான் மாசா கிளாஸா சொல்ல விரும்பல. நாம படம் பண்றோம். அந்த ஒர்க்கு மாஸா கிளாஸ்.. என்று மக்கள் தான் சொல்லணும்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

Simbu mass speech at Vendhu Thanindhathu Kaadu Audio Launch

VTK TRAILER BREAKING சிம்பு நீண்ட தாடி வளர்ப்பதன் ரகசியம் இப்போ புரியுதா.?

VTK TRAILER BREAKING சிம்பு நீண்ட தாடி வளர்ப்பதன் ரகசியம் இப்போ புரியுதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டிரைலர் இன்று இரவு சரியாக 9:00 மணிக்கு வெளியானது.

இந்தப் படத்தின் டிரைலர் இதுவரை வந்த சிம்பு படங்களிலிருந்து வித்தியாசமான படமாக உள்ளது.

ஆனால் வழக்கம் கௌதம் மேனனின் வாய்ஸ் ஓவர் டிரைலர் முழுவதும் இருக்கிறது.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் உருவாகும் கதையாக வளரும் என தெரிகிறது.

இந்த ட்ரெய்லர் முடிவில் சிம்பு நீண்ட தாடியுடன் அமர்ந்திருப்பது போல காட்சி உள்ளது.

அண்மைக்காலமாகவே சிம்பு நீண்ட தாடியுடன் தான் காணப்படுகிறார்.

எனவே வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் இந்த கெட்அப் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

கீழே ட்ரெய்லரை பாருங்கள்…

Hot In
#VTKTrailer playing NOW

https://t.co/wfoO81DEyg

A @menongautham
An @arrahman musical
@SilambarasanTR_ @SiddhiIdnani @IshariKGanesh @Ashkum19 @VelsFilmIntl @RedGiantMovies_

Vendhu Thanindhathu Kaadu will be released in two parts..

Part – 1 THE KINDLING releasing on Sept 15th !

Part – 2 will be transformation of gangstar.

#SilambarasanTR #VTKAudioLaunch #VTKTrailer

Secret behind Simbus beard in VTK movie Trailer

BREAKING தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை.; சிம்பு ஆனந்த கண்ணீர் விட வேண்டும்.. – கமல்

BREAKING தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை.; சிம்பு ஆனந்த கண்ணீர் விட வேண்டும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

விழாவின் இறுதியாக கமல்ஹாசன் பேசியபோது…

தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான்.

நல்ல படம் நாம் கொடுக்க வேண்டும். மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள்.

JUST IN பறந்து வந்த கமல் – சிம்பு.; நதிகளில் நீராடும் சூரியன் & வெந்து தணிந்தது காடு பற்றி கௌதம் மேனன் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

கமல்ஹாசன் நடித்த படங்களில் எந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என சிம்பு கேட்ட கேள்விக்கு.

நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும். ஆனால் ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது என்னுடன் தான் நடிக்க வேண்டும்.

இந்த படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.” என்று பேசினார் கமல்ஹாசன்.

Kamal talks about Simbu and Tamil Cinema

@SilambarasanTR_

#VendhuThanindhathuKaadu #KamalHaasan #SilambarasanTR

#கமல்ஹாசன்

#VendhuThanindhathuKaadu #KamalHaasan #SilambarasanTR

JUST IN பறந்து வந்த கமல் – சிம்பு.; நதிகளில் நீராடும் சூரியன் & வெந்து தணிந்தது காடு பற்றி கௌதம் மேனன் மாஸ் அப்டேட்

JUST IN பறந்து வந்த கமல் – சிம்பு.; நதிகளில் நீராடும் சூரியன் & வெந்து தணிந்தது காடு பற்றி கௌதம் மேனன் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான், ஐசரி கணேஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன், சிம்பு, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் பறந்து வந்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ஜீவா, ஆர்.ஜே பாலாஜி நடிகை திவ்யதர்ஷினி, ராதிகா, விக்ரம் பிரபு, கூல் சுரேஷ், வருண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடன குழுவினர் இணைந்து .”லூசு பெண்ணே…” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பாடகி ஸ்ரேயா கோஷல் மேடை ஏறி “மன்னிப்பாயா…” என்ற பாடலை பாடினார்.

அதன் பின்னர் கௌதம் மேனன் பேசியதாவது…

“எல்லாருடைய வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத பகுதி இருக்காது.

என்னுடைய உண்மையான கேரக்டர் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் கேரக்டர்.

சிம்புவுடன் பணிபுரிவது எப்போதுமே எதிர்பார்ப்பாக இருக்கும்.

வெந்து தணிந்தது காடு இந்த கூட்டணி இதோடு முடியாது. இது தொடரும்” என்றார்.

நதிகளில் நீராடும் சூரியன் படத்திற்கு முன்பு ஒரு கேங்ஸ்டர் கதையை இரண்டு மணி நேரம் சிம்புவிடம் சொன்னேன். படம் எப்போ பண்ணலாம்? என்று உடனே கேட்டார்.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் தலைமையில் ‘தள்ளி போகாதே..’ என்ற பாடலை மேடையில் இசைக் குழுவினர் ஆடினர்.

Kamal and Simbu participated in Vendhu Thanindhadhu Kaadu Audio launch

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் நாயகி சித்தி இதானி மேடையில் பேசியபோது…

“இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 200% உழைப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் பித்து (பைத்தியம்) பிடித்துப் போவார்கள்.” என்றார்.

அவர் இந்த பேச்சைக் கேட்டவுடன் சிம்பு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் கரவொலி எழுப்பினர்.

#VTKAudioLaunch

Siddhi Idnani says All of you may go mad after watching Vendhu Thanindhathu Kaadu

More Articles
Follows